»   »  'பேய்'களை களமிறக்கி முட்டாள்களாக்கும் டிவி சீரியல்கள்.. 'தெய்வமகள் காய்த்ரி' பேயும் வருதாமே?

'பேய்'களை களமிறக்கி முட்டாள்களாக்கும் டிவி சீரியல்கள்.. 'தெய்வமகள் காய்த்ரி' பேயும் வருதாமே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமாவில்தான் பேய்கதைகளின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது என்றால் வீட்டின் நடுக்கூடத்தில் இருக்கும் சின்னத்திரையிலும் பேய்கள், ஆவிகளின் அட்டகாசம் அதிகமாகிவிட்டது.

தொண்ணூறுகளில் ‘விடாது கருப்பு' என்ற அமானுஷ்யத் தொடரைப் போட்டு ரசிகர்களை ஆட்டி வைத்தார்கள். பிறகு வந்த குட்டி பத்மினி

அமானுஷ்ய தொடர்களாக எடுத்து வந்தார். இந்திரா சௌந்தராஜன் கதைகளை இயக்கிய நாகா அமானுஷ்யத்தை குத்தகைக்கு எடுத்தவர் போல சீரியல்களை இயக்கி வந்தார். சுவாரஸ்யத்தை ஏற்படுத்திய இந்த சீரியல்கள் இல்லத்தரசிகள் மட்டுமல்லாது சிறுவர்களையும் கவர்ந்தது.

சில வருடங்கள் பேய்கள், ஆவிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அழுகாச்சி சீரியல்களையும் அடுத்தவர் குடும்பத்தை கெடுக்கும் கதைகளையும் சீரியல்களாக்கினார்கள். இப்போதோ மீண்டும் பேய்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. காரணம் பேய்களுக்கு மக்கள் கொடுக்கும் வரவேற்புதான்.

ஆவிகளுக்குப் பிரியமானவள்

ஆவிகளுக்குப் பிரியமானவள்

சன் தொலைக்காட்சியில் ஞாயிறு இரவு நேரங்களில் பைரவி தொடர் ஒளிபரப்பாகிறது. இறந்து போனவர் ஆவியாக வந்து தனது ஆசையை,

பழிவாங்கும் என்னத்தை கதாநாயகியிடம் கூறி நிறைவேற்றிக்கொள்வதுதான் கதை. மூன்று வருடங்களுக்கு மேலாகவே இந்த தொடர் ஒளிபரப்பாகி வருவதுதான் ஆச்சரியம் வாரம் ஒருநாள் என்பதால் மக்கள் பார்க்கிறார்களோ என்னவோ?

ஆதிராவின் அச்சுறுத்தல்

ஆதிராவின் அச்சுறுத்தல்

இரவு பத்துமணியாகிவிட்டாலே இந்த பேய்ங்க தொல்லை தாங்க முடியலை... அதாங்க ஆதிரா பேய் வந்து அச்சுறுத்துகிறது. பூனை சத்தம்... வேகமாய் வீசும் காற்று... வெள்ளை புடவை கட்டிய பெண்(பேய்) என ஆரம்பம் என்னவோ வழக்கமான பேய் கதையாகத்தான் தொடங்கியது. இப்போது அமானுஷ்ய தொடராக போய்க்கொண்டிருக்கிறது. பேயைப் பற்றி பயமில்லாதவர்கள் பார்ப்பதால் டி.ஆர்.பி ஏறுகிறதோ என்னவோ?

செல்வி பேய்

செல்வி பேய்

வாணி ராணி சீரியலில் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்த அத்தை மகள் பேயாக வந்து செல்வியின் உடலில் புகுந்து கொண்டு ஆட்டி படைப்பதாக சில எபிசோடுகள் கொண்டு போனார்கள். அச்சுறுத்தும் இசை... கோணல் சிரிப்பு என பேயாக வந்து போனார் செல்வி. ஒருவழியாக அது பேய் இல்லை ஒருவித மனநோய் என்று முடித்து விட்டார்கள்.

இது சிரிப்பு பேய்

இது சிரிப்பு பேய்

வம்சம் தொடரில் சில எபிசோடுகள் பூமிகாவை கொலை செய்து விட்டு பேயாக உலாவ விட்டார்கள். அது அச்சத்தை தருவதற்குப் பதில்

வாசகர்களுக்கு சிரிப்பையே வரவழைத்தது. நல்லவேளை பூமிகாவை மறுபடியும் பிழைக்க வைத்து இப்போ டபுள் ஆக்சன் கதையாகவும் கொண்டு போகிறார்கள்.

புவனேஸ்வரி பேய்

புவனேஸ்வரி பேய்

மாலை நேரத்தில் மங்களகரமாய் சீரியல் போடுவார்கள். ஆனால் பாசமலர் என்று பெயர் வைத்து விட்டு பேய்கதையை ஒளிபரப்புகிறார்கள். அதுவும் வில்லி புவனேஸ்வரி ஒரு விபத்தில் இறந்துவிட அவர் பேயாக வந்து மல்லிகா என்ற பெண்ணின் உடம்புக்குள் புகுந்து கொண்டு செய்யும் அட்டகாசங்கள்தான் கதை.

ஓவர் ஆக்டிங் ஒடம்புக்கு ஆகாதே

ஓவர் ஆக்டிங் ஒடம்புக்கு ஆகாதே

செத்துப்போன புவனேஸ்வரி ஒரு கோழியின் உடலுக்குள் புகுந்து பின் முட்டையாக வந்து அந்த முட்டை உடைந்து மல்லிகாவின் உடலுக்குள் புகுந்து கொள்கிறதாம்... நல்லா விடுறாங்கப்பா ரீலு...அதுவும் புவனேஸ்வரி பேய் பிடித்திருக்கும் அந்த மல்லிகாவின் ஆவர் ஓவர் ஆக்டிங்டி அம்மா....

பேயா வருவானோ?

பேயா வருவானோ?

கல்யாண பரிசு தொடரில் மாமன் மகள் காயத்ரியின் மீது ஆசைப்படும் வில்லன் அவளை கடத்திக்கொண்டு போய்விடுகிறான். காயத்ரியை காப்பாற்ற வரும் கணவன் ஒரு கட்டத்தில் வில்லனை தள்ளிவிட அவன் இறந்து விடுகிறான். ஒரு வேளை அவனும் பேயாக வந்து காயத்ரியை துறத்துவானோ?

இனி அண்ணியார் பேய்…

இனி அண்ணியார் பேய்…

தெய்வமகள் தொடரில் வரும் வில்லி காயத்ரியின் வில்லத்தனங்கள் எல்லாமே எக்ஸ்ட்ரீம் லெவல். இப்படியும் யோசிப்பார்களா? என்று நினைக்கத்தூண்டும் அளவிற்கு இருக்கிறது. கொழுந்தன் மீதான கோபத்தில் காயத்ரி செய்யும் வில்லத்தனங்களைப் பார்த்து வெறுத்துப்போன அவள் கணவன் குமார், "உன்னோட பேச்சு, செயல் எதுவுமே சரியில்லை. இந்த குடும்பத்துக்கு எதிரா நீ செயல்பட்டது எல்லாமே உண்மைன்னு தெரியவந்தா அப்புறம் நான் என்ன செய்வேன்னு தெரியாது என்று எச்சரிக்கிறான். ஒருவேளை காயத்ரியை 'தற்கொலை செய்ய வைத்து' கொன்று விட்டு பேயாக உலாவ விட்டு விடுவார்களோ? என நேற்றே பார்வவையாளர்கள் யோசிக்கவும் தொடங்கிவிட்டார்கள் ( இயக்குநர் கவனத்துக்கு)

பேய்க்கு வந்த வாழ்க்கை

பேய்க்கு வந்த வாழ்க்கை

பேய் சீரியல்களுக்கு வரவேற்பு இருப்பதால் அதிக அளவில் இன்னும் எத்தனை பேயை பார்க்கணுமோ தெரியலையே... பயம் வர்றதுக்கு பதிலா ஒரே சிரிப்பு சிரிப்பா வருதுப்பா... நன்றாக முழிக்கும் பேய் விழிகள் கொண்ட பெண்கள் சீரியலில் நடிக்கத் தேவை என்று விளம்பரம் வந்தாலும் ஆச்சரியமில்லை மக்களே!

English summary
Horror TV shows in Tamil Nadu made big impact for tamil viewers to scare themselves. Boomika, Athira, bhuvaneswari so many ghosts are entering in our house.
Please Wait while comments are loading...