Don't Miss!
- Lifestyle
உங்க ராசிப்படி காதலில் நீங்கள் எந்த விஷயத்தில் சொதப்புவீங்களாம் தெரியுமா? உடனே கரெக்ட் பண்ணிக்கோங்க!
- Technology
Mars: செவ்வாய் கிரகத்தில் செல்பி! புகைப்படத்தை வெளியிட்டு அசத்திய நாசா! போட்டிக்கு நீங்களும் வரலாம்!
- News
"பூப்போட்டாராமே".. ஓபிஎஸ்ஸூக்கு "வெள்ளைப்பூ" தந்த பேச்சியம்மாள்.. அதுவும் 3 முறை.. ஹேப்பியில் பன்னீர்
- Automobiles
இன்னும் என்ன யோசனை... ரொம்ப நாளாக எதிர்பார்த்த டீசல் டொயோட்டாவிற்கான புக்கிங் மீண்டும் தொடங்கியிருக்கு!
- Finance
அதானி குழுமத்தின் டாப் 5 நிறுவனங்களின் கடன் எவ்வளவு.. PSU வங்கிகள், தனியார் வங்கிகளில் எவ்வளவு?
- Sports
கோலிவுட்டில் கால்பதித்தார் தோனி.. முதல் தயாரிப்பின் அறிவிப்பு வெளியானது.. நடிகர்கள் யார் தெரியுமா??
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
டைட்டிலை தட்டித் தூக்கிய குக்.. சிறப்பாக நடந்து முடிந்த குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி!
சென்னை : விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் பிரம்மாண்டமான இறுதிப்போட்டி ரசிகர்களை கவர்ந்து சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
Recommended Video
முதலில் நடைபெற்ற அட்வான்டேஜ் ரவுண்டில் அம்மு அபிராமியும் அடுத்தடுத்த காம்போ மற்றும் ட்ரீம் காம்போ ரவுண்ட்களில் ஸ்ருதிகாவும் வெற்றி பெற்றனர்.
இதையடுதது 100க்கு 96 மார்க்குகளை பெற்று ஸ்ருதிகா டைட்டிலை தட்டித் தூக்கினார்.
அதிக
சம்பளம்
வாங்கும்
ஹீரோவும்
நான்
தான்..
அதிக
வரி
கட்டுற
நபரும்
நான்
தான்..
டிரெண்டாகும்
ரஜினி!

குக் வித் கோமாளி சீசன் 3
விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி கடந்த 20 வாரங்களாக நடைபெற்று இன்றைய தினம் இறுதிக்கட்டத்தை அடைந்தது. இன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியின் பிரம்மாண்டமான இறுதிப்போட்டி ரசிகர்களை கவரும்வகையில் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் 6 போட்டியாளர்கள் கலந்துக் கொண்டனர்.

6 போட்டியாளர்கள்
நேரடியாக அம்மு அபிராமி, ஸ்ருதிகா, தர்ஷன் மற்றும் வித்யூலேகா ஆகியோர் இந்த இறுதிப்போட்டியில் நுழைந்தநிலையில், வைல்ட் கார்ட் மூலமாக கிரேஸ் கருணாஸ் மற்றும் சந்தோஷ் பிரதாப் ஆகியோர் நுழைந்தனர். இவர்கள் 6 பேரும் சேர்ந்து இன்றைய தினத்தின் இறுதிப்போட்டியை சிறப்பாக மாற்றினர்.

3 ரவுண்டுகள்
மொத்தமாக நடைபெற்ற மூன்று ரவுண்டுகளில் அனைத்து குக்குகளும் சிறப்பான பல டிஷ்களை செய்து பரிமாறினர். குறிப்பாக 1.45 நிமிடங்கள் இடைவெளியில் நடைபெற்ற மூன்றாவது ரவுண்ட் சிறப்பான கவனத்தை பெற்றது. இதேபோல இரண்டாவது ரவுண்ட் 1.15 நிமிடங்கள் இடைவெளியில் நடைபெற்றது.

கான்செப்டில் கலக்கிய ஸ்ருதிகா
குறிப்பாக 3வது ரவுண்ட் மிகவும் சிறப்பாக அமைந்தது. இந்த ரவுண்டில் முதலாவதாக வந்த ஸ்ருதிகா மிகவும் சிறப்பான கான்செப்ட்டுடன் அனைவரையும் கவர்ந்தனர். நோ வார் என்ற கான்செப்ட்டில் இந்தியா -பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா -உக்ரைன் டிஷ்களை கலந்து, உணவு மட்டுமே அனைவரையும் இணைக்கும் என்ற கான்செப்ட்டில் அவர் நடுவர்களை கவர்ந்தார். மேலும் சுற்றுச்சூழலை காப்பது குறித்து அவரது இரண்டாவது டிஷ் காணப்பட்டது.

100க்கு 96 மார்க்குகள்
இரண்டாவது மற்றும் மூன்றாவது ரவுண்டுளில் 40 மற்றும் 60 மதிப்பெண்களுக்கு போட்டி நடைபெற்ற நிலையில், ஸ்ருதிகா இந்த இரண்டு ரவுண்டுகளில் மொத்தமாக 96 மதிப்பெண்களை அவர் பெற்றார். குறிப்பாக மூன்றாவது சுற்றில் அவரது கான்செப்டை பார்த்த தாமு, அவர் சிறியவராக இல்லாமல் இருந்திருந்தால் அவரது காலில் விழுந்திருப்பேன் என்று நெகிழ்ச்சியாக பேசினார்.

எழுந்து நின்று சல்யூட்
தொடர்ந்து தர்ஷனும் தன்னுடைய டிஷ்களின்மூலம் செப்களை சிறப்பாக கவர்ந்தார். அவரது ஆப்பிள் டெசர்ட்டிற்கு வெங்கடேஷ் பட், எழுந்து நின்று சல்யூட் அடித்தார். அவரிடம் அந்த டிஷ்ஷை தனக்கும் கற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டார். தான் பல ஆண்டுகள் அனுபவம் பெற்றுள்ள போதிலும் அவர்களிடம் கற்றுக் கொள்ள அதிகமான விஷயங்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

காணாமல் போன அனுபவம்
இந்த 3வது ரவுண்டில் பரிமாறப்பட்ட அனைத்து போட்டியாளர்களின் டிஷ்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். தங்களுடைய 40 ஆண்டுகால அனுபவம் இந்த 6 பேரின் டிஷ்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டதாகவும் அவர் பாராட்டினார். இந்த 6 பேருமே வெற்றியாளர்கள்தான் என்றும் ஆனால் வெற்றியாளர்களை கணிக்க வேண்டிய தேவை உள்ளதால் அதை செய்வதாகவும் நடுவர்கள் தெரிவித்தனர்.

டைட்டிலை வென்ற ஸ்ருதிகா
மேலும் 6 பேருக்கும் மெடல்களை அணிவித்து நடுவர்கள் அழகு பார்த்தனர். இதையடுத்து ஸ்ருதிகா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இதைக்கேட்ட அவர் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். அந்த தருணத்தில் அவரது கணவரும் அங்கு வந்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். உடனிருந்த போட்டியாளர்கள், குக்குகள் அவரை ஆரத்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ரன்னர் அப்கள்
தொடர்ந்து முதல் ரன்னர் அப்பாக தர்ஷனும் இரண்டாவது ரன்னர் அப்பாக அம்மு அபிராமியும் அறிவிக்கப்பட்டனர். ஸ்ருதிகாவிற்கு 5 லட்சத்திற்கான காசோலை மற்றும் பரிசு வழங்கப்பட்டது. இதேபோல தர்ஷனுக்கு 3 லட்சத்திற்கான காசோலை மற்றும் பரிசு வழங்கப்பட்டது. அம்மு அபிராமிக்கு ஏராளமான பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

கோமாளிக்கும் பரிசுத்தொகை
இதேபோல ஸ்ருதிகாவுடன் இணைந்து செயல்பட்ட புகழிற்கு ஒரு லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. ஆனால் தான் இந்த சீசனில் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்காத நிலையில், அந்த பரிசை அவர் பாலாவிற்கு வழங்கி கௌரவித்தார். இதுமட்டுமில்லாமல் பாலாவிற்கு இந்த நிகழ்ச்சியில் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை தனியாக வழங்கப்பட்டது.

போட்டியாளர்களுக்கு பரிசுகள்
மற்ற போட்டியாளர்களுக்கும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து சிறிது நேரம் நிகழ்ச்சியை ஹோஸ்ட் செய்த மணிமேகலையும், போட்டியாளர்களின் கொண்டாட்டத்தில் பங்கேற்றார். வழக்கம்போல போட்டியாளர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய நடுவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அன்பை வெளிப்படுத்திய போட்டியாளர்கள்
தொடர்ந்த அந்த அரங்கமே மிகவும் நெகிழ்ச்சியானதாக மாறியது. ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி தங்களது அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர். தாங்கள் இத்தனை வாரங்களாக பயன்படுத்திய மேடைகளை அவர்கள் தொட்டு கும்பிட்டனர். தொடர்ந்து அந்த இடத்தில் இனம்புரியாத ஏக்கம், அந்த அரங்கத்தைவிட்டு பிரியும் ஏக்கம் வெளிப்பட்டது. இந்த ஏக்கம் ரசிகர்களையும் விட்டு வைக்கவில்லை.