ஆகாயத்த நான் பார்க்கிறேன்...அந்தமானில் அந்தரத்தில் பறந்த டிடி...செம வைரல் வீடியோ

சென்னை : குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சினிமா, டிவி சீரியல் ஆகியவற்றில் நடித்து வந்த திவ்யதர்ஷினி, டிடி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி, ஜுலி கணபதி, நளதமயந்தி, விசில், சரோஜா, பவர் பாண்டி, சர்வம் தாள மயம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வரும் டிடி, ராதிகாவின் ராடன் பிக்சர்ஸ் தயாரித்த செல்வி, அரசி ஆகிய சீரியல்களிலும் முக்கிய ரோல்களில் நடித்துள்ளார். பிறகு விஜய் டிவி.,யில் இணைந்து காஃபி வித் டிடி, ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட பல புகழ்பெற்ற டிவி ஷோக்களை தொகுத்து வழங்கி உள்ளார்.

முன்னணி தொகுப்பாளர்

முன்னணி தொகுப்பாளர்

தொடர்ந்து பல ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி, தமிழ் டிவி சேனல்களிலேயே முன்னணி தொகுப்பாளினியாக விளங்கினார். இவரது சகோதரி பிரியதர்ஷினியும் டிவி தொகுப்பாளர் தான். இவரும் குழந்தை நட்சத்திரமாகவும், முக்கிய ரோல்களிலும் பல படங்கள் மற்றும் டிவி சீரியல்களில் நடித்துள்ளார்.

கிளாமரில் அசத்திய டிடி

கிளாமரில் அசத்திய டிடி

தனது நீண்ட கால நண்பரும், அசிஸ்டென்ட் டைரக்டருமான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட டிடி, 2017 ல் தாங்கள் பிரிவதாக அறிவித்தனர். அதன் பிறகு அதிக அளவில் மீடியாக்களில் தலை காட்டாமல் இருந்த டிடி, சோஷியல் மீடியாவில் ஆக்டிவாகி, ஃபோட்டோக்கள் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். குறிப்பாக கிளாமர் ஃபோட்டோக்களை வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.

லைக்குகளை அள்ளிய பிகினி

லைக்குகளை அள்ளிய பிகினி

மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு சென்று பிகினியில் எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்கள், வீடியோக்களையும் கூட வெளியிட்டார். இந்த பிகினி வீடியோ செம வைரலானது. இதற்கு பிறகு சமீபத்தில் ரீல் வீடியோ ஒன்று போட முயற்சித்ததாகவும், அதற்கு தனது வீட்டில் உள்ளவர்கள் ரியாக்ஷன் இது தான் எனக்கூறி, தன் மீது யாரோ ஒருவர் செருப்பை வீசும் வீடியோ ஒன்றை பகிர்ந்தார். இது வேற லெவலில் வைரலானது. இது வரை டிடி பதிவிட்டதிலேயே இது தான் அதிக லைக்குகளை பெற்ற வீடியோ என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அந்தமானில் பறந்த டிடி

அந்தமானில் பறந்த டிடி

இந்நிலையில் நேற்று தான் அந்தமான் சென்ற போது, கடலின் மீது அந்தரத்தில் பறந்த வீடியோ ஒன்றை டிடி பகிர்ந்துள்ளார். இது செம வைரலாகி வருகிறது. லட்சக்கணக்கில் லைக்குகள் குவித்து வருகிறது. இந்த வீடியோவின் பின்னணியில், ஆகாசத்த நான் பாக்குறேன்...ஆறு, கடல் நான் பாக்குறேன் என்ற பாடல் ஒலிக்கிறது. குக்கூ படத்தில் பார்வையிழந்த ஹீரோவும், ஹீரோயினும் பாடுவதை போன்று அமைந்த இந்த பாடலை டிடி தனது வீடியோவில் இணைத்துள்ளார்.

ரொம்ப பயந்தேன்

ரொம்ப பயந்தேன்

இந்த வீடியோவுடன், முதல் முறையாக அந்தமான் கடலில்...ரொம்ப பயந்தேன். ஆனால் அந்த பசங்க மிகுந்த கவனத்துடன் எனக்கு உதவினர். அவர்கள் தங்களின் வேலையை மிகவும் நேசிக்கிறார்கள். இது எங்கள் ட்ரிப்பில் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. அற்புதமான பிளானிங். கலக்கிட்டிங்க. கொரோனாவிற்கு பிறகு அந்தமான் சுற்றுலா மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது . வெளிநாடுகளில் இருப்பது போன்ற உணர்வுடன் பாதுகாப்பாக உணர்ந்தேன். மிக விரைவில் ஃபோட்டோக்கள் வரும் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X