வயிறு குலுங்க சிரிக்க ரெடியா இருங்க...மீண்டும் கலகலக்கும் குக் வித் கோமாளி
சென்னை : ரியாலிட்டி ஷோக்கள் நடத்துவதில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது விஜய் டிவி. பல ரியாலிட்டி ஷோக்களை தொடர்ந்து நடத்தி, அதில் வெற்றியும் கண்டுள்ளது.
விஜய் டிவி.,யில் நடத்தப்படும் பிக்பாஸ், குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர் போன்ற ரியாலிட்டி ஷோக்கள் மிகவும் பிரபலம். இவற்றில் வித்தியாசமான சமையல் நிகழ்ச்சியாக பலவரின் மனங்களையும் ஈர்த்தது, குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் இதுவரை 2 சீசன்கள் நடத்தப்பட்டுள்ளது.
முதல் சீசனில் வனிதா விஜயக்குமாரும், இரண்டாவது சீசனில் கனியும் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டனர். பிக்பாசை போல் இந்த நிகழ்ச்சியாலும் ஏராளமானோர் பிரபலமடைந்துள்ளனர். அப்படி கிடைத்த புகழின் மூலம் பலர் சினிமா வாய்ப்புக்களையும் பெற்றுள்ளனர்.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான அஸ்வின், புகழ், சிவாங்கி ஆகியோர் தற்போது முக்கிய படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். அதிலும் அஸ்வின் ஹீரோவாகி விட்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் நடித்த குட்டி பட்டாஸ் வீடியோ பாடல் அவரை இளம் பெண்களின் கனவு நாயகன் ஆக்கி விட்டது.

விரைவில் குக் வித் கோமாளி 3
இப்படி பலரையும் கவர்ந்த குக் வித் கோமாளியின் மூன்றாவது சீசன் விரைவில் துவங்கப்பட உள்ளது. இது தொடர்பான வேலைகள் தீவிரமாக நடந்து, வருகிறது. போட்டியாளர்கள் தேர்வும் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கு முன் 2 வது சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களை வைத்து கலகலப்பான நிகழ்ச்சி ஒன்றை நடத்த விஜய் டிவி திட்டமிட்டுள்ளது.

வாரந்தோறும் கலகலப்பு
வாரந்தோறும் ஞாயிற்றுகிழமைகளில் ஏதாவது ஒரு கொண்டாட்டத்தை நடத்தி வருகிறது விஜய் டிவி. வித்தியாசமாக அமைந்துள்ள இந்த கொண்டாட்டங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சி போன்று சமீபத்தில் சிங்கிள் பொண்ணுங்க நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தியது. அதைத் தொடர்ந்து கனா காணும் காலங்கள் ரீயூனியன் என அந்த சீரியலில் நடித்த நடிகர், நடிகைகளை மீண்டும் அழைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
Recommended Video

குக் வித் கோமாளி கொண்டாட்டம்
அந்த வரிசையில் வரும் ஞாயிற்றுக்கிழமை குக் வித் கோமாளி சீசன் 2 கொண்டாட்டம் என்ற கலகலப்பான நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சி, ஆகஸ்ட் 8 ம் தேதி பகல் 3 மணிக்கு விஜய் டிவி.,யில் நடைபெற உள்ளது. இதன் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரை சுமார் 5 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அத்துடன் வயிறு குலுங்க சிரிக்க ரெடியா இருங்க மக்களே என்ற கேப்ஷனும் பதிவிடப்பட்டுள்ளதால், கலகலப்பிற்கு பஞ்சமிருக்காது என்றே கூறப்படுகிறது.

யாரெல்லாம் வராங்க
இந்த நிகழ்ச்சியில் அஸ்வின், ஷகிலா, தீபா, பவித்ர லட்சுமி, ரித்திகா, ஷிவாங்கி, வெட்டிக்கிளி பாலா, மதுரை முத்து, மணிமேகலை உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். சமையலுடன் கலகலப்பான நிகழ்வுகளும் இந்த நிகழ்ச்சியில் நடத்தப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications











