Don't Miss!
- Lifestyle
உங்க ராசிப்படி காதலில் நீங்கள் எந்த விஷயத்தில் சொதப்புவீங்களாம் தெரியுமா? உடனே கரெக்ட் பண்ணிக்கோங்க!
- Technology
Mars: செவ்வாய் கிரகத்தில் செல்பி! புகைப்படத்தை வெளியிட்டு அசத்திய நாசா! போட்டிக்கு நீங்களும் வரலாம்!
- News
"பூப்போட்டாராமே".. ஓபிஎஸ்ஸூக்கு "வெள்ளைப்பூ" தந்த பேச்சியம்மாள்.. அதுவும் 3 முறை.. ஹேப்பியில் பன்னீர்
- Automobiles
இன்னும் என்ன யோசனை... ரொம்ப நாளாக எதிர்பார்த்த டீசல் டொயோட்டாவிற்கான புக்கிங் மீண்டும் தொடங்கியிருக்கு!
- Finance
அதானி குழுமத்தின் டாப் 5 நிறுவனங்களின் கடன் எவ்வளவு.. PSU வங்கிகள், தனியார் வங்கிகளில் எவ்வளவு?
- Sports
கோலிவுட்டில் கால்பதித்தார் தோனி.. முதல் தயாரிப்பின் அறிவிப்பு வெளியானது.. நடிகர்கள் யார் தெரியுமா??
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
காலியான பிக் பாஸ் இடம்... புதிய சீரியலை களமிறக்கும் விஜய் டிவி
சென்னை : விஜய் டிவியில் கடந்த 3 மாதங்களாக பிக் பாஸ் சீசன் 5 களைகட்டியது. ஏராளமான ரசிகர்களை கட்டுப்படுத்தியது.
நேற்றுடன் அந்த நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் தற்போது தினந்தோறும் 10 மணிக்கு புதிய சீரியல் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் முன்னதாக மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த தொடரின் சீசன் 2 தினந்தோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
பாவாடை
தாவணியில்…
இடுப்பை
வளைத்து
நெளித்து…
சாமி
சாமி
பாடலுக்கு
டான்ஸ்
ஆடிய
யாஷிகா
ஆனந்த்!

பிக் பாஸ் நிகழ்ச்சி
விஜய் டிவியின் நிகழ்ச்சிகளிலேயே மிகவும் பிரபலமானது பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் கடந்த 3 மாதங்களாக விஜய் டிவியில் இரவு 10 முதல் 11 மணிவரை ஒளிபரப்பு செய்யப்பட்டது. மற்ற சீசன்களை போலவே இந்த சிசனுக்கும் ஏராளமான ரசிகர்கள் காணப்பட்டனர்.

ஏராளமான ரசிகர்கள்
பிக் பாஸில் பங்கேற்ற போட்டியாளர்களிடையே அன்பு, பாசம், ஏச்சுக்கள், பேச்சுக்கள், வன்மம் என அனைத்தும் இந்த நிகழ்ச்சியில் காணப்பட்டது. தங்களது அடுத்த வீட்டில் நடக்கும் சம்பவங்களை பார்ப்பதை போல ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்தனர்.

வெற்றி பெற்ற ராஜு
இந்நிலையில் நேற்றைய தினம் ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு அவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக அளிக்கப்பட்டது. இதேபோல பிரியங்கா ரன்னராக அறிவிக்கப்பட்டார். அவருக்கும் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. இதையடுத்து பிக்பாஸ் ஓடிடியிலும் ரிலீசாக உள்ளதாக கமலே அதை தொகுத்து வழங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அடுத்தது தொடர்
இதனிடையே, பிக்பாஸ் நடைபெற்று வந்த ஸ்லாட்டில் அடுத்ததாக என்ன நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்பட்டது. தற்போது ப்ரமோ மூலம் அதை தெளிவாக்கியுள்ளது விஜய் டிவி. விஜய் டிவியில் முன்னதாக ஒளிபரப்பாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற ஈரமான ரோஜாவே தொடரின் சீசன் 2 இன்று முதல் தினந்தோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரமான ரோஜாவே தொடர்
ஈரமான ரோஜாவே தொடர் முன்னதாக 2018 ஜூலை 9ம் தேதி துவங்கி, 2021 ஆகஸ்ட் 14ம் தேதிவரை பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகி ரசிகர்களின் விருப்பத்திற்குரிய தொடராக அமைந்தது. இதில் பவித்ரா, திரவியம் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். மொத்தம் 807 எபிசோட்களுடன் இந்த தொடர் நிறைவடைந்தது.

ஈரமான ரோஜாவே சீசன் 2
இந்நிலையில் தற்போது ஈரமான ரோஜாவே தொடர் சீசன் 2 இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதையொட்டி கடந்த டிசம்பர் 25ம் தேதி தொடரின் முதல் பிரமோ வெளியானது. இதில் திருமணத்தின்போது மணப்பெண் கடத்தப்பட அவரது தங்கை மணப்பெண்ணாவதும் மீட்கப்படும் அக்கா, மாப்பிள்ளையின் தம்பியை மணமுடிப்பது போலவும் காட்டப்பட்டிருந்தது.
Recommended Video

புதிய பிரமோ
இந்நிலையில் இன்றைய தினம் ஒரு புதிய பிரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் இந்த இரு ஜோடிகளின் திருமணத்திற்கு முந்தைய காதல் காட்டப்பட்டுள்ளது. இன்று முதல் ஒளிப்பரப்பாகவுள்ள இந்த சீரியல் ஏராளமான எதிர்பார்ப்புகளுடன் சின்னத்திரையை காணவுள்ளது.