நலமாக இருக்கிறேன்... ரசிகர்களுக்கு நன்றி சொன்ன பாரதி கண்ணம்மா வெண்பா

சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் டாப் ரேட்டிங் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. பலரின் ஃபேவரைட் சீரியலாக இந்த சீரியல் அமைந்துள்ளது. விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் இது தான் முதலிடம் பிடித்துள்ளது.

Recommended Video

Farina போட்ட முதல் பதிவு | Bharathi Kannamma Farina Blessed with boy Baby

இந்த சீரியலில் வில்லியாக வெண்பா கேரக்டரில் நடித்து வருபவர் ஃபரீனா ஆசாத். அழகான வில்லிகளில் நம்பர் ஒன் இவர் தான். இந்த சீரியலில் லீட் ரோல் கண்ணம்மாவிற்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே அளவிற்கு இவருக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

கர்ப்பத்தை அறிவித்த வெண்பா

கர்ப்பத்தை அறிவித்த வெண்பா

இந்நிலையில் இவர் சில மாதங்களுக்கு முன் தான் நிஜத்தில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதனால் இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலக உள்ளதாகவும், வெண்பா கேரக்டரில் வேறு ஒருவர் மாற்றப்பட உள்ளதாகவும் தகவல் பரவியது.

 கர்ப்பகால ஃபோட்டோஷுட்

கர்ப்பகால ஃபோட்டோஷுட்

ஆனால் வெண்பா கேரக்டரில் தானே தொடர்ந்து நடிக்க உள்ளதாகவும், பிரசவத்தின் போது மட்டும் சில காலம் பிரேக் எடுக்க உள்ளதாகவும் ஃபரீனா ஆசாத் தெரிவித்தார். அதன்படி கர்ப்பமாக இருக்கும் பெரிய வயிற்றுடன், புடவை கட்டி நடித்து வந்தார் ஃபரீனா. தொடர்ந்து கர்ப்ப காலத்தில் விதவிதமாக கலர்ஃபுல் ஃபோட்டோஷுட் நடத்தி லைக்குகளை அள்ளி வந்தார் ஃபரீனா.

வெண்பாவுக்கு மகன் பிறந்தான்

வெண்பாவுக்கு மகன் பிறந்தான்

சமீபத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் அவர் சிறைக்கு செல்வது போல் காண்பிக்கப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக வெண்பா கேரக்டர் காட்டப்படாமல், கண்ணம்மா மற்றும் பாரதியை வைத்தே கதை நகர்கிறது. இந்நிலையில் நேற்று, தனக்கு மகன் பிறந்திருப்பதாக ஃபரீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.

ஃபோட்டோ பகிர்ந்த ஃபரீனா

ஃபோட்டோ பகிர்ந்த ஃபரீனா

இதனையடுத்து ரசிகர்கள் பலர் அவருக்கு சோஷியல் மீடியாவில் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, மருத்துவமனையில் இருக்கும் தனது ஃபோட்டோவை பதிவிட்டுள்ளார் ஃபரீனா.

 நன்றி மக்களே

நன்றி மக்களே

அத்துடன், உங்களின் அன்பான வாழ்த்துக்கள் மற்றும் அன்புக்கும் நன்றி மக்களே. என் குட்டி பையனும் நானும் சூப்பர் நலமாக இருக்கிறோம். நார்மல் டெலிவரி தான். மிக விரைவில் நான் திரும்பி வருவேன் என குறிப்பிட்டுள்ளார் ஃபரீனா. இதற்கும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X