»   »  டிஸ்கவரி கிட்ஸ் சேனலில் 1001 இரவுகள்…

டிஸ்கவரி கிட்ஸ் சேனலில் 1001 இரவுகள்…

Posted By:
Subscribe to Oneindia Tamil

ிஸ்கவரி கிட்ஸ் சேனலில் உற்சாகமூட்டும் கதைகள் மற்றும் மறக்க முடியாத கதாபாத்திரங்களைக் கொண்ட '1001 இரவுகள்' அனிமேஷன் தொடர் செப்டம்பர் 15ம் தேதி முதல் தினமும் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

உள்ளத்தை கொள்ளை கொள்ளும் கதைகள், ஏராளமான சிரிப்பு, இடைவிடாத ஆக்ஷன் என எல்லாம் நிரம்பியது தான் இந்த '1001 இரவுகள்' தொடர்.

குழந்தைகள் அலாவுதீன், அலிபாபா கதாபாத்திரங்களைப் பற்றிய கதைகளை அறிந்திருப்பார்கள். இத்துடன் இன்னும் குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டிய 998 கதைகள் இருக்கின்றன.

சின்னத்திரையில்

சின்னத்திரையில்

9-ம் நூற்றாண்டு கால கட்டத்தில் இந்தியா, பாரசீகம், சீனா, பாக்தாத்தில் உலவிய கதைகள் இப்போது சின்னத்திரையில் பரந்து விரிகின்றன.

வாழ்வியல் கதைகள்

வாழ்வியல் கதைகள்

மனிதர்கள் ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ்வது, பொறுமையாகவும், தாராள மனதுடனும் வாழ்வது என வாழ்வின் முக்கியமான அம்சங்களை இந்தக் கதைகள் அழகுபட விவரிக்கின்றன.

மாயாஜால அனிமேசன்

மாயாஜால அனிமேசன்

குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டும் வகையில் மாயஜால அம்சங்களுடன் இந்தக் கதைகள் விரைவதால் இது குழந்தைகளின் ஸ்பெஷல்.

சிறப்பான கதைகள்

சிறப்பான கதைகள்

தி புரோக்கன் ஜுவல், தி, பிஷ், தி உல்ப் அன்டு தி விட்ச், அபுகாசிமின் ஸ்மெலி ஷு போன்ற சிறப்பான 1001 கதைகளை குழந்தைகளுடன் பெரியவர்களும் கண்டு ரசிக்கலாம்.

English summary
In its mission to offer distinct and enriching content for children, Discovery Kids presents 1001 NIGHTS – an animated series that brings the most famous and charming tales of 1001 Arabian Nights to the screen.
Please Wait while comments are loading...