twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யாராவது செல்போன் கேட்டால் உடனே கொடுத்துடாதீங்க

    By Siva
    |

    சென்னை: வரலட்சுமி சரத்குமார் நடத்தும் உன்னை அறிந்தால் நிகழ்ச்சியில் ஒருவர் பேசியதை கேட்டால் பயமாக உள்ளது.

    வரலட்சுமி சரத்குமார் உன்னை அறிந்தால் என்ற நிகழ்ச்சியை ஜெயா டிவியில் நடத்தி வருகிறார். அந்த நிகழ்ச்சிக்கு வந்த ஹேமந்த் என்பவர் உதவி செய்யப் போய் பிரச்சனையில் சிக்கிய அனுபவத்தை கூறினார்.

    அவர் கூறியதாவது,

    செல்போன்

    செல்போன்

    நான் வேலை முடிந்து நண்பர்களுடன் பேருந்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன். பேருந்தில் கூட்டமாக இருந்தது. அப்பொழுது என் பின்னால் அமர்ந்திருந்த ஒருவர் தனது செல்போனில் சார்ஜ் இல்லை என்று கூறி கால் பண்ண என் செல்போனை கேட்டார். கூட்டம் அதிகமாக இருந்ததால் என்னால் அவரின் முகத்தை பார்க்க முடியவில்லை.

    மோசடி

    மோசடி

    செல்போனை கொடுத்தேன், பேசிவிட்டு திருப்பிக் கொடுத்துவிட்டார். டயல்டு காலில் எந்த எண்ணும் இல்லை. ஒரு இடத்தில் அவர் கீழே இறங்கிச் சென்றுவிட்டார். அதன் பிறகு 2, 3 நாட்கள் கழித்து என் நண்பர்கள் போன் செய்து உன் நண்பர் என்று கூறி வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக ஒருவர் பேசினார், யார் அவர் என்று கேட்டார்கள்.

    வாட்ஸ்ஆப்

    வாட்ஸ்ஆப்

    உடனே என் செல்போனை பார்த்தபோது என் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், சமூக வலைதள கணக்குளில் அவர் நுழைந்தது அப்பொழுது தான் தெரிய வந்தது. அவர் நான் இருக்கும் வாட்ஸ்ஆப் குரூப்புகளில் சேர்ந்து என் நண்பர்களை தொடர்பு கொண்டு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறியுள்ளார்.

    புகார்

    புகார்

    இது குறித்து நான் போலீசில் புகார் அளித்தேன். இதுவரை இதுபோன்று நடக்கவில்லை அதனால் இதை தகவலாக எடுத்துக் கொள்கிறோம் என்று போலீசார் தெரிவித்தனர். பின்னர் ஒருவர் கத்தாரில் இருந்து போன் செய்து உங்களால் தான் இங்கு வர முடிந்தது என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. விபரம் கேட்டபோது என் செல்போனை வாங்கி பேசிய நபர் நான் இருக்கும் வாட்ஸ்ஆப் குரூப் மூலம் அந்த நபரை தொடர்பு கொண்டிருக்கிறார்.

    கத்தார்

    அந்த நபருக்கு 18 வயது தான். ரூ. 3 லட்சம் வாங்கிக் கொண்டு டூரிஸ்ட் விசாவில் கத்தாருக்கு அனுப்பி வைத்துள்ளார். தான் ஏமாந்தது கூட அந்த பையனுக்கு தெரியவில்லை. பின்னர் அந்த பையன் போலீசில் புகார் செய்தபோது அவர்கள் என்னிடம் விசாரித்தார்கள். நான் ஏற்கனவே கொடுத்த புகார் பற்றி தெரிவித்த பிறகே என்னை விட்டார்கள். இல்லை என்றால் நான் தான் முதல் அக்யூஸ்ட் என்றார் அவர்.

    English summary
    A man named Hemanth has explained the ordeal he went through by lending a helping hand to a stranger in the TV programme being hosted by Varalaxmi Sarathkumar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X