»   »  தீபாவளி ஸ்பெஷல்: பெப்பர்ஸ் டிவியில் என்ன போடுறாங்க தெரியுமா?

தீபாவளி ஸ்பெஷல்: பெப்பர்ஸ் டிவியில் என்ன போடுறாங்க தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் தயாராகி வருகின்றன. எந்த சேனல் என்ன நிகழ்ச்சி என்பதை போட்டு போட்டு கண்காணித்து அதை விட சிறந்ததாக ஒளிபரப்ப தயாராகி வருகின்றன சேனல்கள் பெப்பர்ஸ் டிவியில் பட்டிமன்றம், இசை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.

கல்லூரி மாணவிகள் பங்கேற்கும் பட்டிமன்றம், பிரபல இசைக்கலைஞர்கள் பங்கேற்கும் இசை சங்கமம் தொலைக்காட்சி ரசிகர்களை கவரும் என்கின்றனர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்.

சிறப்பு பட்டி மன்றம் - காலை 9 30 மணி

சிறப்பு பட்டி மன்றம் - காலை 9 30 மணி

பெண்களின் சுதந்திரம் வளர்கிறதா? தளர்கிறதா? - திருச்சி காவேரி பெண்கள் கல்லூரியில் ஒரு பிரம்மாண்டமான பட்டிமன்றம்.நடுவர் புலவர் ராமலிங்கம் தலைமையில் கல்லூரிமாணவிகளின் கலக்கலான, சுவையான, அறிவுப்பூர்வமான பேச்சு.சிந்திக்கவும் சிரிக்கவும் ஒரு சுவையான பட்டிமன்றம்..

வாக் ஆன் த க்ளவுட்ஸ் - மாலை 6.00 மணி

வாக் ஆன் த க்ளவுட்ஸ் - மாலை 6.00 மணி

மாடலிங் என்பது ஒரு வரம். அதற்குள் நிறைய சூட்சமங்கள் உள்ளது. வெற்றியை தொடுவதற்கு நிறைய படிக்கட்டுகள் கடக்க வேண்டும் மனம் திறக்கிறார் பிரபல மாடலிங், நடிகை, மிஸ் சௌத் இந்தியா 2016 மீரா மிதுன்

இசை சங்கமம் - காலை 8.00 மணி

இசை சங்கமம் - காலை 8.00 மணி

இசைக்கு மொழி கிடையாது. இதற்கு மயங்காதவர்கள் உலகில் எவரும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட இசையால் இறைவனை ஆராதிக்கும் நிகழ்ச்சிதான் இசை சங்கமம். இந் நிகழ்ச்சியில் பிரபல கர்நாடக இசை கலைஞர்கள் புல்லாங்குழல் இசை கலைஞர் கலைமாமணி திருவாரூர் சுவாமிநாதன் மற்றும் குழுவினர்கள் பங்கு பெறுகிறார்கள்

சிறப்பு நிகழ்ச்சி

சிறப்பு நிகழ்ச்சி

இது மட்டுமல்ல இன்னும் பல நிகழ்ச்சிகள் வரிசை கட்டும் என்கின்றனர் பெப்பர்ஸ் டிவி தயாரிப்பாளர்கள். பெப்பர்ஸ் டிவியில் இன்னும் இனிப்பான பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர் தொலைக்காட்சி ரசிகர்கள்.

English summary
Deepavali Special programs telecast on 29-10-2016 Peppers TV. Pattimandram, Music program, and Stars Interview.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil