பிக்பாஸ் சீசன் 9 : விஜய் சேதுபதி வாங்கப்போகும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் சீசன் 9 விரைவில் தொடங்க இருக்கிறது என்று விஜய் டிவி அறிவிப்பு வெளியிட்டு பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கடந்த சீசனை தொகுத்து வழங்கிய விஜய்சேதுபதியே இந்த சீசனை தொகுத்து வழங்க இருக்கும் நிலையில், இந்த சீசனுக்காக விஜய்சேதுபதி வாங்க இருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 8 சீசன் முடிந்து 9வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. முதல் சீசனில் இருந்தே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் யார் என்பதை தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். அந்த வகையில் பிக் பாஸ்சீசன் 9ல் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. இதில், பாக்கியலட்சுமி சீரியல் இனியா, டான்ஸர் சிந்தியா வினோலின், டான்ஸ் மாஸ்டர் சதீஷ் கிருஷ்ணன், நடிகர் பால சரவணன், நடிகர் புவி அரசு, இசையமைப்பாளர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா, குக் வித் கோமாளி 6 போட்டியாளர் ஷபானா ஷாஜஹான், நடிகை ஃபரினா ஆசாத், கூமாப்பட்டி தங்க பாண்டி, வி.ஜே. பார்வதி, மீடியா பிரபலம் அரோரா, நடிகர் அஸ்வின் குமார், நடிகர் சித்து சித் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது.

பிக் பாஸ் சீசன் 9: இதைத்தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சி நேற்று வித்தியாசமான ப்ரோமோ ஒன்றை வெளியிட்டது. அதில், உங்களுக்கு தெரியல எனக்கு புரியல என பலவிதமான கேள்விகளை கேட்டு வந்தார். இறுதியாக பிக் பாஸ் நிகழ்ச்சி பாக்க பாக்க தான் புரியும் போக போக தான் தெரியும் என வித்தியாசமான முறையில் பேசிய ப்ரோமோ ஒன்று வெளியானது. இந்த ப்ரோமோவை பார்த்த இணையவாசிகள், ப்ரோமோவே தரமா இருக்கு, ஒன்பதாவது சீசன் நிச்சயமாக வேற லெவலில் இருக்கும் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்
விஜய்சேதுபதி சம்பளம்: இந்நிலையில், 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் 9-வது சீசனை தொகுத்து வாங்க இருக்கும் விஜய்சேதுபதியின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதில், விஜய் சேதுபதிக்கு ரூ.75 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியதற்காக ரூ.60 கோடி அவருக்கு சம்பளமாக வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











