அச்சச்சோ...என்ன சொல்றீங்க...பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகுகிறாரா வெண்பா?

சென்னை : விஜய் டிவியில் ., ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. சமீப காலமாக இந்த சீரியல் தான் டிஆர்பி ரேட்டிங், செய்திகள் என அனைத்திலும் டாப்பில் இருந்து வருகிறது. இந்த சீரியலுக்கு ரசிகர்களும் அதிகம்.

இந்த சீரியலில் ஹீரோயின் கண்ணம்மாவிற்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களா அதே அளவிற்கு வில்லி வெண்பாவிற்கும் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். இதில் டாக்டர் வெண்பா கேரக்டரில் நடிகை ஃபரீனா ஆசாத் நடித்து வருகிறார்.

அழகான வில்லி வெண்பா

அழகான வில்லி வெண்பா

தனது அற்புதமான நடிப்பால் அழகான வில்லிகள் வரிசையில் இடம்பிடித்து விட்டார் ஃபரீனா. ஏற்கனவே திருமணமானவர் என தெரிந்தும் ஹீரோவான பாரதியை அடைய இறங்கி வேலை செய்யும் கேரக்டரில் தான் இவர் நடித்து வருகிறார்.

கர்ப்பத்தை அறிவித்த ஃபரீனா

கர்ப்பத்தை அறிவித்த ஃபரீனா

சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவான ஃபரீனா சமீபத்தில் தனது கர்ப்பத்தை அறிவித்தார். முதல் குழந்தைக்காக ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்த ஃபரீனா, பெரிய வயிறுடன் விதவிதமான மாடர்ன் டிரெஸ்களில் தினம் ஒரு ரீல் வீடியோ வெளியிட்டு அசத்தி வருகிறார்.

பாரதி கண்ணம்மாவிலிருந்து விலகுகிறாரா

பாரதி கண்ணம்மாவிலிருந்து விலகுகிறாரா

அதே சமயம், கர்ப்பமாக இருக்கும் ஃபரீனா பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா அல்லது தனது உடல்நிலையில் கவனம் செலுத்த சீரியலில் இருந்து விலகுவாரா என்ற சந்தேகங்கள், கேள்விகள் எழுந்தது. ஃபரீனாவின் கர்ப்பத்தால் வெண்பாவின் கேரக்டர் மாற்றப்பட உள்ளதாக வதந்தி பரவியது.

தாராளமாக பரவிய வதந்திகள்

தாராளமாக பரவிய வதந்திகள்

பாரதி கண்ணம்மா சீரியல் கதை மாற்றப்படலாம் அல்லது ஃபரீனாவிற்கு பதில் வெண்பா கேரக்டரில் வேறு யாராவது மாற்றப்படலாம் எனவும் கூறப்பட்டது. வெண்பா கேரக்டரில் வேறு ஒருவரை ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள் என்பதால், ஃபரீனா நடிக்க திரும்பும் வரை அவரது கேரக்டர் காட்டப்படாமல் இருக்கலாம் என்றெல்லாம் கூறப்பட்டது.

வாழ்த்திய ரசிகர்களுக்கு நன்றி

வாழ்த்திய ரசிகர்களுக்கு நன்றி

ஆனால் இந்த வதந்திகளுக்கு முற்றிப்புள்ளி வைக்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் பதிலளித்துள்ளார் ஃபரீனா. சமீபத்தில் அவர், தனக்கு வாழ்த்து சொன்ன ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், வெண்பா கேரக்டர் மாற்றப்படுமா என பலர் என்னிடம் கேட்கிறார்கள்.நான் அந்த சீரியலில் தொடர்ந்து நடிக்க மாட்டேனா என்றும் சிலர் கேட்கிறார்கள்.

Recommended Video

Bharathi kannamma Serialல் இனி நான் இல்லையா? | Farina விளக்கம்
வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்த ஃபரீனா

வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்த ஃபரீனா

வெண்பா கேரக்டர் தொடரும். அதுவும் ஃபரீனாவே தொடர்வார். கவலைப்படாதீர்கள். என்னால் முடிந்த வரை அந்த சீரியலில் தொடர்ந்து நான் நடிப்பேன். உண்மையிலேயே அந்த சீரியலில் நடிப்பதை கம்ஃபர்டபிளாக உணர்கிறேன். எனது ரசிகர்களை மகிழ்விப்பதில் எனக்கு மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

2 மாதம் பிரேக் எடுப்பேன்

2 மாதம் பிரேக் எடுப்பேன்

பிரசவத்திற்கு 2 மாதங்களுக்கு முன்பு தான் பிரேக் எடுத்துக் கொள்வேன். அதுவரை தான் தொடர்ந்து நடிக்க உள்ளதாக உறுதி அளித்துள்ளார் ஃபரீனா. இவர் உபாயத் ரஹ்மான் என்பவரை 2017 ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X