Just In
- 19 min ago
90 நாட்கள் போரிங்காய் இருந்தவருக்கு 16 கோடி ஓட்டுகள்.. ரம்யா பாண்டியனை மறைமுகமாக சாடும் பிரபலம்!
- 28 min ago
குளோபலி நம்பர் ஒன்.. உலகளவில் முதல் வாரத்தில் மாஸ்டர் படம் தான் வசூலில் டாப்பாம் #MasterGloballyNo1
- 1 hr ago
மனிதாபிமான செயல்பாடுகள்.. நடிகர் அன்பு பாலாவுக்கு அமெரிக்க பல்கலை கவுரவ டாக்டர் பட்டம்!
- 1 hr ago
கவர்ச்சி பாதைக்கு ரூட்டை மாற்றும் பிரபல இளம் நடிகை!
Don't Miss!
- Lifestyle
90% மக்கள் புறக்கணிக்கும் சர்க்கரை நோயின் அபாயகரமான ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள்!
- News
கொரோனா வந்துருமே.. பயந்து போய்.. விமான நிலையத்திலேயே பதுங்கியிருந்த இந்தியர் கைது!
- Finance
மாருதி சுசூகி திடீர் முடிவு.. கார்களின் விலை 34,000 வரை உயர்வு..!
- Sports
நடுவர்களின் பாரபட்சம்.. எல்லா பக்கமும் சுற்றி வளைக்கும் ஆஸ்திரேலிய அணி.. களத்தில் ஏற்பட்ட சர்ச்சை!
- Automobiles
மாருதி டீசல் எஞ்சின் ரெடி... எர்டிகா, சியாஸ் கார்களில் விரைவில் அறிமுகம்?
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Roja Serial: கிரேசி டைம் வினோதினி... திரும்ப வந்துட்டாங்க!
சென்னை: இயக்குநர் பாலுமகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் படத்தில் நாயகியாக நடித்து, சினிமாவுக்கு அறிமுகம் ஆனார் நடிகை வினோதினி. இவர் குழந்தை நட்சத்திரமாக ஏற்கனவே நடித்து இருந்தவர்.
திரைப்படங்களில் நடிப்பு என்பது இவருக்கு அவ்வளவாக கைக்கொடுக்கவில்லை. நகைச்சுவை மன்னன் கிரேசி மோகனின் நாடகங்களில் நடித்து வந்த வினோதினிக்கு அவர் குழுவில் நடிக்கையில் காமெடி நன்றாகவே வந்தது.
சன் டிவி, ஜெயா டிவி, கலைஞர் டிவி என்று மட்டும் இல்லாமல், தூர்தர்ஷன் பொதிகை சானலிலும் கிரேசி டைம் என்று குறிப்பிட்ட நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த நாடகங்களில் வினோதினியின் பங்கும் மிகவும் ரசிக்கும்படி இருந்தது.

அக்னி நட்சத்திரம்
சன் டிவியில் முற்பகல் ஒளிபரப்பாகி வரும் அக்னி நட்சத்திரம் சீரியலில் விநோதினியும், மவுனிகாவும் அம்மா கதாபாத்திரத்தில் வண்ண வண்ணப் பூக்களுக்குப் பிறகு ஒன்று சேர்ந்து நடிக்க ஆரம்பிச்சு இருந்தார்கள். ஆனால், ஒரு மாதத்துக்குள்ளாகவே வினோதினி அக்னி நட்சத்திரம் சீரியலில் இருந்து விலகிக் கொண்டார்.
அள்ளிச் செருகிய கொண்டை.. கெண்டைக்கால் தெரிய பாவாடை.. அப்புறம் முகவாயில் 3 புள்ளி!

கணவருக்கு விபத்து
ரொம்ப நாட்களுக்குப் பிறகு நடிக்க வந்த வினோதினிக்கு திடீர்னு என்னாச்சு என்று விசாரித்தததில், அவரது கணவருக்கு பெரும் விபத்து நேர்ந்து, நடக்க முடியாமல் ஐசியூவில் மாதக் கணக்கில் இருக்கும் நிலை ஏற்பட்டது என்று தகவல் தெரிந்தது. அப்போது முழுக்க முழுக்க கணவரை கவனித்துக்கொள்ளும் பணிகளில் மூழ்கி இருந்தார் வினோதினி.

பல பிரச்சனைகள்
வீடு வாங்கியதில் பிரச்சனை.. கணவருக்கு விபத்து ஏற்பட்டு பிரச்சனை என்று பல பிரச்சனைகளில் சிக்கித் தவித்த வினோதினி அதிலிருந்து மீண்டு வந்த கதையே பெரும் கதையாகிப் போனது. பொருளாதார ரீதியான சிக்கல்கள் வேறு. அதனால் மீண்டும் மேக்கப் போட ஆரம்பிச்சு இருக்கார் வினோதினி.

அனுவின் அம்மா
சன் டிவியின் ரோஜா சீரியலில் அனுவின் அம்மாவாக கதைப்படி நடிக்க, ரோஜா சீரியலுக்கு வந்து இருக்கார் வினோதினி. ரோஜா சீரியலிலும் நடிகையாகவே களம் இறக்கப்பட்டு இருக்கார். ஆனால், இத்தோடு தன்னை விட்டு விடாமல் சீரியல்களில் தொடர்ந்து நல்ல வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பதே வினோதினியின் ஆசை.