»   »  விஜய் டிவி வீட்டு செல்லமாம் டிடி…

விஜய் டிவி வீட்டு செல்லமாம் டிடி…

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் டிவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டார் டிடி... இல்லை இல்லை விஜய் டிவியில் இருந்து வெளியேற்றப்பட்டார் டிடி என்று ஒரு தகவல் பரவியது. டிடி கர்ப்பம் என்றது ஒரு செய்தி... அட இல்லைப்பா டிடிக்கு காலில் சுளுக்காம் அதனால ரெஸ்டாம் என்று செய்தி போட்டார்கள்.

இப்படி எங்கு பார்த்தாலும் டிடி எதில் பார்த்தாலும் டிடி பத்திய செய்தியாகவே இருந்தது. காரணம் இல்லாமல் இல்லை. கடந்த 2 மாதகாலமாகவே விஜய் டிவியில் டிடி என்கிற திவ்யதர்ஷினியை எந்த நிகழ்ச்சியிலும் காணவில்லை. எனவே டிடி எங்கே என்று தேட ஆரம்பித்துவிட்டனர்.

கடந்த ஆண்டு இதே நாளில் திவ்யதர்ஷினியின் திருமணம் நடைபெற்றது. எல்லா ஊடகங்களிலும் இந்த திருமணம் பற்றி செய்தி வெளியானது. சரியாக ஒரு ஆண்டு கழித்து முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் திவ்யதர்ஷினியைப் பற்றிய சிறப்பு நிகழ்ச்சியை எங்க வீட்டு செல்லம் டிடி என்று சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பியது விஜய் டிவி.

டிடியின் சிறப்பு நிகழ்ச்சி

டிடியின் சிறப்பு நிகழ்ச்சி

சிறப்பு நிகழ்ச்சியில் தன்னுடைய காதல் திருமணம் பற்றி பகிர்ந்து கொண்டார் டிடி. அதோடு அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள், திருமணம் பற்றியும் ஒளிபரப்பியது விஜய் டிவி.

டிடி சொல்றத கேளுங்க

டிடி சொல்றத கேளுங்க

டிடிக்கு என்ன ஆச்சு? எல்லாரும் தேடறாங்க... அதை உங்க வாயாலயே சொல்லிடுங்க... என்று பேட்டி எடுக்க வந்தவர் கேட்க..

அட டிடிக்கு ஒண்ணுமே ஆகலை. நான் கொஞ்சநாள் பிரேக் எடுத்திருக்கேன். இது சகஜமானதுதான். அதுக்காக என்னை எல்லோரும் தேடியிருக்காங்க.

அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?

அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?

நான் அவ்ளோ பெரிய செலிபிரிட்டியா? என்னைப்பற்றி செய்திகள், கிசுகிசுக்கள் வேற எழுத ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கு எதுவும் ஆகலை.

விஜய் டிவியின் செல்லம்

எத்தனை பேரு வந்தாலும் எனக்கு 60 வயசு ஆனாலும் நான்தான் விஜய் டிவியோட செல்லம். நான் எப்பவுமே விஜய் டிவியை விட்டு போகமாட்டேன் என்று கூறி முடித்தார் டிடி.

டுவிட்டரிலும் விடலையே

இந்த நிகழ்ச்சியைப் பற்றி டுவிட்டரிலும் ஏராளமானோர் கருத்து கூறியிருந்தனர். சிலர் வாழ்த்தியும், ஒங்களுக்கு வேற வேலை இல்லையா என்று கேட்டும் கருத்திட்டிருந்தனர்.

சந்தேகம் தீர்ந்துருச்சா

இந்த நிகழ்ச்சியின் மூலம் டிடி பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் நம்புவதாக கருத்திட்டுள்ளார் விஜய் டிவியின் தலைமை நிர்வாகி ஸ்ரீராம்.

இப்ப சந்தேகம் தீர்ந்துருச்சாப்பா? யப்பா என்னா ஒரு வௌம்பரம்பா... இவங்களா புதுசு புதுசா கௌப்புவாங்களோ? நல்ல கௌப்புறாங்கய்யா செய்தியை...

English summary
Star Vijay TV telecast Divyadharshini alies DD special program Enga Veetu Chellam DD.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil