»   »  ரஜினி ரசிகர்களுக்கு தீபாவளி 'விருந்து'!

ரஜினி ரசிகர்களுக்கு தீபாவளி 'விருந்து'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி ரசிகர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளிக்கு சின்னத் திரையில் பெரும் விருந்தே உள்ளது.

ஜெயாடிவில் ரஜினியின் மிக சமீபத்திய படமான லிங்கா ஒளிபரப்பாகிறது. நாளை பிற்பகல் 1.30 மணிக்கு லிங்காவை ஒளிபரப்புகிறார்கள். ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ள இந்தப் படத்தை கேஎஸ் ரவிக்குமார் இயக்கியுள்ளார்.

Deepavali treat for Rajini fans

கலைஞர் தொலைக்காட்சியில் ரஜினியின் மெகா ஹிட் படமான சிவாஜி ஒளிபரப்பாகிறது. வெளியாகி 7 ஆண்டுகள் ஆனாலும் ரசிகர்களுக்கு திகட்டாத திரைவிருந்து இந்தப் படம். ரஜினியுடன் ஸ்ரேயா ஜோடி சேர்ந்திருந்தார். ஷங்கர் இயக்கியிருந்தார்.

இந்த தீபாவளியையொட்டி ரஜினியின் புதிய படமான கபாலியின் புதிய போஸ்டர் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே வெளியான கபாலியின் இரு போஸ்டர்கள் பெரும் வரவேற்பைப் பெற்றதால், இந்தப் புதிய போஸ்டருக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

English summary
Rajinikanth's Lingaa and Sivaji movies telecasted in Jaya TV and Kalaigar TV on Deepavali day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil