»   »  விஜய் டிவியில் அன்புடன் டிடி - முதல் கெஸ்ட் சிவகார்த்திக்கேயன்

விஜய் டிவியில் அன்புடன் டிடி - முதல் கெஸ்ட் சிவகார்த்திக்கேயன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஏப்ரல் 1 முதல் அன்புடன் டிடி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. காபி வித் டிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திவ்யதர்ஷினிதான் இதன் தொகுப்பாளர்.

அன்புடன் டிடியின் முதல் சிறப்பு விருந்தினர் சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு சென்று வெற்றி பெற்றுள்ள விஜய் டிவியின் செல்லப்பிள்ளை சிவகார்த்திக்கேயன்.

விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் சிவகார்த்திக்கேயன் பங்கேற்றுள்ளார். தற்போது மிகப்பெரிய வெற்றி ஹீரோவாக உயர்ந்த பின்னர் மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று தனது வெற்றியின் ரகசியங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

காபி வித் டிடி

காபி வித் டிடி

விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியில் நட்சத்திரங்களை பேட்டி எடுத்து அவர்களின் மற்றொரு பக்கத்தை ரசிகர்களுக்கு தெரியவைத்தார் திவ்யதர்சினி. பிரபலமாக இருந்த அந்த நிகழ்ச்சி திடீரென நிறுத்தபட்டது.

அச்சம் தவிர்

அச்சம் தவிர்

காபி வித் டிடிக்கு சின்ன பிரேக் விட்டிருப்பதாக கூறிய டிடி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியான அச்சம் தவிர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.

பவர்பாண்டி

பவர்பாண்டி

தனுஷின் பவர் பாண்டி திரைப்படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தார். பவர் பாண்டி முடிவடைந்து விட்டது. சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு சென்றாலும் விளம்பரங்களிலும் அதிகம் நடித்து வருகிறார் டிடி.

அன்புடன் டிடி

காபி வித் டிடி நிகழ்ச்சியை போன்று, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விஜய் டிவியில் ‘அன்புடன் டிடி' என்ற பெயரில் புதிய வடிவில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார் டிடி.

சிவகார்த்திக்கேயன்

இந்த புதிய நிகழ்ச்சிக்கு முதல் விருந்தினராக வரப்போவது சிவகார்த்திகேயன். இதற்கான படப்பிடிப்பு நடந்த போது எடுத்த ஒரு செல்பியை சிவ கார்த்திக்கேயன் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்."நான் எப்போதும் செல்பி எடுக்கமாட்டேன், ஆனால் டிடியுடன் ஒரு செல்பி எடுத்துவிட வேண்டும் என தோன்றியது.." என கூறியுள்ளார்.

நன்றி சொன்ன டிடி

அன்புடன் டிடியில் பங்கேற்று அன்போடு நினைவுகளை பகிர்ந்து கொண்ட சிவகார்த்திக்கேயனுக்கு டுவிட்டரில் நன்றி கூறியுள்ளார் டிடி.

English summary
VJ Dhivyadarshini is host a new show Anbudan DD on Vijay TV. The first guest Vijay TV anchor-turned actor Sivakarthikeyan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil