Don't Miss!
- News
இந்து மக்கள் கட்சியின் "சனாதன எழுச்சி பேரணி".. அனுமதிக்க முடியாது.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
வரலாற்றை மாற்ற விரும்பிய மணிமேகலை.. அட்வான்டேஜ் டாஸ்கில் கோலாகலம்!
சென்னை : விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரம்மாண்டமான இறுதிப்போட்டி இன்றைய தினம் துவங்கி நடைபெற்று வருகிறது.
பிற்பகல் 3 மணிக்கு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் குக்குகள் மற்றும் கோமாளிகள் இணைந்து கலக்கல் டாஸ்க்கை எதிர்கொண்டுள்ளனர்.
அட்வான்டேஜ் ரவுண்டில் சிறப்பான வகையில் வித்தியாசமான டாஸ்கை தற்போது செய்து வருகின்றனர்.
நயன்தாரா
திருமண
வீடியோ..நெட்ஃபிக்ஸ்
என்ன
திருமணம்
வீடியோ
வெளியிடும்
தளமா?
கிண்டலடித்த
நெட்டிசன்ஸ்!

குக் வித் கோமாளி சீசன் 3
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் பிரம்மாண்ட இறுதிப்போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ருதிகா, தர்ஷன், அம்மு அபிராமி, வித்யூலேகா, கிரேஸ் கருணாஸ், சந்தோஷ் பிரதாப் என 6 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

அட்வான்டேஜ் ரவுண்ட்
குக்குகள் மற்றும் அவர்களது கோமாளிகள் காம்பினேஷன் முடிந்து, அட்வான்டேஜ் ரவுண்டில் வித்தியாசமான டாஸ்க்கை அவர்கள் தற்போது எதிர்கொண்டு வருகின்றனர். கலக்கலான கமெண்ட்டுகள், பல நையாண்டிகள் என கலக்கலாக இந்த நிகழ்ச்சி தற்போது சென்று வருகிறது.

சாக்லேட் சிரப் -ஜிலேபி மாவு
சாக்லேட் மற்றும் ஜிலேபி மாவை கொண்டு எழுத்துக்களை உருவாக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அதை மிகவும் சிரத்தையுடனும் அட்டகாசமாகவும் குக்குகள் மற்றும் கோமாளிகள் செய்து வருகின்றனர். சாக்லேட் சிரப்பில் பட்டுக்குட்டி தாமு அப்பா மற்றும் ஜாங்கிரி மாவில் குக் வித் கோமாளி என வார்த்தைகளை அவர்கள் உருவாக்க முயற்சி மேற்கொண்டனர்.

வெற்றி பெற்ற அம்மு அபிராமி
இந்த டாஸ்க்கை விரைவாக செய்து இந்த ரவுண்டில் வெற்றிப் பெற்றார் அம்மு அபிராமி. இவருடன் கோமாளியாக இருந்த புகழ் இந்த டாஸ்க்கை விரைவாக இவர் மேற்கொள்ள மிகவும் உதவியாக இருந்தார். ஆனாலும் இதை வம்பிழுக்கும் வகையில் நடுவர்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் அதை மாற்றினர்.

மணிமேகலை சபதம்
இதனிடையே இந்த டாஸ்கின் இடையில் முந்தைய இரு சீசன்களில் வெற்றியாளர்களின் கோமாளியாக தான் இல்லை என்றும் அதை இந்த சீசனில் தான் மாற்றி எழுதப்போவதாக கோமாளி மணிமேகலை சபதம் போட்டார். அதாவது தான் கோமாளியாக இருந்தால் அவர்கள் வெற்றி பெறுவது கடினம் என்பது போல அவர் கலாய்த்தார். அவர் தற்போது சந்தோஷ் பிரதாப்பிற்கு கோமாளியாக மாறியுள்ளார்.