»   »  ஜெய்ஹிந்த் விலாஸ் பத்திரம் யாருக்கு கிடைக்கும்? - ஜெயிப்பது தெய்வமகளா? வில்லிகளா?

ஜெய்ஹிந்த் விலாஸ் பத்திரம் யாருக்கு கிடைக்கும்? - ஜெயிப்பது தெய்வமகளா? வில்லிகளா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் தெய்வமகள் தொடர் 1120 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. கதை என்னவோ அண்ணிக்கும் கொழுந்தனுக்கும் இடையேயான முட்டல்கள் மோதல்கள்தான் என்றாலும் இப்போது கதை நகர்வது ஜெய்ஹிந்த் விலாஸ் பத்திரத்தை தேடித்தான்.

சொத்துக்காக காயத்ரி அண்ணியார் செய்யும் வில்லத்தனங்கள் அடடா.... இப்படியும் கூட யோசிப்பார்களா? என்று கேட்கும் அளவிற்கு படு பாதக வில்லத்தனங்களை செய்கின்றனர். அதை பார்த்து ரத்தம் கொதித்து பலருக்கும் பிபி எகிறுவதுதான் மிச்சம்.

நம்பியை நம்பவைத்து கடைசியில் கொலை செய்த காயத்ரி, சொத்துக்களை அடைய நம்பியின் அக்காவையும், அவரது கணவரையும் அடைத்து கொடுமைப்படுத்திய எபிசோடுகள் 2016ம் ஆண்டின் உச்சக்கட்ட வில்லத்தனம்.

காயத்ரியும் வினோதினியும்

காயத்ரியும் வினோதினியும்

அக்கா தங்கைகளாக காயத்ரியும், வினோதினியும் ஒவ்வொரு முறையும் செய்யும் வில்லத்தனங்கள்.... அக்காவின் திட்டத்தை நிறைவேற்ற தங்கை செய்யும் தகிடுதத்தங்கள் அப்பப்பா... கடந்த 1000 எபிசோடுகளுக்கும் மேலாகவே ஐயோ ஆளை விடுங்கடா என்று கூறும் அளவிற்கு போய் விட்டது.

தேடி அலையும் பிரகாஷ்

தேடி அலையும் பிரகாஷ்

அண்ணியின் வில்லத்தனங்கள் அலம்பல்களை முறியடிக்கவே பிரகாஷ், சத்யா தனியாக சாப்பிட வேண்டியிருக்கிறது. ஓட ஒட அலையவிட்டு கடைசி வரைக்கும் கையில் சிக்காமல் சிட்டாக பறந்து விடுவதே காயத்ரியின் ஸ்டைலாக இருக்கிறது.

ஜெய்ஹிந்த் விலாஸ் பத்திரம் எங்கே

ஜெய்ஹிந்த் விலாஸ் பத்திரம் எங்கே

நம்பியின் லேப்டாப்பை தேடி அலைந்து ஒரு வழியாக கண்டுபிடித்து விட்டனர். இப்போது ஜெய்ஹிந்த் விலாஸ் பத்திரத்தை தேடி ஊர் ஊராக அலைகின்றனர். அந்த பத்திரம் திருப்பதி வரை போய் கடைசியில் பழைய பேப்பர்காரனிடம் தஞ்சமடைந்து விட்டது.

சிக்கிக்கொண்ட காயத்ரி

சிக்கிக்கொண்ட காயத்ரி

நம்பியின் அக்கா, மாமாவை கடத்தி வைத்திருந்த காயத்ரி ஒரு வழியாக அவர்களை ரிலீஸ் செய்து விட்டு ஓட்டமெடுக்கின்றனர். கடைசியில் தஞ்சமடைவது விபசார புரோக்கரிடம். அங்கிருந்து தப்பிப்பாளா? காயத்ரி, அல்லது வசமாக சிக்கிக் கொள்வாளா?.

பத்திரம் பத்திரமாக வருமா?

பத்திரம் பத்திரமாக வருமா?

ஜெய்ஹிந்த் விலாஸ் பத்திரம் பத்திரமாக பிரகாஷ் குடும்பத்திடம் கிடைக்குமா? அல்லது அங்கே சுற்றி இங்கே சுற்றி கடைசியில் காயத்ரியின் கையில் கிடைக்குமா? 1120 எபிசோடு முடிந்து விட்டது. அதே வில்லிகளை வைத்துக்கொண்டு எந்த கதையும் இல்லாமல் இன்னும் எத்தனை நாட்களுக்கு ஒட்டப் போகிறார்களோ தெரியலையே? தெய்வமகளில் ஜெயிக்கப் போவது யாரோ?

English summary
Sun TV serial Deivamagal crossed 1120 episode. Jayhind Vilas Document and Gayathiri,Prakash is the main character.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil