»   »  என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? லட்சுமி ராமகிருஷ்ணனை கேட்ட டிவி தொகுப்பாளர்

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? லட்சுமி ராமகிருஷ்ணனை கேட்ட டிவி தொகுப்பாளர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடிகை மற்றும் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்திவரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பிரபலம். இந்த நிகழ்ச்சியை திரைப்படங்களில் கிண்டலடித்து காட்சிகள் அமைக்கப்பட்டதால் லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகர்கள், இயக்குநர்கள் பலருடன் சண்டையிட்டு வந்தார்.

இந்நிலையில் தந்தி டிவியில் ஒளிபரப்பப்படும் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது தொகுப்பாளர் பல கேள்விகளை கேட்டார்.

ஓடிப்போவதை சொல்லலாமா?

ஓடிப்போவதை சொல்லலாமா?

அடுத்தவர் பொண்டாட்டி ஓடிப்போவதை ஏன் சபைக்கு கொண்டு வருகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று நீங்க கேட்பதனால் அந்த பெண் மீது மக்களின் பார்வை வேறு மாதிரியாக விழுகிறது என்றார்.

வறுத்து எடுப்பதா?

வறுத்து எடுப்பதா?

இதற்கு பதில் சொன்ன லட்சுமி ராமகிருஷ்ணன், நான் இங்கு வந்தால் என்னை வறுத்து எடுப்பீர்கள் என்று தெரிந்துதான் வந்தேன் என்றார். மேலும் லட்சுமி ராமகிருஷ்ணன், நானும் என் பிரச்னைகளை சமூக வலைதளங்களில் சொல்வேன் என்றார்.

ஸ்ரீபிரியாவின் டுவிட்டர்

நடிகை ஸ்ரீபிரியா கூட பொதுமக்களின் பிரச்னைகளில் தலையிட நடிகைகளுக்கு என்ன உரிமை இருக்கிறது. அதற்கு தான் நீதிமன்றம் இருக்கிறதே என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

நன்றி சொன்ன ஸ்ரீபிரியா

இது குறித்து நடிகை ஸ்ரீபிரியா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். தொகுப்பாளருக்கு நன்றி கூறியுள்ள அவர், மக்களின் கேள்விகள் அனைத்தையும் நீங்கள் முன் வைத்தீர்கள் என்று கூறியுள்ளார்.

English summary
Lakshmi Ramakrishnan interview in Thanthi TV Kelvikku Enna pathil.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos