இடம் மாறிய குழந்தைகள்... பாரதி கண்ணம்மாவில் அடுத்து இது தான் நடக்க போகுதா ?

சென்னை : அடுத்தடுத்த ட்விஸ்ட், சஸ்பென்ஸ் என சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல். சமீப நாட்களாக ஒளிபரப்பாகும் எபிசோட்களை பார்க்கும் போது, ஜெய்சங்கர் நடித்த குழந்தையும் தெய்வமும் படத்தை கலரில் பார்ப்பது போன்ற தோற்றம் கூட சிலருக்கு ஏற்பட்டுள்ளது.

வில்லியான டாக்டர் வெண்பா ரோலில் நடிக்கும் ஃபரீனா ஆசாத் நிஜத்தில் கர்ப்பமாக இருப்பதால் அவருக்கு பிரேக் கொடுப்பதற்காகவோ என்னவோ, கதை சற்றே டிராக் மாறி உள்ளது. பாரதி, கண்ணம்மா இடையேயான காதல் காட்சிகளால் மீண்டும் இருவரும் சேரப் போகிறார்கள் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்தனர். தற்போது பாரதி, கண்ணம்மா மற்றும் குழந்தைகளை மட்டும் வைத்தே கதை நகர்த்தப்பட்டு வருகிறது.

எப்போப்பா சொல்லுவீங்க

எப்போப்பா சொல்லுவீங்க

சமாதானம் ஆகி கண்ணம்மாவை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்ததாக காட்டப்பட்ட பாரதி, திடீரென கண்ணம்மாவிடம் வளரும் லட்சுமி, கண்ணம்மாவின் மகள் என்பதை தெரிந்து மீண்டும் கோபப்படுகிறான். குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து தன்னை ஏமாற்றி விட்டதாக நினைத்து, சண்டையிடுகிறான். இதனால், எப்போ தான்ப்பா பாரதிக்கு குழந்தைகள் பற்றிய உண்மையை சொல்வீர்கள் என ரசிகர்கள் கேட்க துவங்கி விட்டனர்.

லட்சுமியை பிரியும் கண்ணம்மா

லட்சுமியை பிரியும் கண்ணம்மா

லட்சுமி யார் என்பதை கண்ணம்மா வாயால் தெரிந்து கொள்வதற்காக அவளை தன் வீட்டிற்கு தூக்கி செல்கிறான் பாரதி. மகள் லட்சுமியை கூட்டிச் செல்ல கண்ணம்மாவும் பாரதியின் வீட்டிற்கு செல்கிறாள். ஆனால் கண்ணம்மா என்ன சொன்னாலும் அவளுடன் லட்சுமியை அனுப்ப மறுக்கிறான் பாரதி. இதனால் வேறு வழியின்றி, லட்சுமியை பாரதியின் வீட்டிலேயே விட்டு செல்கிறாள் கண்ணம்மா.

இடம் மாறிய குழந்தைகள்

இடம் மாறிய குழந்தைகள்

இதுவரை பாரதியிடம் வளர்ந்த ஹேமா, தற்போது கண்ணம்மா வீட்டிலும், கண்ணம்மாவிடம் வளர்ந்த லட்சுமி, பாரதியின் வீட்டிலும் இருக்கும் சூழல் ஏற்படுகிறது. இனி அடுத்து என்ன நடக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதனால் சீரியலின் டிஆர்பி தொடர்ந்து டாப்பிலேயே இருந்து வருகிறது.

அடுத்து என்ன நடக்கும்

அடுத்து என்ன நடக்கும்

விறுவிறுப்பான இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை சூசகமாக சொல்லும் வகையில் சில ப்ரோமோ ஃபோட்டோக்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, கண்ணம்மாவிடம் ஹேமா தாய் பாசத்தை உணர்ந்ததை போல், பாரதியிடம் லட்சுமி தந்தை பாசத்தை அனுபவிக்க போகிறார். ஆனால் லட்சுமியை பிரிந்து தவிக்கும் கண்ணம்மாவை சமாதானப்படுத்துவதற்காக, மாமியார் செளந்தர்யா ஒரு ஐடியா செய்கிறார்.

அப்படி என்ன ஐடியா

அப்படி என்ன ஐடியா

பாரதி, கண்ணம்மா மற்றும் குழந்தைகளை ஒன்று சேர்ப்பதற்காக அஞ்சலிக்கு வளைகாப்பு நடத்த போகிறார்கள். இந்த வளைகாப்பு எபிசோட்டில் அகிலன் கேரக்டர் மாற்றப்படுகிறது. இவருக்கு பதில் இனி இவர் என அகிலனாக என்ட்ரி ஆகிறார் நடிகர் சுகேஷ். புதிய அகிலன் அறிமுகத்துடன், பாரதி, கண்ணாம்மா, குழந்தைகள் என அனைவரும் ஒரே குடும்பமாக வளைகாப்பில் கலந்து கொள்கிறார்கள்.

மீண்டும் கனவா

மீண்டும் கனவா

அதோடு வளைகாப்பில் பந்தியில் பாரதியின் அருகே கண்ணம்மா அமர்ந்து உணவு பரிமாறி பேசும் சீன்கள் நடக்கப் போகிறது. இப்போதாவது உண்மை தெரிந்து பாரதியும், கண்ணம்மாவும் இணைவார்களா என ரசிகர்கள் வழக்கம் போல் எதிர்பார்க்க, அதுவும் கனவு சீன் என காட்ட போகிறார்கள்.

அஞ்சலி பற்றிய ரகசியம்

அஞ்சலி பற்றிய ரகசியம்

கண்ணம்மாவின் குழந்தைகள் பற்றிய ரகசியம் தெரிகிறதோ இல்லையோ, முதலில் அஞ்சலியின் உடல்நிலை பற்றிய ரகசியத்தை நேரம் பார்த்து உடைக்க போகிறார் வெண்பா. அதற்கு பிறகு கண்ணம்மா, பாரதி கதையை திரும்ப காட்ட போகிறார்கள். ஃபரீனாவின் பிரசவம் முடியும் வரை, அஞ்சலியை சுற்றியே பெரும்பாலான கதை நகரும். அவ்வப்போது குழந்தைகளை வைத்து பாரதி, கண்ணம்மா இடம் பெறும் சீன்களை காட்ட உள்ளனர்.

வெண்பா வந்தா தான் முடியுமா

வெண்பா வந்தா தான் முடியுமா

வெண்பாவின் ரீஎன்ட்ரிக்கு பிறகு பரபரப்பாக பாரதி - கண்ணம்மா இடையேயான சஸ்பென்ஸ் காட்சிகள், ட்விஸ்ட்கள் இடம்பெறும். குழந்தைகள் பற்றிய உண்மைகள் தெரிய வரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X