»   »  கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல... புதுயுகத்தில் தோஸ்த் படா தோஸ்த்

கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல... புதுயுகத்தில் தோஸ்த் படா தோஸ்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரியாலிட்டி நிகழ்ச்சிகளும், கேம் ஷோக்களும் சேனல்களில் அதிகரித்து விட்டன. அதுவும், புதிதாக ஆரம்பித்த சேனல்கள் எதையாவது யோசித்து கேம் ஷோக்களை ஒளிபரப்பி வருகின்றன.

புதுயுகம் தொலைக்காட்சியில் புத்தம் புதிய நிகழ்ச்சியாக வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 7.00 மணி முதல் 8:30 மணி வரை ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நியூ ரியாலிட்டி கேம் ஷோ தோஸ்த் படா தோஸ்த்.

பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியின் ரவுண்டுகளின் பெயர்கள்தான் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கிறது. எப்படி இப்படி யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ரூம் போட்டு யோசிப்பாங்களோ.

சின்னத்திரை நட்சத்திரங்களை சீரியல் அல்லாத நிகழ்ச்சிகளில் பார்ப்பதே ரசிகர்களுக்கு சுவாரஸ்யம்தான் போல அதனால்தான் பல சேனல்களில் சின்னத்திரை நட்சத்திரங்களை காண முடிகிறது.

மூன்று சுற்றுக்கள்

மூன்று சுற்றுக்கள்

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் தங்களது நண்பர்களோடு கலந்துகொண்டு விளையாடும் கலகலப்பான நிகழ்ச்சி இது. 'என்னய்யா சொல்லவர்றே' ‘கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல' ‘தில் இருந்தா துட்டு' என நிகழ்ச்சியின் மூன்று சுற்றுகளுமே சுவாரசியம்

விழாம போகணும்

விழாம போகணும்

குறிப்பாக, நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று போட்டியாளர்களையும் பார்வையாளர்களையும் ஒரு சேர பரபரப்புக்குள்ளாக்குகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் வழுக்குத் தரையில் கீழே விழுந்து விடாமல் நடந்து சென்று பண முடிப்பை அவிழ்க்கும் சுற்று நொடிக்கு நொடி திக் திக்.

இந்த வாரம் யார்? யார்?

இந்த வாரம் யார்? யார்?

இந்த வாரம் 'தோஸ்த் படா தோஸ்த்' நிகழ்ச்சியில்,சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ, சின்னத்திரை நடிகர் சரவணன்,சின்னத்திரை நடிகை நிஷா ஆகியோர் தங்களது நண்பர்களோடு சேர்ந்து விளையாடுகின்றனர்.

தோஸ்துகளை பாருங்களேன்

தோஸ்துகளை பாருங்களேன்

சின்னத்திரை நட்சத்திரங்களை மட்டுமல்லாது அவர்களின் நண்பர்களையும் பிரபலப்படுத்தும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது தோஸ்த் படா தோஸ்த். இந்த வாரம் இறுதிச் சுற்றில், வெற்றிபெற்ற அணி எது? புதுயுகத்தில், சனிக்கிழமை இரவு 7.00 மணிக்கு கண்டுகளியுங்கள்.

English summary
Pudhuyugam tv television telecast new game show Dhosth bada doshth every sunday 7 PM to 8.30 PM.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil