»   »  சுதாவின் வாழ்க்கையை காப்பாற்ற மகேஷ் செய்யப்போவது என்ன?- இஎம்ஐ பரபரப்பு

சுதாவின் வாழ்க்கையை காப்பாற்ற மகேஷ் செய்யப்போவது என்ன?- இஎம்ஐ பரபரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைக்கு வாழ்க்கையே தவணைமுறையாகிவிட்டது. நடுத்தர வர்க்கத்தினர் எந்த பொருளையும் தவணையில் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதையே சீரியஸாக சீரியலாக எடுத்து ஒளிபரப்பி வருகின்றனர். ஐடி கம்பெனி கதை என்ற உடன் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலின் பாதிப்போ என்று யோசித்த நிலையில் அது வேற இது வேற என்று ஆரம்பம் முதலே ஈஎம்ஐ சீரியலின் ஒவ்வொரு எபிசோடையும் கொண்டு செல்கின்றனர்.

ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் சந்தோஷ், மகேஷ், மதன், கோபால், ரஜேஷ், லேகா, சுதா, ஆகியோரை சுற்றி நகர்கிறது கதை. 70 எபிசோடுகள் வரை ஒருதளத்தில் பயனித்த கதை ஐடி நிறுவன ஓனர் தாராவின் அறிமுகத்திற்குப் பின்னர் வேறொரு தளத்தில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.

ஐடி நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் லட்சக்கணக்கில் சம்பாதிப்பவர்கள், கார், ப்ளாட் என்று செட்டில் ஆனவர்கள், சந்தோசத்திற்கு என்ன குறைச்சல் என்ற எண்ணம் பலரது மனதிலும் இருக்கிறது. ஐடி நிறுவன ஊழிய கஷ்டங்கள் உண்டு. மன அழுத்தங்கள் உண்டு என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது தவணை முறை வாழ்க்கை

வேலையுடன் காதல்

வேலையுடன் காதல்

கதையின் பயணமே காதலுடன் தொடங்குகிறது. மகேஷ் லேகாவின் காதல், கூடவே ஊடல், சின்னச் சின்ன சில்மிஷங்கள் என ஒவ்வொரு எபிசோடும் அழகாக பயணிக்கிறது.

நடுத்தர குடும்பம்

நடுத்தர குடும்பம்

நடுத்தர வர்க்கத்து இளைஞன் மகேஷ், அநியாயத்தை கண்டு பொங்கும் குணம், அதற்காக சந்திக்கும் சங்கடங்கள், காதலியுடன் கொஞ்சல், நண்பர்களுடன் ஜாலி பேச்சு என சுவாரஸ்யமான கதாபாத்திரமாக நடித்துள்ளார் மகேஷ்.

நண்பர்கள் பட்டாளம்

நண்பர்கள் பட்டாளம்

சுபாஷ் எல்லா பெண்களையும் சைட் அடிக்கும் குணம். மனைவி அப்பாவி, மகனோ சுட்டி. சந்தோஷ் பெற்றோர்களுக்கு ஒரே பையன், பெண்களிடம் பேச தயங்கும் நபர், பேசினாலும் சொதப்புவது அவரின் பிளஸ் பாயிண்ட், இவருக்கு பெண் தேடுகிறார்கள் அதற்கு பெண்ணிடம் பேசுவதற்கு பயிற்சி எடுக்க நெட்டில் டவுன் லோடு செய்தும், சுபாஷிடம் டிப்ஸ் கேட்டு அசடு

பால் தற்கொலை முயற்சி

பால் தற்கொலை முயற்சி

வேலை போய் விட்ட துக்கத்தில் கோபால் மாடியிலிருந்து கீழே விழுவதை பார்த்த மகேஷ் அதே நினைவில் இருக்கிறார்.
ஆபீஸ் நிர்வாகத்தினர் என்ன சொல்லி, வேலை நீக்கப்பட்ட கடிதத்தை கொடுத்தாய் என பல கேள்விகள் கேட்க பதில் சொல்ல முடியாமல் கோபமாக அறையை விட்டு வெளியேறுகிறார்.

மகேஷ் குடும்பம்

மகேஷ் குடும்பம்

மகேஷ் தன் சோகத்தை போக்க மதன் அவரை மது குடிக்க அடிக்க அழைக்க, குடித்து விட்டு வீடு திரும்பும் மகனை அம்மா ஒன்றுமே கேட்காமல் சாதம் ஊட்டுவது, தண்ணி போட்டு இருக்கிறாயா? என்று கேட்டு அம்மாவிடம் சொல்லவா? என கேட்கும் தங்கை, என சில வீடுகளில் நடக்கும் சீன் அரங்கேறுகிறது.

வில்லத்தனம்

வில்லத்தனம்

ராஜேஷ் ப்ராஜெக்ட் மேனேஜர் மகேஷ்சை பிடிக்காததால் சுபாஷை அழைத்து பேசி இன்னொருவர் டீமில் சேர அழைப்பது, அவரிடம் கோபாலுக்கு மகேஷ் பணம் திரட்டுவதாக கூறுவதை பெண் அதிகாரியிடம் போட்டு கொடுப்பது, ஆரம்ப கட்ட வில்லத்தனம்.

லேகாவின் சீண்டல்கள்

லேகாவின் சீண்டல்கள்

லேகா இரவில் போன் செய்து அம்மாவிடம் தங்கள் காதலை கூறும்படி கூற கிச்சன் சென்ற மகேஷ் ஐயோ என்று அலற, அம்மா என்ன என்று கேட்க, நண்பனிடம் பேசுவதாக கூறுவது, முத்தம் கேட்கும் காதலியிடம் தப்பு என்று சொல்லுவது குறும்பான நடிப்பில் அசத்தியுள்ளார்.

சின்னச் சின்ன சில்மிஷங்கள்

சின்னச் சின்ன சில்மிஷங்கள்

மாலைக்குள் பார்ப்பேன் என்று சவால் விடும் காதலியை இது ஆபீஸ் என கூறி விலக, இருவரும் சேர்ந்து எடுத்திருக்கும் செல்ஃப்பீயை ஆபீஸ் கம்ப்யூட்டரில் போடுவதாக கூறும் போது அலறி அடித்து கொண்டு தேடி போவது, மீண்டும் முத்தம் கேட்கும் லேகாவிடம், தவிர்க்கும் போது எதிர்பாராத விதமாக காதலியே முத்தம் கொடுக்கும் போது பயத்துடன் ரசிப்பது என அலுவலக காதலை சுவாரஸ்யமாகவே எடுத்துள்ளனர்.

தெரிய வந்த காதல்

தெரிய வந்த காதல்

லேகாவின் குடும்பத்தில் திருமணம் பேசும் போது மகேஷ் உடனான காதல் தெரியவருகிறது. இதற்கு லேகா குடும்பத்தினர் பச்சைக்கொடி காட்டுகின்றனர். வீட்டிற்கு அழைத்து வருமாறு அப்பா கூற சந்தோசத்துடன் உறங்கச் செல்கிறாள் லேகா. தன்னுடைய காதலை அப்பாவிடம் சொன்ன தங்கைக்கும் நன்றி சொல்கிறாள்.

சுதாவின் கஷ்டம்

சுதாவின் கஷ்டம்

அரக்க பரக்க வேலைக்கு கிளம்பும் சுதா. வீட்டில் ஒத்தாசை செய்யும் கணவன், காலை நேரத்தில் ஈஎம்ஐ கேடடு தொந்தரவு செய்யும் நபர் என மன உளைச்சலுக்கு ஆளாகிறாள் சுதா. மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சிக்க, மீடியாவில் பரபரப்பாகிறது.

தாராவின் வருகை

தாராவின் வருகை

ஐ டி நிறுவனத்தின் தலைவி தாராவின் வருகையால் நிறுவனம் பரபரப்பாகிறது. திமிரான பேச்சு, நடிப்பு என அப்ளாஸ் அள்ளுகிறார் தாரா.
சுதாவின் தற்கொலையை வேறு மாதிரி ட்விஸ்ட் செய்ய, பரபரப்பு பற்றிக்கொள்கிறது.

கள்ளத் தொடர்பு

கள்ளத் தொடர்பு

இரண்டு குழந்தைகளின் தாயான சுதாவிற்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதாக வீடியோ வெளியிட, அதை பார்த்து உடன் பணி செய்பவர்களே சுதாவை தவறாக பேச, மனசு நொந்து போகிறான் மதன்.

அம்மாவிடம் விளக்கம்

அம்மாவிடம் விளக்கம்

சுதா உடன் அந்த வீடியோவில் இருப்பது தான்தான் என்று அம்மாவிடம் விளக்க, உடனே இதை அலுவலகத்தில் கூறி சுதாவிற்கு ஏற்பட்ட கெட்ட பெயரை போக்க கூறுகிறார். உடனே தாராவை பார்த்து பேச போகிறான் மகேஷ்.

தாரா வீசிய வெடிகுண்டு

தாரா வீசிய வெடிகுண்டு

சுதா தவறான நடத்தை கொண்டவர் அல்ல என்று தாராவிடம் கூறுகிறான் மகேஷ். அது தனக்கும் தெரியும் என்றும், சுதா தற்கொலை முயற்சி செய்யும் முன்பாக கேன்டீனில் சுதா உடன் அமர்ந்து பேசிய வீடியோவையும் எடுத்து வைத்துக்கொண்டு மகேஷை மிரட்டுகிறாள் தாரா.

மகேஷ் முடிவு

மகேஷ் முடிவு

சுதாவிடம் தான்தான் தவறாக நடக்க முயற்சி செய்ததாக ஒத்துக்கொள்ளுமாறு மகேஷை மிரட்டுகிறாள் தாரா. சுதாவின் வாழ்க்கையை காப்பாற்ற, வீடியோவில் இருப்பது தான்தான் என்று ஒத்துக்கொள்வானா? அப்படி சொல்லும் பட்சத்தில் லேகா உடனான காதல் என்னவாகும் என்பதுதான் பரபரப்பான திருப்பம்.

குட்டீஸ் பட்டாளம்

குட்டீஸ் பட்டாளம்

மதன் - சுஜாதா சண்டையால் பாதிக்கப்படும் குழந்தைகள், சுபாஷ் - ஜானகியின் மகன் பிள்ளை கிஷோர் வகுப்பு சிறுமிகளுக்கு கடலை போடுவது, மருத்துவமனையில் இருக்கும் கோபாலின் மகன் தன் கூட அப்பா எப்போது விளையாட வருவார் என்றும், எதற்கு மாடியிலிருந்து குதித்தார் என்று கேட்கும் பவித்திரன் என குட்டீஸ்களின் நடிப்பும் ரசிக்கும் படியாகவே உள்ளது.

ரசிகர்கள் அதிகம்

ரசிகர்கள் அதிகம்

மருமகள் பிரச்னை, கணவன் - மனைவி பந்தம் இப்படி வழக்கமான சீரியல் கதைகளுக்கு இடையில் ஐடி வேலை, அலுவலக பாலிடிக்ஸ் என இளைஞர்களைக் குறிவைத்திருக்கிறது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஈஎம்ஐ - தவணை முறையில் ஒரு வாழ்க்கை இரவு 10.30 மணிக்கு மேல் ஒளிபரப்பானாலும் இளைய தலைமுறையினரை கவர்ந்துள்ளது. யுடுயூப்பில் தினசரியும் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்து ரசிக்கின்றனர்.

English summary
EMI-Thavanai Murai Vazhkai is an Tamil TV serial airs Monday through Saturday on Sun TV from 07 March 2016.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil