பெண்களை தொட்டு தொட்டு பேசுகிறாரா? புகழ் மீதான விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த மனைவி!
சென்னை: விஜய் டிவியில் ரசிகர்கள் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி உள்ளது. ஐந்து சீசன்கள் நடந்து முடிந்த நிலையில், 6ம் சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. இதில், புது கோமாளிகளாக பூவையார், பிக் பாஸ் சௌதர்யா இருந்தனர். மேலும், போட்டியாளர்களாக கஞ்சா கருப்பு, ஷபானா, பிரியா ராமன், ஜாங்கிரி மதுமிதா, லட்சுமி ராமகிருஷ்ணன், ராஜு ஜெயமோகன், உமர் லத்தீப், சுந்தரி அக்கா, நந்தகுமார் என மொத்தம் 10 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். நடுவர்களாக செஃப் தாமு, செஃப் கெளஷிக், மாதம்பட்டி ரங்கராஜ் இருந்தனர்.
ஒவ்வொரு வாரமும் நடந்த சமையல் போட்டியில் ஒவ்வொருவராக வெளியேறிய நிலையில், முதல் ஆளாக ஷபானா பைனலுக்கு சென்றார். அதைத்தொடர்ந்து, லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் ராஜு மோகன் மற்றும் உமைர் என நான்கு பேர் பைனலுக்கு சென்றனர். இவர்களுக்கு நடந்த கடுமையான இறுதிப்போட்டியில், நடிகர் ராஜு மோகன் 6வது சீசன் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு டைட்டில் வின்னர் பட்டமும், ரூ.5 லட்சம் பரிசுத்தொகை மற்றும் சில பரிசுகளும் வழங்கப்பட்டன. இரண்டாவது ரன்னர் அப் ஆக ஷபானா தேர்வானார், அவருக்கு ரூ. 2 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டிடி கலந்து கொண்டார்.

சரியான பதிலடி: இந்நிலையில், இந்த பைனல் நிகழ்ச்சியில் நடிகர் புகழின் மனைவி பென்ஸியா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், புகழ் பெண்களை தொட்டி பேசுகிறார் என்கிற விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்தார். அதில், எனது கணவர் புகழ், பெண்களை தொட்டு தொட்டு பேசுகிறார் என்ற குற்றச்சாட்டு தான் அதிகம் வருகிறது. ஒரு நிகழ்ச்சியை நிகழ்ச்சியாக பார்க்க வேண்டும், அப்படியே, அவர் பெண்களை தொட்டி பேசினாலும், பிரச்சனை என்பது யாருக்கு என்றால் எனக்கும், சம்மந்தப்பட்ட பெண்ணுக்கும் தான். என் கணவர் பற்றி எனக்கு நன்றாக தெரியும், தவறான நோக்கத்துடன் பழகும் எந்த ஒரு ஆணிடமும் ஒரு பெண் நட்பாக பழக மாட்டாள். அப்படி இருக்கும் போது முதல் சீசன் முதல் இப்போது வரை இவருடன் பழகிய அனைத்து பெண்களும் இவருடன் நட்பாக உள்ளார்கள், இதை வைத்து பார்த்தால் ஒரு ஆணின் குணம் எப்படி என்று தெரியும் என அவர், தனது கணவர் குறித்த விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ளார். நடிகர் புகழ் கோயம்புத்தூரைச் சேர்ந்த பென்ஸியா என்பவரை 2022 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ரிதன்யா என்ற பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











