For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பாக்யலட்சுமி சீரியலில் குக் வித் கோமாளி பிரபலம் செய்த காரியத்தை பாருங்க

  |

  சென்னை : விஜய் டிவி.,யில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்யலட்சுமி. குடும்ப தலைவியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள சீரியல். இந்த சீரியலில் வரும் பாக்யா கேரக்டர், பல குடும்ப தலைவிகளின் ஃபேவரைட் என்றே சொல்லலாம்.

  விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டிருக்கும் இந்த சீரியல் கடந்த ஓராண்டாக விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வருகிறது. 2020 ம் ஆண்டு ஜுலை மாத இறுதியில் துவங்கப்பட்ட இந்த சீரியல் தற்போது 250 எபிசோட்களை கடந்துள்ளது.

  சூரரை போற்று இந்தி ரீமேக்...ரூ.30 கோடி சம்பளம் கேட்ட மாஸ் ஹீரோ சூரரை போற்று இந்தி ரீமேக்...ரூ.30 கோடி சம்பளம் கேட்ட மாஸ் ஹீரோ

  மூன்று வளர்ந்த பிள்ளைகளுக்கு அப்பாவான கோபி, மனைவியை உதாசீனப்படுத்துவிட்டு, ராதிகாவுடன் நெருக்கமாக பழகுகிறார். எதிர்பாராமல் ராதிகாவும், பாக்யாவும் நண்பர்களாகி விடுகிறார்கள். இருவரிடமும் மாட்டிக் கொள்ளாமல் வாயில் வந்த பொய்யை சொல்லி சமாளித்து வரும் கோபி, இரண்டாவது மகன் எழிலிடம் மாட்டிக் கொள்கிறார்.

  அம்ரிதா கேரக்டரில் ரித்திகா

  அம்ரிதா கேரக்டரில் ரித்திகா

  இதற்கிடையே பாக்யாவின் மூத்த மகன் செழியன் - ஜெனி இடையேயான பிரச்சனை, ராதிகாவுக்கும் அவரது கணவருக்கும் இடையேயான பிரச்சனை, ராதிகா - பாக்யா நட்பை பிரிக்க முயற்சிக்கும் கோபி என கதை விறுவிறுப்பாக செல்கிறது. இந்த சீரியலில் சினிமா டைரக்டராக முயற்சிக்கும் பொறுப்பான பாசக்கார இளைஞராக வரும் பாக்யாவின் இளைய மகன் எழிலின் தோழி அம்ரிதா கேரக்டரில் நடித்து வருகிறார் நடிகை ரித்திகா. திருமணமாகி சில நாட்களிலேயே கணவனை இழந்து, மாமனார் - மாமியாரை பராமரிக்கும் பெண்ணாக நடித்து வருகிறார்.

  குக் வித் கோமாளி பிரபலம்

  குக் வித் கோமாளி பிரபலம்

  ரித்திகா, விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் சஞ்ஜீவின் தங்கையாக நடித்து சின்னத்திரைக்கு அறிமுகமானார். சன் டிவி மற்றும் விஜய் டிவி.,யில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். தற்போது விரைவில் சன் டிவி.,யில் ஒளிபரப்பாக உள்ள சாக்லேட் என்ற சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 வில் போட்டியாளராகவும் கலந்து கொண்டுள்ளார் ரித்திகா.

  மனமுருகி பாடும் அம்ரிதா

  மனமுருகி பாடும் அம்ரிதா

  ஆகஸ்ட் 3 ம் தேதி ஒளிபரப்பான பாக்யலட்சுமி சீரியல் எபிசோட்டில், எழில், அம்ரிதாவின் குடும்பத்தை அழைத்துக் கொண்ட கோயிலுக்கு செல்கிறார். அங்கு அம்ரிதாவின் அப்பா என கூறப்படும் அவரின் மாமனார், அம்ரிதாவை ஒரு பாடல் பாடும்படி கேட்கிறார். உடனே அம்ரிதாவும், குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா என்ற பக்தி பாடலை மனமுருகி பாடுகிற காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

  எதுக்குப்பா இந்த பாட்டு சீன்

  எதுக்குப்பா இந்த பாட்டு சீன்

  எதற்காக சம்பந்தமே இல்லாமல் இந்த காட்சி என அனைவரும் கேள்வி கேட்க துவங்கி விட்டனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக நேற்று ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பாக்யலட்சுமி சீரியலில் தான் பாட்டு பாடும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அத்துடன் அவர் பதிவிட்ட கேப்ஷன் தான் அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.

  Rithika சொன்ன காதல் கதை Start பண்ணிட்டாங்க| BAKKIYALAKSHMI Ezhil Amirtha | FILMIBEAT TAMIL
  நீங்க பார்த்த வேலை தானா இது

  நீங்க பார்த்த வேலை தானா இது

  அப்படி அவர் என்ன பதிவிட்டுள்ளார் என்றால், நேற்றைய பாக்யலட்சுமி சீரியல் எபிசோட்டில் நான் பாடிய பாடல் என்னுடைய சொந்த குரலில் பாடியது. நான் பாடியது எனது ஃபேவரைட் பக்தி பாடல்களில் ஒன்று. முறைப்படி இசை பயின்ற பாடகர்கள், கர்நாடக இசை பிரியர்கள் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும். நான் முறைப்படி சங்கீதம் பயின்றவர் இல்லை. அதனால் தயவுசெய்து எனது தவறுகளை மன்னித்து விடுங்கள். இதை மக்கள் ரசித்திருப்பார்கள் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

  குவியும் லைக்குகள்

  குவியும் லைக்குகள்

  ரித்திகா பகிர்ந்துள்ள இந்த பதிவை இதுவரை கிட்டதட்ட 3 லட்சம் பேர் பார்த்து, லைக் செய்துள்ளனர். பலர் இவரின் குரலையும், பாடலையும் பாராட்டி கமெண்ட் செய்துள்ளனர்.

  English summary
  cook with comali fame rithika sung a her own voice in bagyalakshmi serial. she shares that video in instagram and asked apology for professional carnatic singers and music lovers. now, rithika signs in a new series titled chocolate which will air soon on sun tv.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X