»   »  என்னம்மா இப்படி பண்றீங்களேம்மான்னு யாரும் கேட்காதீங்க...: லட்சுமி ராமகிருஷ்ணன்

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மான்னு யாரும் கேட்காதீங்க...: லட்சுமி ராமகிருஷ்ணன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?' என்ற ஒரே ஒரு வார்த்தையை வைத்து கிண்டல் நிகழ்ச்சி செய்து லட்சுமி ராமகிருஷ்ணனை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் இந்த பாடல் குறித்து வெளியிட்ட கருத்து அவரை மிகவும் கோபப்படுத்தியது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமில்லாமல், தற்போது மீண்டும் அதே ஷோவை நடத்திக்காட்டுவேன் என அதிரடியாக கூறியுள்ளார்.

யுத்தம் செய், நான் மகான் அல்ல, கதகளி ஆகிய படங்களில் நடித்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன். திரைப்பட இயக்குநராகவும் இவர் வெற்றி பெற்றுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை நடத்திய ஷோ ஒன்றை நடத்தினார்.

இந்த நிகழ்ச்சியை மற்றொரு தொலைக்காட்சி கிண்டல் செய்தது, இதற்காக கோர்ட் படியேறினார் லட்சுமி ராமகிருஷ்ணன். அதே வார்த்தையை சிவகார்த்திகேயன் தன் பாடலில் பயன்படுத்தியதோடு அவர் வெளியிட்ட கருத்து குறித்து வெளியிட்ட கருத்து அவரை மிகவும் கோபப்படுத்தியது. இனி அதைப்பற்றி என்ன சொன்னாலும் கண்டு கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

சொல்வதெல்லாம் உண்மை

சொல்வதெல்லாம் உண்மை

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி, எனக்குள் நிறைய மாற்றங்களைக் கொண்டுவந்தது. பலரது வாழ்க்கையில் நடந்த சோகக் கதைகளைக் கேட்டுக் கேட்டு, ஒருகட்டத்துல என்னையே அது முடக்கிப் போட்டது. எங்கேயும் நிம்மதியா போக முடியலை, சினிமா பார்க்க முடியலை. மனசுக்குள்ள யாராவது ஒருத்தருடைய கதை எப்பவும் ஓடிக்கிட்டே இருந்தது. `இதுல இருந்து வெளியில வரணும், ஒரு பிரேக் எடுக்கணும்'னு தோணிச்சு. அதுதான் வெளியே வந்தேன் என்று கூறியுள்ளார்.

கவலைப்பட மாட்டேன்

கவலைப்பட மாட்டேன்

`என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?'னு என்னைக் காலாய்க்கவோ, திட்டவோ என்ன வேணும்னாலும் பண்ணுங்க. ஆனா, நான் அதை எல்லாம் சட்டையே செய்யப்போறது இல்லை என்று கூறியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

மீண்டும் சின்னத்திரையில்

மீண்டும் சின்னத்திரையில்

இதனிடையே இதேபோன்றதொரு நிகழ்ச்சியை மீண்டும் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளார். பல சேனல்கள் அதேபோன்றதொரு நிகழ்ச்சியை நடத்த அணுகுகிய நிலையில் அதற்கு பல நிபந்தனைகள் விதித்தாராம். எனவே சேனல்கள் தயங்கியதாக கூறப்பட்டது.

லட்சுமி ராமகிருஷ்ணன் அறிவிப்பு

இந்த நிலையில் ஜீ தமிழ் டிவியில் சொல்வதெல்லாம் உண்மை நடத்தும் சுதாசந்திரன் அந்த நிகழ்ச்சியை சரியாக நடத்தவில்லை என்றும் இதனால் டிஆர்பி இறங்கிவிட்டதாகவும் கூறப்பட்டது. எனவே ஜீ தமிழ் சேனலில் மீண்டும் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தப் போவதாகவும் சின்னத்திரை வட்டாரங்களில் தெரிவித்தன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

English summary
Dont ask about ennamma ippadi panreengalemma said Televison anchor and Actor lakshmi ramakrishnan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil