Don't Miss!
- News
பிக்பாஸில் வென்று "நோ யூஸ்".. கொண்டாடப்படும் விக்ரமன்! விஜய் பாடலை வைத்து தன்னை தானே புகழும் அஜீம்
- Finance
எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க.. மார்ச் கடைசி வரையில் இந்த சலுகையை பெறலாம்..!
- Automobiles
சுஸூகி ஜிம்னி எலெக்ட்ரிக் காரை தயாரிக்க முடிவு, இந்திய வருகை எப்பொழுது தெரியுமா?
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Sports
இதை செய்தால் போதும்.. உலக கோப்பையை இந்தியா வெல்லும்.. முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
விஜய் டிவியை ஓபன் பண்ணா ராதிகா,கோபிதான்..முடிச்சிவிடுங்கப்பா முடியல?
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகள் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான நெடுந்தொடராகும்.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
அந்த
அரபிக்
கடலோரம்…
இன்று
மும்பையில்
ரசிகர்களை
சந்திக்கும்
பொன்னியின்
செல்வன்
டீம்

தில்லாலங்கடி கோபி
இந்த தொடரில் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த நேரத்தில், முன்னாள் காதலி ராதிகாவை திடீரென சந்திக்க, மீண்டும் அவள் மீது காதல் வளர்கிறது. இதனால், ராதிகா மனதில் இடம் பிடிக்க பல தில்லாலங்கடி வேலைகளை செய்து வந்தார்.

சீரியல் சுவாரசியமாக
கோபிக்கும் ராதிகாவுக்கும் உள்ள உறவு குறித்து தெரிந்து கொண்ட பாக்கியா கோபியை விவாகரத்து செய்து சமையல் ஆர்டர் எடுத்து சூர்யவம்சம் சரத்குமார் போல ஒரு பாட்டில் முன்னேறி விட்டார். குடும்ப சண்டை, விவாகரத்து, கோபி வீட்டை விட்டு வெளியேறியது, ராதிகா கோபியை திருமணம் செய்ய சம்மதித்த காட்சிகள் என அடுத்தடுத்து சீரியல் சுவாரசியமாக சென்று கொண்டு இருந்தது.

இன்றைய எபிசோடு
இன்றைய எபிசோடில் கோபியை அவரது அப்பா சந்தித்து பேசுகிறார். அப்போது, நீ செய்றது எல்லாமே தப்பு. இந்த திருமணமே வேண்டாம் என ராமமூர்த்தி சொல்ல, அதை கேட்டு கத்தும் கோபி, எனக்கும் பாக்யாவுக்கும் இனிமேல் எதுவுமே இல்லை எல்லாமே முடிஞ்சி போச்சி. நான் ராதிகாவை கல்யாணம் பண்ணப்போறது உறுதி. இதில் நான் பின்வாங்க போறது இல்ல என உறுதியாக சொல்கிறார்.

பிளாக் மெயில் பண்ணாதீங்க
நீ கல்யாணம் பண்ணா இனியா, செழியன், எழில் எல்லாரும் என்ன நினைப்பாங்க..உன் ஆபீஸ்ல உன்னை மதிப்பாங்களா என கேட்கிறார். இதெல்லாம் பாக்யா எனக்கு டைவர்ஸ் கொடுக்கும் போது தெரியலையா? இந்த மாதிரி எமோஷனல் பிளாக் மெயில் பண்ணாதீங்க, உங்க பேச்சை நான் கேட்கப் போறது இல்லை என கூறுகிறார்.

முடியலப்பா
என்னத்தான் இந்த சீரியல் நல்லா இருந்தாலும், எப்போ பாரு விவாகரத்து, கல்யாணம் என ஒரு சட்டிக்குள் இருக்கும் குழம்புபோல காலியே ஆகாமல் இருக்கிறது.ஒன்னு கோபிக்கு சட்டுபுட்டுனு கல்யாணம் பண்ணுங்க, இல்ல கதையை மாத்துங்க முடியலப்பா என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த சீரியலுக்கு பெண்களைவிட ஆண்கள் அதிகம் பேர் பார்க்கிறார்கள்.இதுக்கு காரணம் என்னவா இருக்குமோ அது நமக்கு தெரியாதுப்பா இருந்தாலும், இல்லத்தரசிகளே கொஞ்சம் உஷாரா நேட் பண்ணுங்க.