»   »  'ரசிகர்கள் வேண்டுதல் பலிச்சிருச்சு..' - 'தெய்வமகள்' அண்ணியாரை சுட்டுக்கொன்ற பிரகாஷ்!

'ரசிகர்கள் வேண்டுதல் பலிச்சிருச்சு..' - 'தெய்வமகள்' அண்ணியாரை சுட்டுக்கொன்ற பிரகாஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஒரு வழியா முடிச்சுட்டாங்கப்பா தெய்வமகள் சீரியல..!!

சென்னை : தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒரு சில தொடர்கள் மட்டும் பல வருடங்கள் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிவருகின்றன. அதில் குறிப்பிடத்தக்கது 'தெய்வமகள்' சீரியல்.

அதில் வில்லியாக உள்ள அண்ணியார் தற்போது மீண்டும் பிரகாஷால் கொலை செய்யப்பட்டுள்ளார். அதனால் இந்த சீரியல் இந்த வாரத்தோடு முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணியார் கொல்லப்பட்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் சீரியல் முடிவுக்கு வர இருப்பதால் இந்த சீரியலின் வெறித்தன ரசிகர்கள் தற்போது சோகத்தில் உள்ளனர்.

அண்ணியார்

அண்ணியார்

'தெய்வமகள்' சீரியல் வில்லி காயத்ரியைப் பார்த்து ஹீரோ பிரகாஷ் கூப்பிடும் ஸ்டைல் தான் 'அண்ணியார்'. இப்போது பெரும்பாலான வீடுகளை அண்ணியை இப்படித்தான் அழைக்கிறார்களாம். அந்தளவுக்கு ரசிகர்கள் மத்தியில் தாக்கம் ஏற்படுத்திய கேரக்டர் இது.

சிம்மசொப்பனம்

சிம்மசொப்பனம்

தெய்வமகள் சிரியலில் நடிகை வாணி போஜன் நாயகியாக நடிக்கிறார். இவர் மற்றும் இவரது கணவர் பிரகாஷுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர் அண்ணியார் காயத்ரி. இந்த காயத்ரியை தான் நேற்றைய எபிஸோடில் சுட்டுக் கொன்றுள்ளார் பிரகாஷ்.

ரேகா கிருஷ்ணப்பா

ரேகா கிருஷ்ணப்பா

காயத்ரியின் ஒரிஜினல் பெயர் ரேகா கிருஷ்ணப்பா . கன்னட திரைப்படம் மற்றும் தொடர்களில் நடித்து புகழ்பெற்ற ரேகா கிருஷ்ணப்பா, மலையாள தொடருக்கும் சென்று அங்கும் வெற்றிக்கொடி நாட்டிவிட்டு தற்போது தமிழ் சீரியல்களில் வில்லியாக முகாமிட்டிருக்கும் ரேகா நடிப்புத் துறையில் 20 வருட அனுபவமிக்க சீனியர்.

ஏற்கெனவே ஒருமுறை

ஏற்கெனவே ஒருமுறை

அண்ணியார் காயத்ரியை ஏற்கெனவே பிரகாஷ் குத்தி கொலை செய்து மலையில் இருந்து உருட்டி விட்டு விட்டார். காயத்ரி இறந்து போனதாக நம்பி போய் விட்டனர். ஆனால் காயத்ரி வேறொரு கேரக்டராக உருவெடுத்து வந்து பிரகாஷ் குடும்பத்தினருக்கு குடைச்சல் கொடுத்து வந்தார்.

முடிகிறது சீரியல்

முடிகிறது சீரியல்

இந்நிலையில், காயத்ரியை சுட்டுக் கொன்றிருக்கிறார் பிரகாஷ். இது காயத்ரி ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியாகவே இருந்திருக்கும். சமூக வலைத்தளத்தில் காயத்ரிக்கு அஞ்சலி செலுத்தி பதிவிட்டுள்ளனர் அவரது ரசிகர்கள். ஒருவழியாக 'தெய்வமகள்' சீரியல் இறுதிகட்டத்தை எட்டி இருக்கிறது.

English summary
'Deivamagal' serial have been running successfully for a number of years in Sun TV. Anniyaar Gayathri who is a villi is now again killed by Prakash. So this serial is expected to be end with this week.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X