அடுத்த என்டர்டைன்மென்ட் ரெடி...வந்தாச்சு குக் வித் கோமாளி சீசன் 3...ஹாட் அப்டேட் இதோ

சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அதிகமான ரசிகர்களைக் கொண்ட ரியாலிட்டி ஷோ என்றால் ஒன்று பிக்பாஸ், மற்றொன்று குக் வித் கோமாளி. இதில் கடந்த 105 நாட்களாக ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 ஷோ நேற்றோடு நிறைவடைந்து விட்டது.

இதனால் அடுத்த என்டர்டைன்மென்ட் என்ன, எப்போது துவங்குவார்கள் என அனைவரும் கேட்க துவங்கி விட்டனர். ஆனால் ரசிகர்களை கவருவதற்காக போட்டி போட்டுக் கொண்டு அடுத்தடுத்த நிகழ்ச்சிகளை தர விஜய் டிவி தயாராகி வருகிறது.

பிக்பாஸ் அல்டிமேட்

பிக்பாஸ் அல்டிமேட்

ஒரு புறம் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி விரைவில் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள், கோமாளிகள் பற்றிய தகவல்களும் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஓடிடி வெர்சன் ஜனவரி 30ம் தேதி துவங்கி, 24 மணி நேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளதாகவும், அதனை தானே தொகுத்து வழங்க உள்ளதாகவும் கமலே நேற்று பிக்பாஸ் ஃபினாலே மேடையில் அறிவித்து விட்டார்.

காத்திருக்க வேண்டாம்

காத்திருக்க வேண்டாம்

ஆனால் ஜனவரி 30க்கு இன்னும் 10 நாட்கள் காத்திருக்க வேண்டுமே என ரசிகர்களை உற்சாகப்படுத்த பிக்பாஸ் முடிந்த அடுத்த நாளே இன்று முதல் பிக்பாஸ் நேரத்தில், புதிய சீரியலான ஈரமான ரோஜாவே 2 மற்றும் செந்தூரப்பூவே சீரியல்களை ஒளிபரப்ப உள்ளது விஜய் டிவி. இதைத் தொடர்ந்து ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியையும் துவக்க போகிறார்கள்.

குக் வித் கோமாளி வந்தாச்சு

குக் வித் கோமாளி வந்தாச்சு

ஜனவரி 22ம் தேதி முதல் இரவு 8 மணிக்கு குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஷினி ஹரிபிரியன், கிரேஸ் கர்ணாஸ், வித்யுலேகா ராமன், அம்மு அபிராமி, தர்ஷன், மனோபாலா, சந்தோஷ் பிரதாப், ஆன்டனிதாசன் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொள்ள போகிறார்களாம். கோமாளிகளாக மணிமேகலை, சிவாங்கி, வெட்டுகிளி பாலா, மூக்குத்தி முருகன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

Recommended Video

Cook with Comali பெரிய Turning Point | Naai Sekar Pavithra Lakshmi & Sathish
இன்னும் இருக்கு

இன்னும் இருக்கு

இதனால் அடுத்தடுத்த என்டர்டைன்மென்ட்களுக்கு விஜய் டிவி ரசிகர்களும் தயாராகி வருகின்றனர். குக் வித் கோமாளி சீசன் 3 உடன், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் சேர்ந்து ஒளிபரப்பாக உள்ளதால் எதை பார்ப்பது என தெரியாமல் ரசிகர்கள் திக்கு முக்காட போகிறார்கள். இதற்கிடையில் கனா காணும் காலங்கள் போன்ற புதிய சீரியல்களையும் விஜய் டிவி துவங்க உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X