»   »  ஒரிஜினல் ரவுடிகளையே சென்னை போலீஸ் தூக்கிட்டாங்க.. ஆனா ஒத்த மனுஷி காயத்ரியை தூக்கமுடியலையே!

ஒரிஜினல் ரவுடிகளையே சென்னை போலீஸ் தூக்கிட்டாங்க.. ஆனா ஒத்த மனுஷி காயத்ரியை தூக்கமுடியலையே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தெய்வமகள் சீரியலில் வில்லி காயத்திரியை பிடிக்க முடியாமல் போலீஸ் திணறி வருவது நேயர்களிடையே எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.

சன்டிவியில் திங்கள் முதல் சனி வரை நாள்தோறும் இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் தெய்வமகள். 1400 எபிசோடுகளை கடந்துள்ளது இந்த சீரியல்.

கடந்த ஒருமாதமாக வில்லி காயத்ரியும் ஜெய்ஹிந்து விலாஸ் குடும்பத்தினரும் இதுதான் தங்களுக்குள் நடக்கும் இறுதி யுத்தம் என டயலாக் பேசி வந்தனர்.

கிளைமேக்ஸை நெருங்கிவிட்டது

கிளைமேக்ஸை நெருங்கிவிட்டது

இதனால் சீரியல் கிளைமேக்ஸை நெருங்கிவிட்டது என நினைத்தனர் மக்கள். ஆனால் அது ஜவ்வு மிட்டாய் போல் இழுத்துக்கொண்டே செல்கிறது.

போக்குக்காட்டும் காயத்ரி

போக்குக்காட்டும் காயத்ரி

ஜெய்ஹிந்து விலாஸ் குடும்பத்தினரை அழிப்பதாக சபதம் போட்ட காயத்ரி தண்ணீரில் விஷத்தை கலந்து அனைவரையும் கொலை செய்ய முயன்றார். மேலும் சத்தியா பிரகாஷின் மகளான மகா பாப்பாவையும் கடத்திய காயத்ரி போலீசாருக்கு போக்கு காட்டி வருகிறார்.

சகலத்தையும்

சகலத்தையும்

இந்நிலையில் மகா பாப்பாவின் உயிருக்கு 50 லட்சம் ரூபாய் விலை நிர்ணயித்திருக்கிறார். சமூகத்திற்கு எவ்வளவு தீமையான விஷயங்களை கற்றுக்கொடுக்க முடியுமோ அவ்வளவையும் கற்று கொடுக்கிறது தெய்வமகள் சீரியல்.

தற்போது வீடியோ

தற்போது வீடியோ

இதுவரை ஆடியோவை மட்டும் வெளியிட்டு மிரட்டி வந்த காயத்ரி தற்போது குழந்தையை வைத்துக்கொண்டு வீடியோவை வெளியிட்டு வருகிறார். வீட்டிற்குள் ஒளிந்திருக்கும் ஒரு குற்றவாளியை கூட கண்டுபிடிக்க முடியாமல் உள்ளனர் கான்ஸ்டபிள்ஸ்.

மக்களுக்கு அலுப்பு

மக்களுக்கு அலுப்பு

சென்னையில் உள்ள ஒட்டு மொத்த ஒரிஜினல் ரவுடிகளையே போலீசார் அள்ளிவிட்டனர். ஆனால் தெய்வமகளில் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள், நண்பர்கள், காதலன் என அனைவரையும் போட்டுத்தள்ளும் காயத்ரியை எப்போது போலீஸ் தூக்குமோ என அலுத்துப்போகின்றனர் மக்கள்.

English summary
Sun TV is telecasting Deivamagal Serial Monday to Saturday evening 8 pm. Deivamagal serial is irritating public. The serial is teaching all the crimes to public

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil