»   »  சீரியல் டல்லடிச்சா சத்யா பிரகாஷை சண்டை போடச்சொல்லுங்கப்பா...

சீரியல் டல்லடிச்சா சத்யா பிரகாஷை சண்டை போடச்சொல்லுங்கப்பா...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நல்லா, சந்தோசமா இருக்கிற குடும்பத்தை எப்படி கெடுக்கலாம் என்று ஐடியா கொடுப்பதற்காகவே சிலர் சீரியல் எடுப்பார்கள் போல... தெளிந்த நீரோடையாய் போகும் தண்ணீரில் கல்லெறிந்து கலக்குவதைப் போல எதையாவது செய்து கணவன் மனைவிக்கு இடையே சண்டையை மூட்டிவிடுவார்கள். அப்புறம் என்ன? அடிதடிதான்... கண்ணீரும் கம்பளையுமா ஹீரோயின் அழ... அதைப் பார்த்து இல்லத்தரசிகள் அழ...இவற்றை பார்ப்பவர்களுக்குத்தான் பிபி எகிறுகிறது.

இந்த பிரகாஷ் பயலுக்கு வேற வேலையே இல்லையா... அப்பாவி சத்யாவைப் போட்டு இப்படி அழ வைக்கிறானே என்று திட்டித் தீர்க்கின்றனர். சன் டிவியில் ஒளிபரப்பாகும் தெய்வமகள் சீரியல் 850 எபிசோடுகளை எட்டப்போகிறது. பிரகாஷ் சத்யாவின் ரொமான்ஸ் காயத்ரி அண்ணியாரின் வில்லத்தனங்கள், குழிபறிப்புகள் என நகர்ந்து கொண்டிருக்கிறது டிவி சீரியல்.

முதல்நாளில் கண்ணே மணியே என்று கொஞ்சும் பிரகாஷ் மறுநாளே கதற கதற சத்யாவை அழவைக்கிறான். காரணம் கேட்டால் எல்லாம் டிஆர்பிக்காகவாம். என் தேவதை நீதான் என்று கூறும் அதே பிரகாஷ்தான் நீ என் மூஞ்சியிலேயே முழிக்காதே என்று சத்யாவை திட்டி இல்லத்தரசிகளிடம் வாங்கிக் கட்டிக்கொள்கிறான்.

ஆரம்பம் முதலே சண்டைதான்

ஆரம்பம் முதலே சண்டைதான்

சத்யா, பிரகாஷ் இடையே ஆரம்பம் முதலே அடிதடிதான். கல்யாணம் கூட கலாட்டாவில் நடந்ததுதான். வேண்டா வெறுப்பாய் நடந்த கல்யாணம் இடையில் ரொமான்ஸ் ஆக மாறியது.

உன்னை விட மாட்டேன்

உன்னை விட மாட்டேன்

நீ என் தேவதை எந்த சூழ்நிலையிலும் உன்னை விட்டுத்தரமாட்டேன் என்று சத்யாவைப் பார்த்து அடிக்கடி கூறும் பிரகாஷ், கோபத்தில் அறைந்து தள்ளிவிடுவான். எல்லாம் டி.ஆர்.பிதான்.

அழும் ஹீரோயின்கள்

அழும் ஹீரோயின்கள்

சிரிக்கிற ஹீரோயின்களை விட அழும் ஹீரோயின்களால்தான் சீரியலுக்கு மவுசு கூடுகிறது என்ற முட்டாள்தனமான நம்பிக்கைத்தான் இதற்கு காரணமாக இருக்கிறது. தைரியமான தாசில்தார் சத்யா, கணவன் பிரகாஷிடம் காலில் விழவும் தயாராகிறாள்.

கொஞ்சம் ரொமான்ஸ் நிறைய கோபம்

கொஞ்சம் ரொமான்ஸ் நிறைய கோபம்

நாயகன் பிரகாஷ் எதற்கெடுத்தாலும் சத்யாவிடம் கோபித்துக்கொண்டு சண்டை போடுவதே வேலையாகிவிட்டது. பிரகாஷ்க்கு யாருடன் சண்டை என்றாலும் பலியாவது என்னவோ சத்யாதான். கர்ப்பம் கலைந்து போனதற்கு விவாகரத்து வரை கொண்டு போனார்கள்.

மாறிய ரிப்போர்ட்

மாறிய ரிப்போர்ட்

டாக்டர் ரிப்போர்டை மாற்றியதற்கு சத்யாதான் காரணம் என்று சொல்லி மறுபடியும் சண்டை ஆரம்பமாகிவிட்டது. இது போதாதா காயத்ரிக்கு. எப்படியாச்சும் இரண்டு பேரையும் பிரிக்கணும் என்று யோசிக்கத் தொடங்கிவிட்டாள்.

850 எபிசோடு

850 எபிசோடு

சண்டையும், சமாதானமுமாய் எப்படியோ 850 எபிசோடுகளை ஓட்டி விட்டனர். காயத்ரிக்கு குமாருடன் விவாகரத்து கிடைத்து விட்டது. கடன் கட்டியாகிவிட்டது. இனி என்ன செய்வது என்று யோசித்த இயக்குநர் சீரியலின் டி.ஆர்.பியை ஏற்றுவதற்கு மீண்டும் சத்யா பிரகாஷ் இடையே சண்டையை மூட்டி விட்டார்.
அட போங்கப்பா நீங்களும் உங்க சீரியலும்.

English summary
Sun TV deivamagal serial crossed 800 episode. Deivamagal serial is telecast every day at 8 PM on Sun TV.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil