அட சீரியல் தானே எதுக்கு இந்த பில்டப்..வானத்தை போல சீரியலை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை : தமிழ் சின்னத்திரையில் முக்கியமான சீரியல்களில் ஒன்று வானத்தைப்போல.
அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில்.
இந்த சீரியல் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8 மணிக்கு சன்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

வானத்தைப்போல
சன் டிவி, விஜய் டிவி, ஜீ டிவி, கலர்ஸ் டிவி என ஏராளமான சேனல்களில் விதவிதமான கதைக்களத்துடன் சீரியல்கள் வந்தாலும், ஒவ்வொரு சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் ரசிகர்களின் பேரதரவை பெற்ற சீரியல் தான் ‘வானத்தைப்போல‘. விஜய்காந்த் நடித்த வானத்தைப்போல படத்தில் வரும் அண்ணன் தம்பி சென்டிமென்ட் போல இந்த சீரியலில் அண்ணன் தங்கை சென்டிமென்ட் சற்று தூக்கலாகவே இருக்கும்.

530 எபிசோடு
2020ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தற்போது வரை 530 எபிசோடுகளை கடந்துள்ளது. இந்த சீரியலின் ஆரம்பத்தில் துளசி என்ற கதாபாத்திரத்தில் ஸ்வேதா என்பவர் நடித்து வந்தார். ஆனால், அவர் சில காரணங்களால் சீரியலில் இருந்து விலகிக்கொண்டார்.

அண்ணன் சின்ராசு
அதேபோல ஸ்வேதா விலகிய சில மாதங்களில் அண்ணன் சின்ராசு கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த தமன்குமாரும் சீரியலில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக சின்ராசு கேரக்டரில் யாரடி நீ மோகினி சீரியலில் முத்தரசன் ரோலில் நடித்த ஸ்ரீகுமார் சீரியலில் என்ட்ரி கொடுத்தார். யாரடி நீ மோகினி ரசிகர்கள் ஸ்ரீயின் வரவால் மிகவும் குஷியாகிப்போக சீரியல் டாப் கியரில் சென்றுகொண்டு இருக்கிறது.

ஓவர் பில்டப்
இந்நிலையில், நடிகர் ஸ்ரீகுமார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சண்டைக்காட்சி வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், கட்டையை வைத்து ஒருவர் ஸ்ரீயின் முதுகில் அடிக்க அந்த கட்டை அப்படியே சுக்குநூறாக நொறுங்குகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்துக்கள் சொன்னாலும், சீரியலுக்கு எதுக்கு ஹாலிவுட் ரேஞ்சுக்கு பில்டப் என்றும், பில்டப் எல்லாம் பலமாத்தான் இருக்கு ஆன கதையில் ஒன்னும் இல்லையே என இணையவாசிகள் கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











