»   »  என் கணவர்தான் என்னோட முதல் ஃபேன்...: தெய்வமகள் அண்ணியார் காயத்ரி

என் கணவர்தான் என்னோட முதல் ஃபேன்...: தெய்வமகள் அண்ணியார் காயத்ரி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமணத்திற்கு பின்னரும் நான் சினிமா சீரியலில் நடிக்க ஒத்துழைப்பு கொடுப்பதோடு எனது நடிப்புக்கு ரசிகராகவே மாறி விட்டார் என் கணவர் என்று தெய்வமகள் வில்லி காயத்ரி கூறியுள்ளார்.

காயத்ரியின் நிஜ பெயர் ரேகா குமார். அடடே காயத்ரி இப்படி அநியாயமா நம்பியை சுட்டு கொன்னுட்டாளே என்பதுதான் பல இல்லத்தரசிகள் மத்தியில் பேச்சாக இருக்கிறது. பிரகாஷ் உடன் சவால் விடுவதாகட்டும், ஜெய்ஹிந்த் விலாஸ் வீட்டு பத்திரத்தை கைப்பற்ற போடும் திட்டங்கள் ஆகட்டும் காயத்ரியின் வில்லத்தனம் படு காரம்.

சன் டிவியின் சூரிய வணக்கம் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் பக்கத்தில் பங்கேற்க காயத்ரி, தனது சீரியல் வாழ்க்கை நிஜ வாழ்க்கை பற்றியும் பகிர்ந்து கொண்டார். நான் சீரியலில்தான் வில்லி... நிஜத்தில் நான் ரொம்ப சாஃப்ட் என்கிறார் காயத்ரி.

நான் பெங்களூர் பொண்ணு

நான் பெங்களூர் பொண்ணு

பெங்களூரில் உள்ள பிரபல கல்லூரியில் பி.ஏ.மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட் படித்துக் கொண்டிருந்தேன். சீரியலில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் வாய்ப்பு தேடி சென்றேன். வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் படிப்பை முடித்த பிறகு, அதே இயக்குநரிடமிருந்து அழைப்பு வந்தது. மலையாளத்தில் சேச்சி அம்மா எனும் முதல் சீரியலிலேயே எனக்கு நெகட்டிவ் ரோல்தான் கொடுக்கப்பட்டது.

அடையாளம் காட்டிய தெய்வமகள்

அடையாளம் காட்டிய தெய்வமகள்

இப்பொழுதும் அந்த சீரியலில் வந்த மாயா மிர்கா ரோல்தான் பலருக்கும் பரிட்சயம். சேச்சி அம்மா சீரியலில் அந்த ரோல் பெரிய அளவுக்கு பிரபலமானது. இப்போது தெய்வமகள் காயத்ரி உலகம் முழுவதும் படு பிரபலம். சிங்கப்பூர் போன போது கூட மக்கள் அடையாளம் தெரிந்து பேசினர்.

வீட்டில் ஒத்துழைப்பு

வீட்டில் ஒத்துழைப்பு

என் வீட்டில் நான்தான் முதலில் நடிக்க ஆரம்பித்தேன். சீரியலுக்கான முதல் வாய்ப்பு கிடைத்த போது, என் பெற்றோர்களிடம் பயந்துகொண்டே சொன்னேன். அவர்கள் மறுப்பு எதும் கூறாமல் என்னை ஏற்றுக் கொண்டது எனக்கு சந்தோஷம்.

கணவர் ஒத்துழைப்பு

கணவர் ஒத்துழைப்பு

திருமணத்திற்குப் பிறகு நான் நடிக்கமாட்டேன் என்றுதான் சொல்லி வைத்திருந்தேன். திருமணத்திற்குப் பிறகு இந்த விஷயத்தை என் மாமியாரிடம் சொன்னதும், 'உனக்கு என்ன பிடிக்குமோ அதை செய்.. எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை ' என்று கூறிவிட்டார் . அதற்குப் பிறகு, இதோ இப்போது வரை நடித்துக் கொண்டிருக்கிறேன். என் கணவரின் முழு ஒத்துழைப்புடன் நடிக்கிறேன். என்னுடைய முதல் ரசிகரும் முதல் விமர்சகரும் அவர்தான் என்கிறார் காயத்ரி.

காதல் திருமணம்

காதல் திருமணம்

எங்களுடையது காதல் திருமணம். கணவர் குமார்... செல்ல மகள் பூஜா, இப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். சீரியலிலும் கணவர் பெயர் குமார். சீரியலில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு நேர் எதிராக இருப்பேன். வீட்டில் நான் கோபப்படவே மாட்டேன்.

பிரகாஷ் கலகலப்பு

பிரகாஷ் கலகலப்பு

சீரியல் செட்டில் என்னுடன் அனைவரும் கலகலப்பாகவே பழகுவார்கள். பிரகாஷ் கேமராவிற்கு முன்புதான் கோபமாக பேசுவார். நேரில் ரொம்ப கலகலப்பு. நிர்மலா அம்மா குடும்பத்தில் இருப்பது போல பழகுவார்கள். சினிமாவில் எப்போதாவதுதான் சந்தித்துக்கொள்வோம். சீரியலில் அப்படி இல்லை. தினசரி சந்தித்து பேசுகிறோம்.

திட்டு வாங்கறேன்

திட்டு வாங்கறேன்

அண்ணியார் கேரக்டர்ல நடித்த பிறகு வெளியில் தலைகாட்டவே பயமாக இருக்கிறது. நிறைய பெண்களிடம் திட்டு வாங்குகிறேன். புரிந்து கொண்டவர்கள் கையெழுத்து வாங்குவார்கள். செல்ஃபி எடுப்பார்கள். ஆனால் திட்டுவாங்கியதுதான் அதிகம். இதனால் அதிகம் வெளியிடங்களுக்கு செல்வதில்லை.

பத்திரம் எங்கேயிருக்கு?

பத்திரம் எங்கேயிருக்கு?

இப்போதைக்கு தமிழ்நாட்டில் அனைவரையும் கேட்கும் விசயம் ஜெய்ஹிந்த் விலாஸ் பத்திரம் எங்கே இருக்கு என்பதுதான். அது எங்கேயிருக்கு என்பது எனக்கே தெரியாது. அது சஸ்பென்ஸ் தெய்வமகள் சீரியல் பார்த்து தெரிஞ்சுக்கங்க என்று சொல்லி விட்டு கிளம்பிவிட்டார் காயத்ரி.

English summary
My husband is my best fan and first critic says Deivamagal Serial Villi Gayathri. Deivamagal story revolves around the villi Gayathri the eldest daughter in law of Jaihind Vilas, wants to amass the family's wealth

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil