பாரதி கண்ணம்மாவில் மீண்டும் காதல் காட்சிகள்...வெண்பாவுக்கு பிரேக் கொடுத்தாச்சா ?
சென்னை : விஜய் டிவி சீரியல்களில் டாப் லிஸ்டில் இருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இது மலையாள டிவி சேனலில் ஒளிபரப்பான கருத்தமுத்து சீரியலின் ரீமேக் தான். சில விஷயங்கள் லாஜிக் இல்லாமல் இருந்தாலும் அதிக சுவாரஸ்யங்களுடன் கலந்து கதை நகர்வதால், சின்னத்திரை ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
இதில் பாரதியாக அருண் பிரசாத்தும், கண்ணம்மாவாக ரோஷினி ஹரிபிரியனும், வெண்பாவாக ஃபரீனா ஆசாத்தும் நடித்து வருகின்றனர். கருப்பாக இருக்கும் பாரதியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் டாக்டராக இருக்கும் பாரதி. ஆரம்பத்தில் கண்ணம்மாவை ஏற்காத மாமியார் சவுந்தர்யா, பிறகு அதிக பாசம் காட்டுகிறார். ஆனால் அவரை ஒரு தலையாக காதலித்து வரும் தோழியான டாக்டர் வெண்பா, பல சதி வேலைகள் செய்து பாரதியையும் கண்ணம்மாவையும் பிரிக்கிறார்.
பாரதியின் சந்தேகத்தால், கர்ப்பிணியாக வீட்டை விட்டு வெளியேறும் கண்ணம்மாவிற்கு இரட்டை குழந்தை பிறக்கிறது. அதில் ஒன்றை சவுந்தர்யா எடுத்துச் சென்று வளர்க்கிறார். இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை அப்பாவிடமும், மற்றொரு குழந்தை அம்மாவிடமும் வளர்கின்றன. பாரதியிடம் வளரும் ஹே படிக்கும் பள்ளியிலேயே சமையல் அம்மாவாக வேக்கு சேர்கிறார் கண்ணம்மா. இருக்கும் பாசம் ஏற்படுகிறது. இதனால் அவர்களை பிரிக்க ஹேமாவை அமெரிக்கா அழைத்துச் செல்ல முயற்சிக்கிறார் பாரதி.

டிராக் மாறும் கதை
அதற்குள் வெண்பாவால் கடத்தப்படும் ஹேமா, கண்ணாம்மாவால மீட்கப்படுகிறார். பிறகு மீண்டும் வலிப்பு வருகிறது. இதனால் அமெரிக்கா பயணத்தை ரத்து செய்கிறார் பாரதி. இதையே காரணமாக வைத்து பாரதியை திருமணம் செய்யும் முயற்சியை ஆரம்பிக்கிறார் வெண்பா. அதுவரை கண்ணம்மா மீது பாரதியை வெறுப்பை காட்டுவதாகவும், வெண்பாவின் சதியில் சிக்கவதாகவும் கதை சென்றது.

ஃபரீனாவால் மாறும் கதை
ஆனால் வெண்பாவாக நடிக்கும் ஃபரீனா நிஜ வாழ்க்கையில் கர்ப்பத்தை அறிவித்ததும், கதையின் போக்கே மாறி விட்டது. பிரசவத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன் சீரியலில் இருந்து பிரேக் எடுத்துக் கொள்ள போவதாகவும், ஆனால் வெண்பா கேரக்டரில் தானே தொடர போவதாகவும் அறிவித்தார். இதற்கிடையில் விதவிதமாக கர்ப்ப கால ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார் ஃபரீனா.

மனம் மாறும் பாரதி
இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில், மகள் ஹேமாவிற்காக தனது கோபம், பிடிவாதத்தை விட்டு கண்ணம்மாவின் வீட்டிற்கு செல்கிறார் பாரதி. ஹேமாவையும், கண்ணாம்மா வீட்டில் கொண்டு போய் விடுகிறார். தற்போது கதை வெண்பா இல்லாமல், பாரதி, கண்ணம்மா, குழந்தைகள் ஹேமா, லட்சுமி ஆகியோரை சுற்றியே செல்கிறது.

கண்ணம்மா வீட்டில் தங்கும் பாரதி
லேட்டஸ்ட் ப்ரோமா படி, கண்ணாம்மா வீட்டிற்கு பாரதி செல்லும் நேரத்தில் அந்த ஏரியாவில் அதிகமானவர்களுக்கு கொரோனா இருப்பதாக கூறி அதை ரெட் ஜோன் பகுதியாக மாற்றி விடுகின்றனர். இதனால் அங்கிருந்து வீட்டிற்கு செல்ல முடியாமல் இருக்கும் பாரதியை குழந்தைகள் இருவரும் கண்ணம்மாவின் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்கள். பாரதியும் வேறு வழியின்றி கண்ணம்மாவில் வீட்டில் குழந்தைகளுடன் தங்குகிறார்.

மீண்டும் காதல் காட்சிகள்
இதற்கு முன்பே கடந்த வாரம், தான் உடைத்த பூச்செடிகளை திரும்ப வாங்கி வந்து வைக்கிறார் பாரதி. அப்போது செடியை நடுகையில் பாரதியின் கைகள், கண்ணாவின் கைகள் மீது படுகிறது. அத்துடன் வீடியோ காலில் ஹேமாவுடன் பேசும் பாரதி, கண்ணம்மாவை அடிக்கடி பார்ப்பது, ஹேமாவிற்கு கொடுப்பது போல் ஃலையிங் கிஸ் கொடுத்து, ஐ லவ் யூ செல்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பாரதி, கண்ணம்மா இடையே மீண்டும் காதல் காட்சிகள் காட்டப்படுகிறது. இது பாரதியும், கண்ணம்மாவும் மீண்டும் ஒன்று சேருவதற்கான முன்னோட்டமாக கூட இருக்கலாம். அதே சமயம் வெண்பா கேரக்டருக்கு பிரேக் கொடுப்பதற்காக கூட கதையில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

வெண்பா கேரக்டருக்கு பிரேக்கா
இனி வெண்பாவாக நடிக்கும் ஃபரீனாவின் பிரசவம் முடிந்து அவர் மீண்டும் ஷுட்டிங்கிற்கு திரும்பும் வரை பாரதி, கண்ணம்மா, குழந்தைகள் சுற்றியும், கர்ப்பிணியாக இருக்கும் அஞ்சலியின் உடல்நிலை போன்ற விவகாரங்களை சுற்றியே கதை நகரலாம். அத்துடன் வெண்பாவும் வெளிநாடு, வெளியூர் சென்று விட்டதாக கூறி அவர் கேரக்டரை காட்டாமல் இருக்கலாம்.


Click it and Unblock the Notifications











