»   »  சீரியஸ் சீரியல்களுக்கு மத்தியில் ஒரு சிலிர்க்க வைக்கும் பேய் சீரியல்.... திக் திக் திகில்!

சீரியஸ் சீரியல்களுக்கு மத்தியில் ஒரு சிலிர்க்க வைக்கும் பேய் சீரியல்.... திக் திக் திகில்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமாவில்தான் பேய்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது என்றால் டிவி சீரியல்களிலும் பேய்களின் ஆதிக்கம்தான். அமானுஷ்ய தொடர்களும் பேய் தொடர்களும் ஒளிபரப்பாகி வரும் நேரத்தில் வேந்தர் டிவியில் 7ம் உயிர் என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அதற்கு போட்டியாக இப்போது புதுயுகம் டிவியில் திக் திக் திகில் என்ற அமானுஷ்ய தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

விஞ்ஞான வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் இன்றைய காலத்திலும், காரணம் கண்டறியமுடியாத அமானுஷ்ய நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதை சினிமாவாக எடுத்து வந்தவர்கள் திரைப்படங்களுக்கு கிடைத்த வரவேற்பினை பார்த்து இப்போது சீரியலாக எடுக்க ஆரம்பித்து விட்டனர்.

மர்ம சக்திகள்

மர்ம சக்திகள்

ஆத்மா, ஆவி, பேய், பிசாசு போன்ற கண்ணுக்குத் தெரியாத சக்திகள் மனித வாழ்க்கையில் குறுக்கிடுவது மட்டுமின்றி, சில மரணங்களுக்கும் பேரழிவுக்கும் காரணமாக இருக்கின்றன.
இதுபோன்ற திகில் சம்பவங்களை மையப்படுத்தி, 'திக்... திக்... திகில்' என்ற அமானுஷ்ய தொடர் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

காட்டுக்குள் கதை

காட்டுக்குள் கதை

அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் நீர் வீழ்ச்சியில் குளிப்பதற்காக இளைஞர் பட்டாளம் ஆட்டம்பாட்டத்துடன் செல்கிறது. அந்த கும்பலில் ஒருவன் மட்டும் திடீரென காணாமல் போகிறான். அவனை தேடிக் கண்டுபிடிக்க முயலும் மற்றவர்களுக்கும் அடுத்தடுத்து ஆபத்து நிகழ்கிறது.

அலையும் ஆவி

அலையும் ஆவி

காட்டுக்குள் நுழையும் மனிதர்களின் உயிரைக் குடிப்பதற்காக ஆவி அலைகிறது என்று தெரியவருகிறது. அந்த ஆவியின் பிடியில் இருந்து இளைஞர்களால் தப்பிக்க முடிந்ததா என்பதை திக்திக் திகிலுடன் விவரிக்கிறது இந்தத் தொடர்.

ரத்தம் குடிக்கும் பேய்

ரத்தம் குடிக்கும் பேய்

நடமாடும் பிணங்கள், டிராகுலா, ரத்தம் குடிக்கும் பேய் ரயில் ஆவி என்று பல்வேறு வித்தியாசமான திகில் சம்பவங்களின் தொகுப்பாக, ‘திக்... திக்... திகில்' தொடர் அமைந்துள்ளது. கிராபிக்ஸ் தொழில்நுணுக்கமும் திகிலூட்டும் இசையுமாக கலக்கலாக தயாரிக்கப்பட்டுள்ளது பேய் தொடர்.

தனியாக பார்க்காதீங்க

தனியாக பார்க்காதீங்க

இந்தத் தொடரில் ரோஷிணி சோப்ரா, ஆஷ்கா கொராடியா, விவான், கெளதம் போன்ற பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இந்தத் தொடரை தனியே பார்க்கும் எவருக்கும் நிச்சயம் பயம் உண்டாகும். விறுவிறுப்பும் திரில்லும் விரும்புபவர்கள் புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரையிலும் தினமும் 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதன் மறுஒளிபரப்பு நண்பகல் 12.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

English summary
A new horror serial telecast on Pudhuyugam tv weekdays at 8.30 P.M.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil