For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கவின் - லாஸ்லியா காதலைப் பிரிக்க சேரப்பா கேம் ஆடுகிறார்’.. இயக்குனர் வசந்தபாலன் கடும் கோபம்..!

|
Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 82 : Kavin friend visit BB House

சென்னை: பிக் பாஸ் கவின் - லாஸ்லியா காதல் குறித்து இயக்குனர் வசந்த பாலன் பேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நல்ல படங்களை கொடுப்பவர்களில் ஒருவர் இயக்குனர் வசந்த பாலன். வெயில், அங்காடித் தெரு, காவிய தலைவன் போன்ற தரமான படங்களை இயக்கியவர். தற்போது ஜி.வி.பிரகாஷை வைத்து ஜெயில் எனும் படத்தை இயக்கியுள்ளார். சென்னை கண்ணகி நகர் பகுதியை பற்றிய படம் இது.

அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முறையை கதைக்களமாகக் கொண்ட படங்களை எடுப்பதில் வல்லவரான வசந்தபாலன், அதனூடே மெல்லிய அவர்களின் காதல் உணர்வுகளையும் பதிவு செய்ய மறப்பதில்லை.

சேரன் பற்றிய பதிவு

சேரன் பற்றிய பதிவு

சமீபகாலமாக பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி அவ்வப்போது தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் வசந்த பாலன். இயக்குனர் சேரன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றது குறித்து மிகவும் ஆதங்கப்பட்டார். பல்வேறு அவமானங்களை அவர் சந்தித்து வருவதாகவும், எனவே அவர் உடனடியாக வெறியேற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் கவின், லாஸ்லியா காதல் பற்றி ஒரு நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார் வசந்த பாலன்.

கேரள பிக் பாஸ்

கேரள பிக் பாஸ்

அதில் அவர் கூறியிருப்பதாவது, "கேரளா பிக்பாஸ் சீசன் 1 தொடரில் சின்னத்திரை தொகுப்பாளினி பியர்லே மானே (Pearle Maaney) மற்றும் சின்னத்திரை நடிகர் ஸ்ரீனிஷ் அரவிந்த் (Srinish Aravind) கலந்து கொண்டு அங்கேயே ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டு, தங்கள் காதலை வெளிப்படுத்தி அதை கொண்டாடினார்கள்.

காதல் கொண்டாட்டங்கள்

காதல் கொண்டாட்டங்கள்

நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து திருமணம் செய்து கொண்டார்கள்.அவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலை வெளிப்படுத்திய,கொண்டாடிய தருணங்களை பார்கையில்,எந்த திரைப்பட இயக்குநரும் காட்சிப்படுத்த முடியாத கண்கொள்ளா காதல்.பார்க்க பார்க்க தித்திக்கும் காதல்.

சேரவிடாத சேரப்பா

சேரவிடாத சேரப்பா

ஆனால் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேர்மாறாக லாஸ்லியா,கவின் காதல் பேச்சுவார்த்தை வளரும் போதே "லாஸ்லியா நீங்க எதுக்கு வந்து இருக்கீங்க?...கேமை கவனித்து விளையாடுங்க" என்ற அறிவுரைகள் நாலாபக்கமிருந்தும் வந்தவண்ணம் இருந்தது. முக்கியமாக சேரப்பா இந்த காதலை சேரவிடக்கூடாதென்ற குறிக்கோளுடன் கேம் கேம் என்றபடியிருந்தார்.

நெகிழ்ச்சியான தருணம்

நெகிழ்ச்சியான தருணம்

அவர்களுடைய குடும்பம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தபோது மிக நெகிழ்ச்சியாக இருந்தது."வழக்கமா என் பொண்ணு இப்படியில்லை! ஏன் இப்படி மாறுனே? என்று லாஸ்லியாவின் அம்மா மற்றும் தங்கைகள் கேட்டவண்ணம் இருந்தார்கள், லாஸ்லியா செய்வதறியாது தவித்தாள். எப்படி போனே? அப்படியே திரும்பி எங்கிட்ட என் மகளா வரணும் என்று அந்த அம்மா கூறினார்கள்.

லாஸ்லியா அப்பா

லாஸ்லியா அப்பா

லாஸ்லியாவின் அப்பா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைகிறார். ஆனந்த யாழை மீட்டியவண்ணம் நா.முத்துக்குமார் எங்கிருந்தாலும் கவிதைவரிகளில் வாழ்ந்தவண்ணம் இருக்கிறான்.சியர்ஸ்.... அவரும் மகளின் காதலை விரும்பவில்லை. உன்னோட மகளுடைய கல்யாணத்துக்கா போற என்று சுற்றத்தார் தன்னை கேலி பேசினார்கள் என்று வலி மிகுந்த வார்த்தைகளை கூறினார்.

 காதலுக்கு எதிர்ப்பு

காதலுக்கு எதிர்ப்பு

அனைவரும் கேம் விளையாடுங்க! இது கேம்! இது கேம்! என்று அறிவுறுத்தியவண்ணம் இருக்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை உலகின் சின்ன மினியேச்சர் தானே பிக்பாஸ் இல்லம். இங்கே கேம் விளையாடக்கூடாது. வாழத்தானே வேண்டும். வாழும் போது காதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானே? காதலே காதலே என்ற 96 திரைப்படத்தின் பாடல் தான் மனதில் ஒலிக்கிறது", என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காதலே காதலே

காதலே காதலே

அனைவரும் கேம் விளையாடுங்க! இது கேம்! இது கேம்! என்று அறிவுறுத்தியவண்ணம் இருக்கிறார்கள். ஆனால் என்னைப் பொருத்தவரை உலகின் சின்ன மினியேச்சர் தானே பிக்பாஸ் இல்லம். இங்கே கேம் விளையாடக்கூடாது. வாழத்தானே வேண்டும். வாழும் போது காதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானே? காதலே காதலே என்ற 96 திரைப்படத்தின் பாடல் தான் மனதில் ஒலிக்கிறது", என அவர் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Director Vasantha Balan supports Kavin - Losliya love. In his facebook post, he quoted Kerala bigg boss real pair Pearle Maaney - Srinish love and marriage.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more