Don't Miss!
- News
"தமிழ்நாட்டின் நலன் உங்கள் கையில்" அதிமுக தொண்டர்களை அலர்ட் செய்யும் திருமாவளவன்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ஷிவாங்கிய கொஞ்சுறே.. என் கிட்ட கத்தியை காட்டறே.. கோச்சுக்கிட்ட மணிமேகலை!
சென்னை: குக் வித் கோமாளி மூலமாக பலபேர் மனதை கவர்ந்த அஸ்வினுக்கு ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஷிவாங்கியும், மணிமேகலையும் மோதிக் கொள்வது சுவாரஸ்யமாக இருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் தற்போது அதிகமாக இளைஞர்கள் முதல் குழந்தைகள் வரை பலரும் பார்க்கும் நிகழ்ச்சியாக இருப்பது குக் வித் கோமாளி மட்டும்தான்.
இந்த நிகழ்ச்சிக்காக பலர் காத்திருக்கின்றனர் . அந்த அளவுக்கு மக்களை இது ஈர்த்துள்ளது. காரணம் இதில் பங்கேற்கும் சில போட்டியாளர்கள்.

கோமாளிகள் கூட்டம்
சனி மற்றும் இரவு இரண்டு நாட்களில் மட்டுமே ஒளிபரப்ப படுவதால் இதற்கான பிரமோக்களை அடிக்கடி வெளியிட்டு வரும் விஜய் டிவியில் இதனை பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அதிகமாக அனைவரின் மனதை கவர்ந்த ஜோடியாக அஸ்வின் மற்றும் ஷிவாங்கி தான் இருந்து கொண்டிருக்கின்றனர்.

சாக்லேட் பாய் அஸ்வின்
அதிலயும் அஸ்வினுக்கு என்று பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் சாக்லேட் பாயாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். பல பெண்கள் இவர் மீது கிரஸாக இருந்து வருகின்றனர் .ஆண்களும் ரசிக்கும் ஆணழகனாக தான் சிரிப்பால் அனைவரையும் வசியப்படுத்தி வருகிறார்.

ஷிவாங்கி
இவரும் ஷிவாங்கியும் சேர்ந்து அடிக்கும் லூட்டி பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு இவர் அடிக்கடி மணிமேகலையுடன் சண்டை போடுவதை பார்த்து வயிறு வலிக்க சிரித்து வருகின்றனர். ஷிவாங்கியும் அஸ்வினும் பேசிக்கொண்டிருக்கும் போது அடிக்கடி இவர்களுக்கு இடையில் வந்து சேட்டை செய்யும் மணிமேகலையை ரசிக்காதவர்கள் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

ஒரே கலாய்தான்
எப்போதுமே ஷிவாங்கியை கலாய்த்து தள்ளிக் கொண்டிருக்கும் இவர் அஸ்வினையும் விடுவதில்லை .இந்த வார புரோமோ வில் கூட அஸ்வினும் ஷிவாங்கியும் பேசிக்கொண்டிருக்கும்போது இவர் இடையில் வந்து அஸ்வினை கலாய்க்க அதற்கு பதிலாக அவர் கத்தியை காட்டி மிரட்டி கொண்டிருக்கிறார் ஆனாலும் அசராத மணிமேகலை என்ன இது ஷிவாங்கியிடம் மட்டும் கொஞ்சி கொஞ்சி பேசி கொண்டிருக்கிற என்கிட்ட மட்டும் கத்தியை தூக்கி காட்டுற என்று அவரிடம் வில்லத்தனம் பண்ணுகிறார் .

கொஞ்சல் பேச்சு
அதற்கு அஸ்வினும் உன்ன பார்த்தாலே அப்படித்தான் தோன்றுகிறது என்று கூறியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு கோமாளிகளும் ஒவ்வொரு ரகமாக இருந்தாலும் மணிமேகலை தன்னுடைய சேட்டை தனத்தால் அழகான கோமாளியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுபோலதான் ஷிவாங்கிக்கும் மிக பெரும் ரசிகர்கள் பட்டாளமே தற்போது உருவாகி விட்டது. அதனால்தான் அவர் யூடியூப் சேனல் ஓபன் பண்ணாலும் அவரது பாலோவர்ஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர் .

யூடியூப் ஆரம்பிச்சாச்சு
அவர் ஒரு பாடகராக இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் அறிமுகமாகி பல பேரை சிரிக்க வைத்து பலருக்குள் இருக்கும் குழந்தை தனத்தை வெளிக்கொண்டு வந்து கொண்டிருக்கிறார். இவரைப் பற்றி நெட்டிசன்கள் கலாய்த்தாலும் கவலைப்படாமல் எப்போதுமே ஜாலியாக அஸ்வின் பின்னாடி சுற்றிக் கொண்டிருக்கிறார். இவர்கள் இந்த நிகழ்ச்சியில் காதலர்களாகவும் அடுத்தவர்களை என்டர்டைன்மென்ட் பண்ணும் நபர்களாக இருந்தாலும் அஸ்வினுக்கு எப்போதுமே ஷிவாங்கியை பார்த்தால் அதிசயமாகத்தான் இருக்கிறதாம்.

செம சுட்டி
முதல்முறை ஷிவாங்கி யை பார்க்கும் போது இப்படியெல்லாம் யாரும் இருப்பார்களா என்று அதிர்ச்சி அடைந்தாராம். அந்தளவிற்கு முதல் முறையிலேயே ஷிவாங்கியின் சுட்டி தனத்தைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார். ஆனால் மணிமேகலையிடம் அப்படி இல்லையாம். எது சொன்னாலும் அதற்கு வில்லங்கமாக பேச தான் தோன்றுகிறதாம். அது என்ன என்று தான் எனக்கே தெரியவில்லை எப்போதுமே அவரிடம் மட்டும் சண்டைபோட தோன்றுகிறது என்று கூறியிருக்கிறார்.

சீரியல்கள் அலுத்துப் போச்சு
பலர் சீரியல்கள் பார்த்து அலுத்துப் போயிருக்கும் இந்த நேரத்தில் இந்த மாதிரி ஜாலியான ஒரு நிகழ்ச்சியை பார்ப்பதற்காக மீண்டும் டிவி முன்பு தவம் கிடக்க ஆரம்பித்துவிட்டனர். சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் இதில் முழுக்க காமெடியும் கலகலப்பு மட்டுமே இருப்பதால் குழந்தைகளும் இதை விரும்பி பார்க்கின்றனர். அதுவும் இந்த வாரத்தில் அனைத்து கோமாளிகளும் குழந்தைகளுக்கு பிடித்த கார்ட்டூன் நடிகர்களாக மாறி இருப்பதால் அவர்களும் என்ஜாய் பண்ணி வருகிறார்கள்.