»   »  நந்தினி என் கதை... சுந்தர்.சி ஏமாற்றிவிட்டார் - இயக்குநர் புகார்

நந்தினி என் கதை... சுந்தர்.சி ஏமாற்றிவிட்டார் - இயக்குநர் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'நந்தினி' என்ற திகில் தொடரை நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி. தயாரித்து இயக்கி வருகிறார். பாம்பு, பேய், ஆவி, செய்வினைகள் நிறைந்த இந்த சீரியல் தினசரி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். பேய்கள் ஒரு பக்கம் பழிவாங்க காத்திருக்க பாம்பும் ஒரு பக்கம் புற்றுக்குள் இருந்து சீறிக்கொண்டிருக்கிறது.

இந்த சீரியல் பற்றி பலவித சர்ச்சைகள் ஒருபக்கம் உலாவி வரும் நிலையில் கதையே திருட்டு கதை என்று குஷ்புவின் கணவருக்கு எதிராக புகார் பட்டியல் வாசிக்கிறார் அப்பாவி இயக்குநர் ஒருவர்.

திருட்டு கதை

திருட்டு கதை

நந்தினி சீரியலின் கதை என்னுடையது என்றும், அதை வாங்கிய சுந்தர்.சி எந்த பணமும் கொடுக்காமல் ஏமாற்றிவருவதாக நடிகரும் இயக்குநருமான வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

நம்பிக்கை துரோகம்

நம்பிக்கை துரோகம்

நந்தினி என்னோட கதை. ஒரு மனிதனுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு இயக்குநர் சுந்தர் சி எனக்கு செஞ்சிட்டார் என்று கூறியுள்ளார் வேல்முருகன்.

ஏமாற்றி விட்டார்

ஏமாற்றி விட்டார்

இந்தக் கதையை என்கிட்ட வாங்கிட்டு அவர் சொன்னது, ‘உங்களுக்கு பணம்தானே பிரச்சினைஅதை நான் பாத்துக்கிறேன்.. உங்க குடும்பத்துக்கு தேவையானதைப் பாத்துக்கிறேன்'னு சொன்னார். ஆனால் அதில் எதையுமே அவர் செய்யல" என்றார் வேல்முருகன்.

கண்ணீர் கதை

கண்ணீர் கதை

முன்பெல்லாம் சினிமாவில் கதையை திருடிவிட்டார்கள் என்ற புகார் கிளம்பும் இப்போதோ சீரியல் கதையை திருடிவிட்டார்கள் என்ற புகார் எழுந்துள்ளது. சன்டிவியில் நிஜங்கள் நிகழ்ச்சியில் ஏழை மக்களின் கண்ணீர் கதைகளை கேட்டு டிஆர்பி எகிற வைக்கும் நடிகை குஷ்பு, தனது கணவருக்கு எதிரான புகாரை காது கொடுத்து கேட்பாரா? பாதிக்கப்பட்ட இயக்குநருக்கு எதிராக நியாயம் கிடைக்குமா?

English summary
A film director has claimed that Sundar C's TV serial Nandhini is his story and said that Sundar C has cheated him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil