மீண்டும் கர்ப்பம்...ஆல்யாவால் ராஜா ராணி 2 சீரியலில் வரப் போகும் மாற்றம் இது தானாம்

சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான புகழ்பெற்ற சீரியல்களில் ஒன்று ராஜா ராணி. இதில் செம்பா கேரக்டரில் நடித்து சின்னத்திரை ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஆல்யா மானசா.

இந்த சீரியலில் நடிக்கும் போதே லீட் ரோலில் நடித்த சஞ்சீவ்வுடன் ஆல்யாவிற்கு காதல் ஏற்பட்டது. சரியான ஜோடி என அனைவராலும் புகழப்பட்ட இவர்கள் 2019 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கழித்து 2020 ல் மார்ச் மாதம் இவர்களுக்கு அயிலா சையது என்ற மகள் பிறந்தாள். சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவான ஆல்யா, தனது மகளின் ஒவ்வொரு நிகழ்வுகள் மற்றும் சஞ்சீவ் உடனான காதல் ஆகியவற்றை வீடியோ மற்றும் ஃபோட்டோக்களாக வெளியிட்டு வருகிறார்.

மீண்டும் நடிக்க வந்த ஆல்யா

மீண்டும் நடிக்க வந்த ஆல்யா

திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த ஆல்யா, குழந்தை பிறந்த பிறகு செமையாக வெயிட் போட்டிருந்தார். பிறகு திடீரென சில மாதங்களில் ஸ்லிம்மாகி ஸ்மார்ட்டான தோற்றத்திற்கு மாறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தற்போது ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார்.

கர்ப்பத்தை உறுதிப்படுத்திய சஞ்சீவ்

கர்ப்பத்தை உறுதிப்படுத்திய சஞ்சீவ்

ஷுட்டிங் ஸ்பார்டில் டப் ஸ்மாஷ் செய்த வீடியோக்கள், மகள் அயிலாவின் சேட்டைகள் ஆகிய வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார் ஆல்யா. இந்நிலையில் ஆல்யா மீண்டும் கர்ப்பமாக உள்ளதை சஞ்சீவ் சமீபத்தில் வெளியிட்டார். இதை வெட்கத்துடன் ஆல்யாவும் உறுதிப்படுத்தி உள்ளார். இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் ஆல்யா, நான்கு மாத கருவை சுமந்து வருகிறார்.

விலக போகிறாரா ஆல்யா

விலக போகிறாரா ஆல்யா

இதனால் தற்போது நடித்து வரும் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து ஆல்யா விரைவில் விலக போவதாக சமீபத்தில் தகவல் பரவியது. இந்த சீரியலில் போலீஸ் ஆபீசர் ரோலில் நடிப்பதால் ஆல்யா, இதில் தொடர மாட்டார் என கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லையாம். இந்த சீரியலில் ஆல்யா தான் தொடர்ந்து நடிக்க போகிறாராம்.

மாற்றம் கேட்ட ஆல்யா

மாற்றம் கேட்ட ஆல்யா

அதே சமயம் தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதால், கதையில் சில மாற்றங்களை மட்டும் செய்ய வேண்டும் என கதையில் எழுத்தாளர்களிடம் ஆல்யா கேட்டுள்ளாராம். இந்த மாற்றங்கள் செய்ய சீரியல் டீமும் ஒப்புக் கொண்டுள்ளதாம்.

இது தான் மாற்றமா

இது தான் மாற்றமா

அதாவது ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா கேரக்டரில் தான் ஆல்யா நடித்து வருகிறார். சீரியலில் சந்தியா கேரக்டரும் கர்ப்பமாக இருப்பதாக காட்டப்பட உள்ளதாம். அதனால் நிஜத்திலும் கர்ப்பமாக இருக்கும் ஆல்யா, சந்தியா கேரக்டரில் தொடர்ந்து நடிப்பதில் சிக்கல் ஏற்பாடு என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X