twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாயில பிளாஸ்த்ரி.. காதுல ஹெட்போன்ஸ்.. எப்படி சமாளிக்கப் போறாங்க காம்போ டாஸ்கை?

    |

    சென்னை : விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரம்மாண்டமான இறுதிப்போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது.

    முதலில் நடைபெற்ற அட்வான்டேஜ் ரவுண்டில் சிறப்பாக செயல்பட்டு அம்மு அபிராமி மற்றும் புகழ் வெற்றி பெற்றனர்.

    அடுத்ததாக காம்போ ரவுண்டில் ஒண்ணே கால் மணிநேரத்தில் 3 பொருட்களை கொண்டு சிறப்பான டிஷ்களை அவர்கள் செய்து வருகின்றனர்.

    விஜய் ஆண்டனி பர்த்டேக்கு சூப்பர் ட்ரீட்: மிரட்டலா வெளியான ரத்தம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்விஜய் ஆண்டனி பர்த்டேக்கு சூப்பர் ட்ரீட்: மிரட்டலா வெளியான ரத்தம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

    குக் வித் கோமாளி சீசன் 3

    குக் வித் கோமாளி சீசன் 3

    விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் 6 போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் கலந்துக் கொண்டு கலக்கி வருகின்றனர். முதலில் அட்வான்டேஜ் ரவுண்டில் சிறப்பாக செயல்பட்டு அம்மு அபிராமி வெற்றிப் பெற்றார். அவரது கோமாளியாக புகழ் செயல்பட்டார்.

    காம்போ டாஸ்க்

    காம்போ டாஸ்க்

    இதையடுத்து இரண்டாவது ரவுண்ட் காம்போ டாஸ்க்காக அமைந்தது. இதில் ஒவ்வொரு குக்கிற்கும் 3 பொருட்கள் கொடுக்கப்பட்டது. இதை கோமாளிகள் தேர்ந்தெடுத்த நிலையில், அதிலும் ட்விஸ்ட்கள் கொடுக்கப்பட்டது. சிறிய ரக புஷ்கார்களில் சென்று கோமாளிகள் தேவையான பொருட்களை எடுத்து வர வேண்டும் என்று டாஸ்க் வைக்கப்பட்டது.

    வாயில் பிளாஸ்திரி -காதில் ஹெட்போன்கள்

    வாயில் பிளாஸ்திரி -காதில் ஹெட்போன்கள்

    இதனிடையே குக்குகள் வாயில் பிளாஸ்திரிகள் ஒட்டப்பட்டன. அதேபோல கோமாளிகள் காதில் ஹெட்போன்கள் வைக்கப்பட்ட நிலையில், குக்குகள் தங்களுக்கு தேவையான பொருட்களை போர்ட்டில் வரைந்து கோமாளிகளுக்கு புரிய வைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. வாய் தவறி பேசிவிட்டால் அவர்கள் ட்ரெட்மில்லில் ஒரு நிமிடம் நடக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

    சிகப்பு முள்ளங்கியில் ஐஸ்கிரீம்

    சிகப்பு முள்ளங்கியில் ஐஸ்கிரீம்

    இந்த டாஸ்கில், சிக்கன், பீட்ரூட், மட்டன், மஷ்ரூம் என குக் செய்வதற்கு பொருட்கள் கொடுக்கப்பட்டன. மூன்றாவது பொருளையும் டிராகனை வைத்து அவர்கள் தேர்ந்தெடுத்தனர். அதில் சிகப்பு முள்ளங்கி, பர்ப்பிள் கோஸ் உள்ளிட்டவற்றை அவர்கள் தேர்ந்தெடுத்தனர். இதில் சிகப்பு முள்ளங்கியை வைத்து ஸ்ருதிகா ஐஸ்கிரீம் செய்தது நடுவர்களை வெகுவாக கவர்ந்தது.

    சந்தோஷிற்கு தாமு சல்யூட்

    சந்தோஷிற்கு தாமு சல்யூட்

    சந்தோஷ் பிரதாப்பின் டிஷ்ஷை பார்த்து நடுவர் தாமு அவருக்கு எழுந்து நின்று சல்யூட் செய்தார். இந்த ரவுண்டில் தர்ஷன் மோசமான கமெண்ட்ஸ்களை பெற்றார். இந்த போட்டியில் 40 மார்க்குகளுக்கு 36 பெற்று ஸ்ருதிகா முதலிடத்தை பெற்றிருந்தார். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை கிரேஸ் மற்றும் சந்தோஷ் பெற்றிருந்தனர். முதல் ரவுண்டில் முதலிடத்தை பெற்ற அம்மு அபிராமி இதில் 6வது இடத்தையே பெற முடிந்தது.

    English summary
    Cook with comali season 3 grand finale - Shruthika gets first place in Combo round
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X