Don't Miss!
- Lifestyle
இந்த 4 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? இரத்த சர்க்கரையால் தீவிரமான நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்!
- News
குடியரசுத் தலைவர் உரையில் "காசி தமிழ் சங்கமம்".. ஒற்றுமையை வெளிப்படுத்தியதாக திரௌபதி முர்மு புகழாரம்
- Finance
பட்ஜெட் 2023: இதற்கு தான் முக்கியத்துவம் தரனும் - ப. சிதம்பரம்..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Sports
"எங்களுக்கு நீங்க ஆர்டர் போடாதீங்க" பணிச்சுமை விவகாரம்.. பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் இடையே மோதல்- விவரம்
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
குக்வித் கோமாளி அஸ்வின் கைது? போஸ்டரால் பதறிப்போன ரசிகைகள் !
சென்னை : குக் வித் கோமாளி அஸ்வின் கைது? என்ற போஸ்டரால் ஒரு நிமிடம் ஆடிப்போன அஸ்வின் போஸ்டரை இன்ஸ்டா ஸ்டோரியில் ஷேர் செய்துள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வின் இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் பாலோவர்ஸ் வந்திருக்கின்றனர்.
கணவரை
பிரிந்து
வாழ்கிறாரா
சமந்தா....உண்மையாக
தானா
பெண்களின் சாக்லேட் பாயாக வலம் வரும் அஸ்வின், நேஷனல் கிரஷ் ஆகவும் இவருடைய பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

அஸ்வின் ஏராளமான ரசிகர்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி பலருக்கும் பிடிக்கும். அதுவும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒவ்வொரு கன்டஸ்டன்ட்களுக்கும் ஒரு விதமாக ரசிகர்கள் பட்டாளம் குவிந்திருக்கின்றன. அதில் பல பேர் இருந்தாலும் அதிகமாக ரசிகர்களைக் கவர்ந்து இழுத்ததில் அஸ்வினும் ஒருவர். இவருடைய சிம்பிளிசிட்டி இதுதான் இவருடைய வளர்ச்சிக்கு காரணம் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

சாக்லேட் பாய்
எப்போதும் சிரித்துக்கொண்டு க்யூட்டாக வரும் அஸ்வினுக்கு ஏராளமான ரசிகைகள். இன்ஸ்டாகிராமில் இவருக்கு 3 மில்லியன் பாலோவர்ஸ் வந்திருக்கின்றனர். அஸ்வினை அதிகமாக பின்தொடர்பவர்கள் பெண் ரசிகைகள். இப்படி பெண்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து இருக்கிறார் அஸ்வின். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்பு ஒரு சில திரைப்படங்களில் தலைகாட்டி சென்ற அஸ்வின் அந்த நிகழ்ச்சிக்கு பிறகுதான் பெண்களின் சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இப்போது நேஷனல் கிரஷ் ஆகவும் இவருடைய பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

அஸ்வின் கைது?
இந்நிலையில், அஸ்வின் கைது என்று சமூகவலைத்தளத்தில் பிரேக்கிங் நியூஸ் போஸ்டர் ஒன்று பரவியது. இந்த நியூஸால் பதறிப்போன அஸ்வின் என்ன செய்தி என்று பார்த்துள்ளார். அதில், பல பெண்களின் மனதை திருடியதற்காக நடிகர் அஸ்வின் குமார் கைது என்று கிண்டலாக பதிவிட்டுள்ளனர். இதைபார்த்த அஸ்வின் அந்த போஸ்டரை இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டிருக்கிறார். அஸ்வின் கடுப்பானாரோ இல்லையோ, இந்த போஸ்டரை பார்த்த பெண் ரசிகைகள், இப்படி கூடவா போஸ்டர் போடுவாங்க என்று கோபத்தின் உச்சத்தில் உள்ளனர்.

என்ன சொல்ல போகிறாய்
நடிகர் அஸ்வின் தற்போது ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'என்ன சொல்ல போகிறாய்' படத்தில் நடித்துவருகிறார். அஸ்வின் ஹீரோவாகவும் புகழ் நகைச்சுவை நடிகராகவும் நடித்து வருகிறார்கள்.

மீட் க்யூட்
நானி தற்போது 'மீட் க்யூட்' என்ற ஆந்தாலஜி படத்தை தயாரித்து வருகிறார். 5 கதைகள் கொண்ட ஆந்தாலஜியை அறிமுக இயக்குநர் தீப்தி கன்டா இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வந்தது. இதில் குக் வித் கோமாளி அஸ்வின் நாயகனாக நடித்து வருகிறார்.

அடிபொலி வைரலானது
சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் இசை மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்த இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்து இயக்கியுள்ள 'அடிபொலி' என்ற பாடலை ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இதில், அஸ்வின் குமார், குஷி நடிப்பில் வெளியாகியுள்ள இப்பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுவருகிறது.