»   »  டியர் வாசகர்களே, உங்களை நெளிய வைக்கும் டிவி நிகழ்ச்சிகள் எவை என சொல்லுங்களேன்!

டியர் வாசகர்களே, உங்களை நெளிய வைக்கும் டிவி நிகழ்ச்சிகள் எவை என சொல்லுங்களேன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சில நிகழ்ச்சிகளால் நெளிய வேண்டி உள்ளதாக மக்கள் கூறுகிறார்கள்.

தொலைக்காட்சிகளில் வெளியாகும் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு எதிராக நடிகைகள் ஸ்ரீப்ரியா, ரஞ்சனி ஆகியோர் குரல் கொடுத்து வருகிறார்கள். அந்த நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கைக்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Dear readers, name the TV programmes that make you uncomfortable

இந்நிலையில் நடிகர் எஸ்.வி. சேகர் கேப்டன் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றை விமர்சித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஏ சான்றிதழ் படங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப அனுமதி இல்லை. ஆனால் சான்றிதழ் பெறாத ஏ வகையான நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அனுமதி. முட்டாள்தனத்தின் உச்சம் என தெரிவித்துள்ளார்.

இதை பார்த்த ஒன்இந்தியா வாசகர்கள் பிரபலங்கள் சொன்னால் தான் மீடியா கவனிக்கிறது, எங்களை போன்ற சாதாரண மக்கள் கூறினால் கேட்பது இல்லை. மக்களை நெளிய வைக்கும் இது போன்ற நிகழ்ச்சிகள் பல உள்ளன என தெரிவித்துள்ளனர்.

அன்பு வாசகர்களே, சாதாரண மக்களின் கருத்தையும் ஊடகங்கள் கேட்கும். உங்களை நெளிய வைக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பெயர்களை எங்களிடம் கூறுங்கள். அதை நிச்சயம் உரியவர்கள் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம்.

English summary
Dear Readers, we listen to ordinary man also. Name the TV programmes that make you feel uncomfortable.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil