»   »  பெப்பர்ஸ் டிவியில் கிராம நடனம் பார்க்க “நம்மூர் ஆட்டம்” பாருங்க

பெப்பர்ஸ் டிவியில் கிராம நடனம் பார்க்க “நம்மூர் ஆட்டம்” பாருங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திறமைகளை வைத்துக்கொண்டும் கனவுகளை சுமந்து கொண்டும் வாழ்க்கை நடத்தும் கிராமத்து கலைஞர்களை ஊக்குவிக்கும் புத்தம் புது நடன நிகழ்ச்சி பெப்பர்ஸ் டிவியின் நம்மூர் ஆட்டம்.

தமிழ்த்தொலைக்காட்சிகளில் முதல் முறையாக கிராமம் கிராமமாக சென்று அங்குள்ள நடனம் தெரிந்தவர்களை, நடன கலைஞர்களாக உலகத்துக்கு வெளிச்சம் காட்டும் விதமாக நம்மூர் ஆட்டம் நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் பிரபல சினிமா நடன இயக்குனர் ரவி தேவ் நடுவராக அவரது குழுக்களுடன் தமிழ்நாட்டு கிராமங்களுக்கு சென்று வயது வித்தியாசமின்றி நடனத்தில் விருப்பமுள்ளவர்களை ஆடச்சொல்கின்றனர்.

இதில் தகுதியுள்ளவர்களை தேர்வு செய்து தேர்வு செய்யப்பட்டவர்களிடையே போட்டி நடத்தி நம்மூர் ஆட்டத்தில் யார் நம்பர் ஒன் என்பதை உலகுக்கு தெரிவிக்க இருக்கும் நிகழ்ச்சியே நம்மூர் ஆட்டம்.

நடன நிகழ்ச்சி

நடன நிகழ்ச்சி

சேட்டிலைட் தொலைக்காட்சிகளில் நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, மானாட மயிலாட, ஜோடி நம்பர் ஒன் ஆகிய நடன நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே பிரபலமானது.

கிராமத்து மக்களுக்கு நடனம்

கிராமத்து மக்களுக்கு நடனம்

டிவி ரியாலிட்டி நடன நிகழ்ச்சியில் கிராமத்து மக்களும் பங்கேற்கும் வகையில் நம்ம ஊர் ஆட்டம் என்ற நடன நிகழ்ச்சியை பெப்பர்ஸ் டிவி தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக போட்டியாளர்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சி குன்றத்தூரில் தொடங்கியது.

கிராமத்து கலைஞர்கள்

கிராமத்து கலைஞர்கள்

கிராமத்தில் உள்ள பல கலைஞர்களின் நடனத் திறமை இந்த நிகழ்ச்சியின் மூலம் வெளிப்பட்டது. ரியா, சவால்ராம் ஆகியோர் இந்த நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர்.

சினிமாவில் நடனம்

சினிமாவில் நடனம்

நடன இயக்குநர் ரவிதேவ் நடுவராக இருந்து திறமையான நடன கலைஞர்களை தேர்வு செய்கிறார். இறுதிப் போட்டியில் 5 நடனக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.00 மணி முதல் 6.00 மணிவரை ஒளிபரப்பாக உள்ளது.

English summary
Dance-based reality shows are usually conducted in the respective channel's studios. But Nammoor Aattam, goes to villages and holds the competition right there, where the participants are comfortable in a familiar setting.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil