»   »  உங்கள் ராஜ் டிவியில் எங்க அட்டகாசம் ஆரம்பம்: புதிய நெடுந்தொடர்

உங்கள் ராஜ் டிவியில் எங்க அட்டகாசம் ஆரம்பம்: புதிய நெடுந்தொடர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர் எங்க அட்டகாசம் ஆரம்பம்.

ராஜ் டிவியில் கடந்த 7ம் தேதி எங்க அட்டகாசம் ஆரம்பம் என்ற புதிய நெடுந்தொடர் துவங்கியது. இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.

Enga Attagasam Aarambam, a new serial in Raj TV

தொடரின் கதை சுருக்கம்,

ரங்க விலாஸ் என்பது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு! அங்கு பலதரப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. நாகரிக வாழ்க்கையின் நெருக்கடியிலும் அவசரத்திலும் மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாயிருந்தாலும் நின்று பேச நேரம் இல்லாமல் பணத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்க k.ரங்கவிலாஸ் என்கிற அந்த குடியிருப்பின் மனிதர்களும் அதற்கு விதிவிலக்கு அல்ல...

பெரியவர்கள் இப்படியிருக்க ஆனால் அந்த குடியிருப்பின் சிறுவர்களோ அதற்கு நேர்எதிர். டீன்ஏஜ் இளைஞர்கள், சிறுவர்கள் தங்கள் ஒத்த வயதினருடன் நட்போடு பழகிக் கொண்டு இருக்கிறார்கள். ஏழாம் வகுப்பு படிக்கும் சஞ்சய், ஸ்வேதா, ஆகாஷ், ஹாரிஷ் மற்றும் ஆனி இவர்கள் ஐந்து பேரும் நெருங்கிய நண்பர்கள். குறும்பும், சுட்டித்தனமும் கொண்டு விளையாட்டாய் இவர்கள் செய்யும் காரியங்கள் சில சமயம் விபரீதத்திலும் கொண்டு போய்விடும்.

சஞ்சையும், ஸ்வேதாவும் அண்ணன் தங்கை. இருவரும் சுட்டித்தனம் மிக்கவர்கள். அவர்களின் பெற்றோர் மோகன், பானுமதி. மோகன் வங்கியில் உயர்பதவியில் வேலை பார்ப்பவர். கோபக்காரர். மனைவி பானுமதியோ கணவனுக்கு எதிர்சொல் பேசாதவள். கணவணின் கோபத்தையும், பிள்ளைகளின் குறும்புகளையும் பொறுத்து கொண்டிருக்கும் இல்லத்தரசி.

Enga Attagasam Aarambam, a new serial in Raj TV

சஞ்சயின் நண்பன் ஆகாஷ் கண்ணாடி அணிந்திருப்பவன் சற்று பயந்த சுபாவம் உள்ளவன். அவனின் அப்பா பிரபு தொழிலதிபர். அம்மா கீதா ஆடிட்டர் ஆபிஸில் வேலை பார்ப்பவள். பிரபுவிற்கும், கீதாவிற்கும் ஏழாம் பொருத்தம். இருவருக்கும் எந்த விஷயத்திலும் ஒத்து வராது. சதா எந்நேரமும் இருவரும் சண்டை போட்டுக் கொண்டே இருக்க பெற்றோரின் பாசத்திற்கு ஏங்குகிறான் ஆகாஷ்.

குறும்புக்காரன் ஹாரிஷ். சஞ்சய்யின் இன்னொரு நண்பன் முரடன், தைரியசாலி. சேட்டையும் துடுக்கான பேச்சும் இவனின் அடையாளங்கள். இவனின் பெற்றோர் கால்டேக்ஸி ட்ரைவரான குடிகாரன் வேலு. சூப்பர் மார்கெட்டில் வேலை பார்க்கும் சித்ரா. ஹாரிஷுக்கு ஒரு அக்கா உண்டு. அவள் அனு என்கிற அனுராதா.

இவர்களின் கும்பலில் கடைசியாக வருவது ஆனி என்கிற குட்டி பெண். ஆனியின் அம்மா மேரி முதல் கணவனை இழந்த பின் மறுமணம் புரிந்து கொண்டவள். தன் மகளின் மீது அதிகம் பாசம் வைத்திருவப்பவள். அவள் மட்டும் அல்ல மேரியின் இராண்டாவது கணவன் ஜானும் ஆனி மீது மிகுந்த பாசம் வைத்திருப்பவன். ஆனால் சிறுமி ஆனியிற்கோ ஜானை சுத்தமாக பிடிக்காது.

கோடை விடுமுறை வர வீட்டில் எங்கும் கூட்டி போகாத சோகத்திலும், விடுமுறையை சந்தோஷமாக கழிக்க பணம் இல்லாத விரக்தியிலும் பிள்ளைகள் இருகின்றனர். இதற்கிடையே சஞ்சையின் அப்பா மோகன் அலுவலகத்தின் மிகப் பெரிய தொகையான முப்பது லட்ச ரூபாயை திருடர்களான விஜய், அஜய்யிடம் பறிகொடுக்கிறார்.

போலீஸ் துரத்த திருடர்கள் பணத்துடன் ரங்க விலாஸ் குடியிருப்புக்குள்ளேயே பதுங்குகிறார்கள். பணப் பையை மறைவான இடத்தில் வைத்துவிட்டு தப்பிக்கிறார்கள். செலவுக்கு பணம் இல்லாமல் இருக்கும் சிறுவர்கள் கையில் அந்த பணப்பை சிக்குகிறது. ஆரம்பத்தில் யோசித்தாலும் பிறகு தங்கள் செலவுக்கு கடவுளாக பார்த்து அனுப்பியிருப்பதாக எண்ணி மகிழ்ச்சி அடைகிறார்கள். பையிலிருக்கும் பணத்தை ஒரு டெடிபியர் பொம்மையில் வைத்த சிறுவர்கள் வெளியில் போய் தங்கள் இஷ்டத்துக்கு செலவு செய்து சந்தோஷமாக இருக்க...பணத்தை பறிகொடுத்த மோகனுக்கோ வேலைக்கே நெருக்கடி வர செய்வதறியாது தவிக்கிறார்.

பணத்தை எடுக்க திருடர்களான விஜய்யும், அஜய்யும் வருவது பணப்பையை காணாமல் தேடுவது, பணம் எப்படியும் ரங்கவிலாஸ் குடியிருப்புக்குள் தான் இருக்க வேண்டும் என்று எண்ணிய இருவரும் அந்த குடியிருப்புகுள் வசிக்கும் வயதான தம்பதிகளான தாத்தா, பாட்டியை மிரட்டி அவர்கள் வீட்டில் தங்குவது.. விஜய்யை பணக்காரன் என்று எண்ணிய அனுராதாவோ அவனை காதலிக்க தொடங்குவது. ஒரு புறம் போலீஸ் திருடர்களை தேட திருடர்களோ பணப் பையை தேடுவது.

நிலைமையின் விபரீதத்தை உணராத சிறுவர்களோ பணத்தை வைத்து விளையாடிக் கொண்டிருப்பது. டெடிபியர் பொம்மையில் இருக்கும் பணமோ ஒவ்வொரு கையாக மாறி மாறி குடியிருப்பையே சுத்திசுத்தி வருவது..பணத்தை தேடும் போலீஸ், திருடர்கள், மோகன் பணம் பொம்மையில் இருப்பது தெரியாமல் பொம்மை கைக்கு வந்தும் கோட்டை விடுகிறார்.

சிறுவர்கள் பணத்தை ஒப்படைத்தார்களா?
திருடர்கள் பணத்தை கைப்பற்றினார்களா?
விஜய், அனு காதல் ஒன்று சேர்ந்ததா?
மோகனின் வேலை என்ன ஆயிற்று?

ஆகாஷின் பெற்றோர் பிரிந்தார்களா இல்லை ஒன்று சேர்ந்தார்களா? ஹாரிஷின் குடிகார தந்தை திருந்தினாரா? பெற்றோரின் பாசத்தை ஆனி புரிந்து கொண்டாளா? இவை அனைத்தையும் சுவரஸ்யமாகவும், நகைச்சுவை கலந்தும் சொல்வதே இந்த அட்டகாசம் தொடர்.

English summary
Raj TV is broadcasting a new mega serial titled Enga Attagasam Aarambam featuring kids.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X