twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாடி ராசாத்தி... சுட்டி டிவியில் டோரா... குட்டீஸ் ஹேப்பி!

    By Mayura Akilan
    |

    தமிழ்ல ‘டோராவின் பயணங்கள்' என்ற பேர்ல இது ஒளிபரப்பாகுறது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். கற்றல் சார்ந்த இந்த நிகழ்ச்சி, உலகெங்கும் 35 மொழிகளுக்கு மேலாக மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

    இந்நிகழ்ச்சி, பள்ளி செல்ல ஆரம்பிக்காத குழந்தை முதல் அதுக்கு மேலே வயசுடைய குழந்தைகளுக்குக் கற்றுக்கொள்வதை எளிமையாக்கி, பிரச்சினைகளை எப்படித் தீர்க்கணும்னு சொல்லிக் கொடுக்குது.

    புகழ் பெற்ற சுட்டிகள் தொலைக்காட்சி நிறுவனமான 'நிக்லிடியோன்'நிக் ஜூனியர்''ன் தயாரிப்பு ''டோரா தி எக்ஸ்ப்ளோரர்'. 2000'ம் ஆண்டில் இருந்து நிக் ஜூனியரில் வெளியாகிறது.

    2007ம் ஆண்டு ஏப்ரல் 29 அன்று சுட்டி டிவியில் தமிழ் பேச ஆரம்பித்த டோராவும் புஜ்ஜியும் உடனடியாகப் பார்ப்பவர் மனதைக் கவர்ந்துவிட்டார்கள். தமிழ் பேசிவரும் டோரா, தமிழகக் குழந்தைகளிடையே ஒரு டாப் நிகழ்ச்சி. சில ஆண்டுகளாக சுட்டி டிவியில் வராமல் இருந்த டோரா தற்போது சுட்டி டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது. இது டோராவின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    சுட்டீஸ்க்கு பிடித்த டோரா

    சுட்டீஸ்க்கு பிடித்த டோரா

    டோரா என்கிற குட்டிப் பெண் தன் நண்பர்கள் டியாகோ என்ற சிறுவனுடனும், பூட்ஸ் என்ற குரங்குடனும் (பூட்ஸ்க்கு தமிழில் புஜ்ஜி என்று பெயர்) வெவ்வேறு இடங்களுக்கு செல்வாள். டி.வி. பார்க்கும் சுட்டிகளுக்கு அங்கே உள்ள விஷயங்களை கற்றுத் தருவாள். ஒவ்வொரு விஷயத்தையும் மூன்று முறை சொல்லித் தருவதால் எளிதில் சுட்டிகளின் மனதில் நிற்கிறது.

    டோராவின் பயணங்கள்

    டோராவின் பயணங்கள்

    டோரா தன் பயணங்களுக்கு தேவையான அத்தனை விஷயங்களையும் தன் பையில் வைத்திருப்பாள். எப்பவும் அவள் கூடவே வைத்து இருக்கும் 'மேப்' அவளுக்கு வழித் தடங்களை காண்பிக்கும். டோராவுக்கு ஃபுட்பால் விளையாட பிடிக்கும். தன் 'டெடி பியரை' கொஞ்ச பிடிக்கும். டோராவுக்கு தன் செல்ல நாய்க்குட்டி பெரிட்டோவுடன் விளையாடுவது ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

    டோராவின் நண்பர்கள்

    டோராவின் நண்பர்கள்

    டோரா இல்லாமல் புஜ்ஜி இல்லை. புஜ்ஜி இல்லாமல் டோராவும் இல்லை. டோராவின் கீ ஃபிரெண்டான இது, பேசும் சக்தி கொண்ட குரங்கு. தன்னுடைய சிவப்பு கலர் காலணிகளை ரொம்ப விரும்புறதால இதுக்குப் பூட்ஸ் (புஜ்ஜி) என்று பேர் வைத்துள்ளனர்.

    டோராவின் பேக்

    டோராவின் பேக்

    டோராவிடம் இருக்கும் இன்னொரு ஸ்பெஷல் விஷயம் அவளுடைய அப்பா, அம்மா கொடுத்த ஊதா வண்ண முதுகுப் பை. இந்தப் பை டோராவுக்கு தேவையான எல்லாத்தையும் கொடுக்கும். இந்தப் பைக்குள்ளதான் மேப் இருக்கும்.

    பேசும் மேப்

    பேசும் மேப்

    டோராவின் பேக்கிற்குள் உள்ள மேப் பேசும். உலகின் எந்த மூலைக்குப் போறதா இருந்தாலும், மேப்பிடம் வழி இருக்கும். ஒரே ஒரு பிரச்சினை என்னன்னா இந்த மேப் பேசுறதைவிட, நிறையா பாடும்.

    குழந்தைகள் பங்கேற்பு

    குழந்தைகள் பங்கேற்பு

    ஒவ்வொரு கதையோட ஆரம்பத்துலயும் டோரா ஒரு புது விஷயத்தை அறிமுகப்படுத்துவாள். அதன் பின்னணில இருக்கும் தகவல்களையும் சொல்லி, அதை எப்படிச் செய்றதுன்னு நமக்கு விளக்குவாள். இத்தொடரின் இமாலய வெற்றிக்குக் காரணம், இத்தொடரைப் பார்க்கும் ஒவ்வொரு குழந்தையையும் நிகழ்ச்சியில் ஈடுபாட்டுடன் பங்கேற்கச் செய்வதே.

    கற்றுக்கொடுக்கும் டோரா

    கற்றுக்கொடுக்கும் டோரா

    ஒவ்வொரு கதையிலும் டோரா பல புதிய வார்த்தைகளையும், அவற்றின் உச்சரிப்பையும், அதன் பயன்பாட்டையும் கதையின் போக்கிலேயே தெரிவிப்பாள். பார்ப்பவர்களையும் ஈடுபாட்டுடன் உச்சரிக்க வைப்பாள்.

    குழந்தைகளுடன் பேசுவாள்

    குழந்தைகளுடன் பேசுவாள்

    குழந்தைகளை நிகழ்ச்சியுடன் ஒன்றிப்போக வைக்க, டோரா பல கேள்விகளைக் கேட்பாள். பதில் சொல்லும் வரை காத்திருப்பாள் டோரா.

    குள்ளநரி

    குள்ளநரி

    ஸ்வைப்பர் என்ற குள்ளநரிதான் டோராவின் பயணங்களில் அதிகம் வரும் எதிரி. இந்தப் பேசும் நரி டோராவுக்கும், நண்பர்களுக்கும் தேவைப்படும் பல பொருட்களைத் திருடி ஒளிச்சு வைக்கும். பார்வையாளர்களுக்குச் சவாலும் விடும். ஒவ்வொரு முறையும் அதை "கண்டுபிடிக்கவே முடியாது" என்று நினைக்கும் ஸ்வைப்பருக்கு, உடனடியாகப் பதிலடி கொடுப்பாள் டோரா.

    விடுகதை

    விடுகதை

    டோராவின் பயணங்களில் பலமுறை அவள் ஒரு பாலத்தைக் கடக்க வேண்டி இருக்கும். அப்போதெல்லாம் இந்தக் குகை மனிதன் சில புதிர்களை, விடுகதைகளை போடுவான். அதற்குச் சரியான பதிலைச் சொன்னால்தான் பாலத்தைக் கடக்க முடியும்.

    நாம சாதிச்சிட்டோம்

    நாம சாதிச்சிட்டோம்

    ஒவ்வொரு பயணத்தின் முடிவிலும் டோராவும், புஜ்ஜியும் " நாம சாதிச்சிட்டோம்" என்று பாடியவாறே நிகழ்ச்சியை முடிப்பாங்க. ஜெயிச்சிட்டோம் என்று கூறுவதால் அது குழந்தைகளுக்கும் சாதித்த உணர்வைத் தரும். இப்போது குட்டீஸ்களை மகிழ்விக்க மீண்டும் வந்து விட்டாள் டோரா.

    குட்டீஸ்க்கு பிடித்த டோரா

    குட்டீஸ்க்கு பிடித்த டோரா

    டோரா கதை புத்தகங்கள், காமிக்ஸ் புத்தகங்கள், விளையாட்டு செய்முறை புத்தகங்கள், கற்பித்தல் புத்தகங்கள் என்று நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இதுவரை வெளிவந்துள்ளன. அத்துடன் டோரா பொம்மைகள், பைகள், அழகுசாதனப் பொருட்கள் என்று டோரா பெயர் தாங்கிய ஆயிரக் கணக்கான பொருட்கள் கிடைக்கின்றன. இனி இவைகளின் விற்பனை மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்து விடும்.

    English summary
    Dora the Explorer" features the adventures of young Dora, her monkey Boots, Backpack and other animated friends. Doravin Payanangal telecast on Chutti TV.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X