twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மதுரைக்காரய்ங்க நாங்க நண்டை நோண்டி ஆம்லெட் போடுவோம்ல...

    |

    சென்னை: இந்த வாரம் அவரவர் ஊர் உணவுக் குறித்த விவாத வாரம். இதில் பல ஊர்களை சார்ந்தவர்களும் தங்களது ஊர் உணவுக் குறித்த பெருமையை பேசி வருகிறார்கள். வரும் ஞாயிறு மதியம் விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி பாருங்கள்.

    காரம் இல்லாமல் நான் வெஜ் சாப்பிட்டா எப்படி இருக்கும்னு நீயா நானா நிகழ்ச்சியை நடத்தும் கோபிநாத் கேட்டார். கண்டிப்பா நல்லா இருக்காது சார் என்று சொன்னார் ஒரு பெண். இப்படி தங்கள் ஊரின் உணவு குறித்தும், உணவு பற்றிய பழமொழி குறித்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

    தின்னு கெட்டவன் தஞ்சாவூர்காரன்னு பழமொழி இருக்கு சார் என்று ஒருவர் சொன்னார். இதே பழமொழி ஒரு குடும்பத்தைப் பார்த்து இந்த குடும்பம் தின்னு கெட்ட குடும்பம்னும் சொல்லுவார்கள். அதாவது அந்த குடும்பம் ஆ ஊன்னா விதம் விதமா சமைச்சே சொத்தை அழிச்சு இருப்பாங்கன்னு அர்த்தம்.

    சுள்ளுன்னு இருக்காது

    சுள்ளுன்னு இருக்காது

    மதுரையில் காரம் இல்லாம சாப்பிட்ட நாக்குக்கு சுள்ளுன்னே இருக்காது என்று ஒரு இளம்பெண் சொன்னார். காரம் சாப்பிட்டா வீரம் வரும்.. அப்புறம் அல்சர் வரும்..அதனால் உடலுக்கு கேடு.. இதெல்லாம் பரவாயில்லையா என்று இன்னொரு இளம்பெண் கேட்டார். நடுத்தர வயது மதுரை பெண் இதைக்கேட்டு கொஞ்சம் ஆவேசம் அடைந்தார். இவர்தான் நான் வெஜ் காரம் இல்லாமல் சாப்பிட்டால் கண்டிப்பா நல்லா இருக்காது என்று சொன்னவர்.

    கறியில் வடை அடை

    கறியில் வடை அடை

    அவர் ஆவேசமாக நாங்க கறியவே வடை சுட்டு சாப்பிடுவோம்.. கறியில் அடை சுட்டு சாப்பிடுவோம்... நண்டை நோண்டி ஆம்லெட் செய்து சாப்பிடுவோம் என்று மற்றவர் சிரிக்க சிரிக்க பேசினார். நிகழ்ச்சியை நடத்தும் கோபிநாத்தும் சிரித்தார்.அந்த பெண்மணி எப்படி எதைச் செய்து சாப்பிட்டாலும் ஆட்டோமெட்டிக்கா உடம்புல ஆப்டாகிப் போயிரும்ல என்று சொன்னார்.

    பழமொழி சொலவடை

    பழமொழி சொலவடை

    தின்னு கெட்டவன் தஞ்சாவூர் காரன் என்று கும்பகோணம் காரர் ஒருத்தர் சொன்னார்.ஆக்கப்பொறுத்தவன் ஆறப் பொறுக்க மாட்டான்னு சொல்லுவாங்க என்று நாகர்கோயில் இளைஞர் சொன்னார். ஊசி போல் தொண்டை உருளி போல வயிறு என்று திருநெல்வேலிக்காரர் சொன்னார். கெழவி சும்மா குழம்பு வச்சா எட்டு ஊருக்கு மணக்கும் ஒரு பெண் சொன்னார்.

    சும்மா கொழம்புன்னா?

    சும்மா கொழம்புன்னா?

    கெழவி சும்மா கொழம்பு வச்சா சொர்க்கமும் சொக்கும் என்று ஒரு பெண் சொல்ல, சும்மா கொழம்பு என்றால் என்ன என்று கேட்டார் கோபிநாத். காயும் இல்லாம ஒன்னும் இல்லாம வீட்டில் இருக்கும் பச்ச மொளகா இப்படி எதையாச்சும் போட்டு வைக்கறது சார். இன்னிக்கும் காரைக்குடியில் சும்மா கொழம்பு ஸ்பெஷல் சார் என்று சொன்னார். மாதா ஊட்டாத சோறை மாங்கா ஊட்டும் என்று சொன்னார் தஞ்சாவூர் பெண். தஞ்சாவூரில் மாமரங்கள் அதிகம் என்பதால், எல்லாத்திலேயும் மாங்காய் போட்டு சமைப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் என்று விளக்கம் சொன்னார் அந்த பெண்.

    English summary
    This week is his weekly discussion on food. Many people in this town speak of the pride of their food. Check out Vijay TV's Neeya Naana show this coming Sunday afternoon.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X