இரட்டிப்பு மகிழ்ச்சியில் சிவாங்கி... நேரலையில் ரசிகர்களுக்கு நன்றி !
சென்னை : குக் வித் கோமாளி புகழ் சிவாங்கியை இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் ஃபாலோவர்கள் பின்தொடர்கின்றனர்.
இதற்கு நன்றி கூறும் விதமாக இன்ஸ்டாகிராமில் நேரலையில் பேசிய சிவாங்கி, கடவுளுக்கும், ரசிகர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் நன்றி என்றார்.
4 மில்லியன் என்ற சாதனையை தொட்ட சிவாங்கிக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

வெகுளியான சிவாங்கி
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு பாடகராக கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார் சிவாங்கி. பின்னர் சூப்பர் சிங்கர் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டு பாடினார். அந்த நிகழ்ச்சிகளில் அவரது வெகுளித்தனமான பேச்சு அனைவரையும் சிரிப்பூட்டியது.

குக்வித் கோமாளியில்
இதையடுத்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு கோமாளியாக வந்தார். இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன் முடிவடைந்த நிலையில் மூன்றாவது சீசன் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமே அதில் வரும் கோமாளிகள் தான்.

40 லட்சம் ஃபாலோவர்ஸ்
சிவாங்கிக்கு இன்ஸ்டாகிராமில் 40 லட்சம் ஃபாலோயர்கள் இணைந்து இருக்கின்றனர். அதாவது 4 மில்லியன் ஃபாலோயர்கள் அவரை பின்தொடர்கின்றனர். இதற்கு நன்றி கூறும் விதமாக இன்ஸ்டாகிராமில் நேரலையில் பேசிய சிவாங்கி, கடவுளுக்கும், ரசிகர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் நன்றி.. மேலும், இன்னும் பல தூரம் செல்லவேண்டும் என்று அவர் கூறினார்.

கண்டிப்பா இல்லை
இதையடுத்து, பல ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறீர்களா என்று கேட்டனர். இதற்கு பதிலளித்த சிவாங்கி, கண்டிப்பாக இல்லை என்றார். மேலும் , என்னை 100 நாள் பார்த்தால் உங்களுக்கே கஷ்டமாக போய்விடும் என்று சிரித்துக்கொண்ட பதிலளித்தார். மேலும், முதல் முறை தான் ஆங்கரிங் செய்யப்போகிறேன். நான் அவ்ளோ பெரிய ஆங்கர் எல்லாம் இல்லை. ஆனாலும் ஏதோ பண்ண முடிந்தால் பண்ணுவேன் என்றார்.

சினிமாவில் வாய்ப்பு
சிவாங்கி, சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் படத்திலும், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஆர்டிகிள் 15 தமிழ் ரீமேக்கிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். விஜய் சேதுபதி, அருண் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











