எழிலிடம் கையும் களவுமாக சிக்கிக் கொண்ட கோபி...பாக்யலட்சுமியில் அடுத்து என்ன நடக்கும் ?
சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் விறுவிறுப்பான தொடர்களில் ஒன்று பாக்யலட்சுமி. இதில் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த தருணம் தற்போது வந்து விட்டது. ப்ரோமாவை பார்த்து விட்டு, இந்த காட்சி எப்போது ஒளிபரப்பாகும் என காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
இந்த சீரியலில் பாக்யலட்சுமியின் கணவராக வரும் கோபி, மனைவிக்கு தெரியாமல் அவரது தோழியுடன் நெருக்கமாக பழகி வருகிறார். இருவரையும் ஏமாற்றி வாழ்ந்து வரும் கோபி, தனது இரண்டாவது மகன் எழிலிடம் கையும் களவுமாக மாட்டிக் கொள்ளும் காட்சியை காட்டி ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.

டிஆர்பி.,யை எகிற வைத்த ப்ரோமோ
இந்த ஒரே ஒரு ப்ரோமாவால் பாக்யலட்சுமி சீரியலின் டிஆர்பி மளமளவென உயர்ந்து விட்டது. தோழி ராதிகாவை ரெஸ்டாரன்டிற்கு அழைத்துச் சென்று, ஆறுதல் கூறுவதைப் போல், தோளில் சாய்த்து கட்டி அணைத்துக் கொள்கிறார் கோபி. அதே ரெஸ்டாரன்டிற்கு ஃபிரண்டை பார்க்க வரும் எழில் அதனை பார்த்து விட்டு, கோபியிடம் கோபப்படுகிறான்.

சர்ப்ரைஸ் தரும் கோபி
மகனிடம் மாட்டிக் கொள்ளும் கோபி, அதை வீட்டில் தெரியாமல் சமாளிக்க, எழிலுக்கு முன்பே வீட்டிற்கு சென்று, பாக்யலட்சுமி வாங்க நினைத்து முடியாமல் போன டூவீலரை வாங்கிக் கொடுத்து சர்ப்ரைஸ் தருகிறார்.

பாக்யாவிற்கு ஐஸ்
அதோடு நிற்காமல், பாக்யாவை பைக் ஓட்டச் சொல்லி பின்னால் அமர்ந்து போகிறார். பாக்யாவிற்கு டூவீலர் வாங்கிக் கொடுக்க எழில் முயற்சிப்பதை வைத்தே, பாக்யாவிற்கு ஐஸ் வைத்து தப்பிக்க நினைக்கிறார் கோபி. அம்மாவும், அப்பாவும் டூவீலரில் ஒன்றாக வருவதை மாடியில் இருந்து எழில் பார்ப்பது போல் ப்ரோமோ காட்டப்படுகிறது.

எழில் என்ன செய்வார்
கோபி மாட்டிக் கொண்டார். எழில், பாக்யாவிடம் அப்பா பற்றிய உண்மைகளை சொல்லப் போகிறார் என்று தான் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

அடுத்து இதுதான் நடக்க போகிறதா
ஆனால் வழக்கம் போல் ட்விஸ்ட் என்ற பெயரில் இப்படி பரபரப்பை கிளப்பி விட்டு, புஷ் ஆக்கத் தான் போகிறார்கள். அதாவது, ரெஸ்டாரன்ட்டில் கோபி மீண்டும் ஒரு பெண்ணுடன் இருப்பதைத் தான் எழில் பார்க்கிறார். இந்த முறையும் அந்த பெண்ணின் முகத்தை பார்க்க மாட்டார். அதற்குள் எழிலை கோபி பார்த்து விட, ராதிகாவை மறைத்து அனுப்பி வைக்கிறார்.

இதற்கா இவ்வளவு பில்ட்அப்
அதே போல் வீட்டில் அம்மாவிடம் விஷயத்தை சொல்ல நினைத்து வரும் எழிலிடம், அப்பா கோபி டூவீலர் வாங்கிக் கொடுத்ததை சொல்லி சந்தோஷப்படுகிறாள் பாக்யா. அம்மாவின் சந்தோஷத்தை பார்க்கும் எழில், அதை கெடுக்க வேண்டாம் என எண்ணி, அமைதியாக இருந்து விடுகிறார். ஆக மொத்தத்தில் இந்த முறையும் கோபி தப்பித்து விடுகிறார். இதற்கு தான் இந்த பில்ட்அப்.


Click it and Unblock the Notifications











