»   »  பிக் பாஸிடம் இருந்து 'நாம' ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது போலயே

பிக் பாஸிடம் இருந்து 'நாம' ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது போலயே

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்று பிக் பாஸ் சொல்வது போட்டியாளர்களை பார்த்து அல்ல.

பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்பார் உலக நாயகன் கமல் ஹாஸன். அவர் சொல்வது பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களை என்று நினைத்தால் தவறு.

பிக் பாஸ் நெட்டிசன்களை கூர்ந்து கவனித்து வருகிறார்.

ஜூலி

ஜூலி

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய புதிதில் ஜூலியை ஜல்லிக்கட்டு போராளி என்று கூறி நெட்டிசன்கள் தலையில் வைத்து கொண்டாடினார்கள். இதை பார்த்த பிக் பாஸ் ஜூலியை டார்கெட் செய்யும்படி சக போட்டியாளர்களிடம் கூறினார்.

நடிப்பு

நடிப்பு

பிக் பாஸ் வீட்டில் ஜூலி போலியாக நடிப்பதையும், நேரத்திற்கு தகுந்தது போன்று மாறிக் கொள்வதையும் பார்த்த நெட்டிசன்கள் அவரை பச்சோந்தி என்று கூறி கழுவிக் கழுவி ஊத்தினார்கள்.

ஓவியா

ஓவியா

ஜூலியை நெட்டிசன்கள் திட்டத் துவங்கியதும் பிக் பாஸின் பார்வை ஓவியா பக்கம் போனது. ஓவியாவுக்கு ஆதரவு அதிகம் உள்ளதை புரிந்து கொண்ட பிக் பாஸ் அவரை கட்டம் கட்டுமாறு சக போட்டியாளர்களிடம் ஸ்கிரிப்ட் கொடுத்தார்.

அழுகை

அழுகை

ஜூலி எதற்கெடுத்தாலும் நீலிக் கண்ணீர் விட்டு விட்டு டிஆர்பியை ஏற்றினார். ஓவியா அழாமலேயே இவ்வளவு டிஆர்பி வந்தால் அழுதால் எவ்வளவு ஜாஸ்தியாக வரும் என்று யோசித்தார் பிக் பாஸ்.

கண்ணீர்

கண்ணீர்

டிஆர்பியை சகட்டுமேனிக்கு ஏற்ற முடிவு செய்த பிக் பாஸ் ஓவியாவை அழ வைத்துவிடும்படி சக போட்டியாளர்களிடம் கூறினார். ஏற்கனவே இன்று யாரை அழ வைப்பது என்று பார்க்கும் காயத்ரி இது தான் சாக்கு என்று சக போட்டியாளர்களுடன் சேர்ந்து ஓவியாயை அழ வைத்துவிட்டார்.

சோஷியல் மீடியா

சோஷியல் மீடியா

பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சமூக வலைதளங்களை கூர்ந்து கவனித்து வருகிறார்கள். அந்த டிரெண்டுக்கு ஏற்பவே ஸ்கிரிப்ட்டை மாற்றி நடிக்க வைக்கிறார்கள். அதனால் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்று பிக் பாஸ் சொல்வது நெட்டிசன்களுக்கே பொருந்தும்.

English summary
Big Boss is watching not only the contestants but also the netizens. Big Boss is changing script according to the trend in social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil