வந்ததே 7 லட்சம் தான்… என்னம்மா இப்படி பண்றீங்க என்று புலம்பிய புகழ் !
சென்னை : கொடுக்குற தெய்வம் கூரையை பிச்சிக்கிட்டு கொடுக்கும்னு சொல்லுவாங்க அதுதான் நம்ம விஜய் டிவி புகழுக்கு நடந்து இருக்கிறது. 6 மணி நேரத்தில் 25 லட்சம் ரூபாய் சம்பாதித்ததாக இணையத்தில் செய்திகள் வேகமாக பரவின.
ஆத்தாடி...எம்புட்டு பணம் என்று நாம் வாயை பிளந்தோமோ இல்லையோ... புகழ், 25 லட்சமா என்று வாயை பிளந்துள்ளார்.
வந்ததே 7 லட்சம் தான், ஏய்யா என்ன கொடுமைப்படுத்துறீங்க என்று புகழ் கூறியுள்ளார்.

கலக்கப்போவது யாரு
புகழ் முதன்முதலாக விஜய் தொலைக்காட்சியில் கலக்கப் போவது யாரு எனும் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமாகியுள்ளார். அதன்பின்பு விஜய் டி.வியில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த புகழ் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

குக் வித் கோமாளி
விஜய் டிவியின் ஹிட் ரியாலிட்டி.ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 2 சீசன்களிலும் தனது சிறப்பான காமெடியின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்ட புகழ் இதன் மூலம் படவாய்ப்பு அதிகம் பெற்று வருகிறார். தற்போது பீஸ்ட், வலிமை, அருண்விஜய் 33, விஜய் சேதுபதி 46, சபாபதி, என்ன சொல்ல போகிறாய் என பல படங்களில் நடித்து வருகிறார்.

LOL எங்க சிரி பார்போம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த விவேக் கடைசியாக பங்கேற்ற ரியாலிட்டி ஷோ LOL எங்க சிரி பார்போம். இந்த நிகழ்ச்சியில் காமெடியன்கள் சிரிக்கக் கூடாது. மற்றவர்கள் தான் சிரிக்க வேண்டும். காமெடியன்கள் சிரித்தால் அவர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து பவர்ஸ்டார் சீனிவாசன் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து சதீஷ் குக் வித் கோமாளி புகழ், அபிஷேக் குமார் ஆகியோர் 6 மணி நேரம் சிரிக்காமல் பரிசுத் தொகை ரூ.25 லட்சத்தையும் வென்றுள்ளனர்.

வெறும் 7 லட்சம் தான்
இதையடுத்து, அனைத்து செய்திகளிலும் 6 மணிநேரத்தில் 25 லட்சம் வென்ற புகழ் என்று பரபரப்பாக பேசப்பட்டன. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகழ், எங்க சிரி பார்ப்போம் நிகழ்ச்சியில் ஜெயித்தேன். அந்தப் பரிசுத் தொகையை இருவருக்குப் பிரித்துக் கொடுத்தார்கள். மொத்த பரிசுத் தொகை ரூ.25 லட்சத்தில் எனக்கு ரூ.12.5 லட்சம் வந்தது. அதில் டி.டி.எஸ் பிடித்ததுப் போக மீதி ரூ.7 லட்சம் தான் வந்தது. அனைத்துச் செய்திகளிலும் ரூ.25 லட்சம் ஜெயித்தேன் என்று போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். என் கைக்கு வந்தது ரூ.7 லட்சம் மட்டுமே. அதையுமே ஊரில் வீடு கட்டக் கொடுத்துவிட்டேன் என்றார்.


Click it and Unblock the Notifications











