twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தாளுக்கு போன் வேணாம்மா? நான் தப்பா சப்போர்ட் பண்ணிட்டேன்..பின் வாங்கிய கோபிநாத்

    |

    நீயா நானா நிகழ்ச்சியில் சுவாரஸ்யம், மனைவி தனக்கு செல்போனை தரவில்லை என்று புகார் அளித்த கணவர் சொன்னதை நம்பி கோபிநாத் வாக்குவாதம் செய்தார்.

    ஒரு கட்டத்தில் மனைவி, மிகவும் சாதாரணமாக, சார் இவர் செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடுகிறார் என்று சொல்ல திகைப்பான கோபிநாத் இவருக்கு போனே வாங்கி தராதீங்கன்னு ஜகா வாங்கினார்.

    நான் கூட என்னமோ ஏதோன்னு இவருக்கு சப்போர்ட் பண்ணிட்டேன், ஆன் லைன் ரம்மி விளையாடுகிறாம்ல என்று தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.

    நீயா நானா அப்பா மகள் பாசத்தால் உருகிப் போன விக்னேஷ் சிவன்.. என்ன சொல்லியிருக்காரு பாருங்க! நீயா நானா அப்பா மகள் பாசத்தால் உருகிப் போன விக்னேஷ் சிவன்.. என்ன சொல்லியிருக்காரு பாருங்க!

     செக்யூரிட்டி ஜாப் செய்தால் போன் வைத்துக்கொள்ளக்கூடாதா?

    செக்யூரிட்டி ஜாப் செய்தால் போன் வைத்துக்கொள்ளக்கூடாதா?

    நீயா நானா நிகழ்ச்சியில் கணவன் மனைவி வருமானம் குறித்த ஒரு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் கணவரை விட அதிகம் சம்பாதிக்கும் மனைவி, அதனால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி பேசப்பட்டது. பலரும் பல்வேறு விதமான பிரச்சினைகளை சொல்லிக் கொண்டிருந்த பொழுது ஒரு அப்பாவி கணவர் சார் ஒரு நிமிஷம் என்று சொல்லி, "என் மனைவி எனக்கு செல்போனை தர மாட்டேங்குறார் என்று அப்பாவியாக சொன்னார். என்னது செல்போன் இல்லையா? அதுவும் இந்த காலத்திலா? ஏன் உங்களுக்கு செல்போன் இல்லை? என்று கோபி கேட்க உடனடியாக குறுக்கிட்ட மனைவி சார் அவர் செக்யூரிட்டி ஜாப் செய்கிறார் அந்த இடத்தில் போன் அனுமதியில்லை, அதனால் ஃபோன் வைத்துக் கொள்வதில்லை. நான் ஆபீஸ் வேலை செய்கிறேன் அதனால் நான் போன் வைத்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

     கணவனுக்கு போன் வைத்துக்கொள்ள மறுக்கும் மனைவி

    கணவனுக்கு போன் வைத்துக்கொள்ள மறுக்கும் மனைவி

    "சார் அப்படி இருந்தாலும் எனக்கு எனக்குன்னு ஒரு போன் இருக்கணும் இல்ல சார் நான் நைட் வந்த பிறகு போன் பார்த்து ஏதோ பொழுது கழிப்பேன் அதுக்கு கூட எனக்கு அனுமதி இல்ல சார் நீங்க சொல்லி ஒரு போன் வாங்கி கொடுக்க சொல்லுங்க சார்" என்று அப்பாவியாக கணவன் சொல்ல மேலோட்டமாக பார்த்தால் என்னடா ஆஃபீசில் வேலை செய்யும் மனைவி கணவன் போன் வைத்துக்கொள்ள அனுமதி மறுப்பதா என தோன்றும். கோபிநாத்துக்கும் அதுதான் தோன்றியது, உடனடியாக கோபிநாத் "என்னங்க இது அநியாயமா இருக்குது ஒரு போன் கூட இல்லாமல் எப்படி வைத்திருக்கிறீர்கள்? அவருக்கு ஒரு போன் கூட வாங்கி தர கூடாதா" என்று கேட்டார்.

     இரவு ஒரு மணி நேரம் மட்டும் செல்போன்..அப்பாவி கணவன்

    இரவு ஒரு மணி நேரம் மட்டும் செல்போன்..அப்பாவி கணவன்

    "இல்ல சார் அவர் போனை வைத்துக்கொண்டு விளையாடிகிட்டே இருப்பாரு, தினமும் இரவு என் போனை வைத்து யூஸ் பண்றார் சார் அதனால போன அவருக்கு தேவை இல்லை" என்றார் மனைவி. என்னங்க இது, எந்த காலத்துல இருக்கீங்க, ஒரு அவசரத்துக்கு கூட யாரையாவது கூப்பிடணும் உங்களை கூப்பிட்டனும் என்றால் கூட அவருக்கு ஒரு போன் வேண்டாமா? என்ன நீங்க இப்படி இருக்கீங்க, அதுவும் நைட்டு பதினோரு மணிக்கு மேல நீங்க தூங்குனா பிறகு அவர் உங்கள் போன வச்சு விளையாடனும்னா? உண்மையிலேயே இதை நினைச்சா வினோதமா இருக்கு" என்று கோபிநாத் கொட்டி தீர்த்துவிட்டார்.

     இந்தாளுக்கு போன் வாங்கி தராதம்மா..கோபிநாத் கண்டிப்பு

    இந்தாளுக்கு போன் வாங்கி தராதம்மா..கோபிநாத் கண்டிப்பு

    "சார் அவர் 12 மணிக்கு வரைக்கும் விளையாடுறாரு, செல்போன்ல ஆன்லைன் ரம்மி விளையாடுகிறார். பையனையும் சேர்த்து கெடுக்கிறார் சார்" என்று மனைவி சொல்ல என்னது ஆன்லைன் ரம்மியா? என்று அதிர்ச்சியான கோபிநாத், "இந்தாளுக்கு போன் வாங்கி கொடுக்காதது கரெக்ட்தாம்மா, வாங்கிக்கூட கொடுக்காதது ரொம்ப சரி", என்று பொங்கிவிட்டார் கோபிநாத். நிகழ்ச்சியை பார்த்த மற்றவர்களும் கூட முதலில் அந்த கணவர் பக்கம் நியாயம் இருப்பதாக நினைத்தனர். என்னடா ஒரு மனைவி கணவருக்கு அனைத்து வருமானத்தையும் பிடுங்கி வைத்துக் கொண்டு ஒரு செல்போன் கூட வாங்கி தர மறுக்கிறாரே என்று. ஆனால் அந்த செல்போனை வைத்துக்கொண்டு ஆன்லைன் ரம்மி விளையாடுவதும், தன்னுடைய பிள்ளையையும் அதில் சேர்த்துக் கொள்வதையும் கேட்டவுடன் கோபிநாத் உள்ளிட்ட அனைவரும் மனைவி செய்தது நியாயம் என புரிந்துக்கொண்டனர்.

     செல்போன் ஹேக் செய்யப்பட்டு அந்தரங்க புகைப்படம், பணம் திருட்டுப்போக வாய்ப்பு

    செல்போன் ஹேக் செய்யப்பட்டு அந்தரங்க புகைப்படம், பணம் திருட்டுப்போக வாய்ப்பு

    அப்பாவியாக பேசிய கணவன் சாயம் கடைசியில் வெளுத்துப்போச்சு. இப்படிப்பட்ட ஆட்கள் தான் ஆன்லைன் ரம்மியில் இறங்கி பணத்தை இழந்து கடைசியில் தற்கொலை முடிவு வரை போகும் நிலை தமிழகத்தில் அடிக்கடி நடக்கிறது. இது தவிர இடையில் வரும் ஃபிஷிங் மெசேஜை கணவர் ஆன் செய்தால் செல்போனின் டேட்டா திருட்டு, ஆன் லைன் திருடர்கள் மனைவி வங்கிப்பணத்தை வழித்து திருடும் வாய்ப்பும் இருக்கு. இது தவிர மனைவியின் அந்தரங்க படம் எதாவது இருந்தாலும் இடையிடையே வரும் ஃபிஷிங் மெசேஜ் மூலம் செல்போனை ஹேக் செய்து எடுக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. தெரிந்தோ தெரியாமலோ அந்த மனைவி அவருக்கு போன் வாங்கித்தராமல் இருக்கிறார். அதே நேரம் அவரது செல்போனை கொடுத்தால் மேற்கண்ட ஆபத்தும் உள்ளது.

    English summary
    Interestingly, on the show Neeya Nana, Gopinath argued by believing the husband who had complained that his wife had not given him his cell phone. At one point, the wife, very casually, said, "Sir, he is playing online rummy on his cell phone," and Jaga asked Gopinath, "don't you buy him a phone?"
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X