»   »  'என் வாழ்க்கை என் பயணம்'... பாலிமர் தொலைக்காட்சியின் முதல் சினிமா தொடர்

'என் வாழ்க்கை என் பயணம்'... பாலிமர் தொலைக்காட்சியின் முதல் சினிமா தொடர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாலிமர் தொலைக்காட்சியில் இன்று முதல் 'என் வாழ்க்கை என் பயணம்' என்ற புதிய சீரியல் ஒளிப்பரப்பாகவுள்ளது.

சன், விஜய் டிவிக்களின் சீரியல் டிஆர்பி ரேட்களை கட்டுப்படுத்தியதில் பாலிமர் டிவிக்கு கணிசமான இடமுண்டு.

குறிப்பாக இதில் இடம்பெறும் சீரியல்கள் குடும்பத் தலைவி தொடங்கி, கல்லூரிப் பெண்கள் வரை அனைத்துத் தரப்பையும் கட்டிப் போட்டுள்ளன.

பாலிமர் டிவியில் இதுவரை இரு மலர்கள் என்ற சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. இரவு 7.30 மணியளவில் ஒளிபரப்பப்பட்ட இத்தொடருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.

இந்நிலையில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இரு மலர்கள் சீரியலுக்குப் பதிலாக தற்போது, என் வாழ்க்கை என் பயணம் என்ற சீரியலை இன்றுமுதல் பாலிமர் டிவி ஒளிபரப்புகிறது.

இந்த சீரியலில் சினிமாவில் இயக்குநராக போராடும் பெண்ணாக இந்தி நடிகை ஷமா சிக்கந்தர் நடிக்கிறார். இதுவரை காதல், குடும்பம் போன்ற கதைகளை மையமாக வைத்து சீரியல்கள் வெளியாகின.

இந்நிலையில் சினிமா குறித்த முதல் சீரியல் என்ற பெருமை என் வாழ்க்கை என் பயணம் சீரியலுக்கு கிடைத்துள்ளது.

ஏற்கனவே உயிரே உறவே, மவுன ராகம், என் கண்மணி, மூன்று முடிச்சு என பாலிமர் ஒளிபரப்பும் சீரியல்கள் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால், இந்த சீரியலுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
A new tv Serial En Vazhkai En Payanam will Telecast on Polimer Television on April 4.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil